தமிழக விவசாயிகள் வேதனை எரிமலைமீது அமர்ந்து மகுடி வாசிக்கவேண்டாம் மத்திய பி.ஜே.பி. அமைச்சர்
தமிழர் தலைவர்
ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
உச்சநீதிமன்றம் அறுதியிட்டு தீர்ப்புக் கூறிய பிறகும், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய பி.ஜே.பி. அமைச்சர், தமிழக விவசாயிகளின் வேதனை என்னும் எரிமலைமீது ஏறி நின்று மகுடி வாசிக்க ஆசைப்படவேண்டாம் என்று எச்சரித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
அண்மையில் 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக அளித்த 500 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், ஒரு முக்கிய தீர்வு என்ன?
உச்சநீதிமன்றத்தின் திட்டவட்ட தீர்ப்பு
இத்தீர்ப்புக் கிடைத்த ஆறு வாரங்களுக்குள் ஏற்கெனவே நடுவர் மன்றம் தந்த இறுதித் தீர்ப்பில் கூறியபடி, காவிரி மேலாண்மை வாரியத்தையும் (Cauvery Water Management Board) காவிரி ஒழுங்காற்று குழு(Regulatory Commissions - அதிகாரிகளைக் கொண்டது) இவர்களை நியமித்து, ஏற்கெனவே தீர்ப்பில் தரப்பட்டுள்ளபடி அவ்வப்போது மாநிலங்கள் காவிரி நீரைப் பங்கீட்டுக் கொள்ள சுமுகமான முறையில் தீர்வினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இது உச்சநீதிமன்றத் தீர்ப்பு - இந்த கால அவகாசம் 6 வாரங்களுக்குள் என்பது இயலாத காரியம் என்று மத்திய அமைச்சர் நிதின்கட்காரி சொல்லியிருப்பது, உச்சநீதிமன்றத் தீர்ப்பினை (மத்திய அரசே) அவமதிக்கும் பெருங்குற்றம் ஆகும்!
அரசியல் உள்நோக்கம்!
கருநாடகத்திற்கு நடைபெறக்கூடிய தேர்தலை மனதிற்கொண்டே அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு இப்படி வெளிப்படையாக கருநாடகத்துக்கு ஒரு சார்பாக நடந்துகொள்வது சட்ட விரோதம்; நியாய விரோதமே!
முன்பு இதே உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு 3, 4 நாள்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறிய நிலையில், அதனை ஒப்புக்கொண்டு, பிறகு முரண்பட்டுப் பின்வாங்கிய கதையை நமது மக்கள் எளிதில் மறந்துவிடமாட்டார்களே!
மூன்று மணிநேரம் போதுமே!
ஒழுங்காற்றுக் குழுவின் அதிகாரிகளை அந்தந்த மாநிலம் நியமிக்கும்; மேலாண்மை வாரியத்தை மற்ற மாநில நீர்ப்பாசனத் துறை வல்லுநர்களைக் கொண்டு அமைப்பதற்கு மத்திய அரசு நினைத்தால், 3 மணிநேரம் அல்லது 3 நாள்கள் அல்லது 3 வாரத்திற்குள் அறிவிக்க முடியுமே! தாமதிக்க அவசியம் இல்லையே!
காவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பிரதமர் கலந்துகொண்ட அரசு விழாவில், தமிழக மக்களின் மனநிலையைப் பிரதிபலித்துக் கூறியதற்கு, அதனை மதித்து ஒரு சொல்கூட கூறாது மவுன சாமியார்போல் பிரதமர் சென்றது சரியானதுதானா? தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து பட்டை நாமம் தானா?
இப்பிரச்சினையில், விவசாயிகளின் வேதனை என்னும் எரிமலைமீது ஏறி நின்று மகுடி வாசிக்காதீர் மத்திய அரசினரே - மக்கள் உணர்வுகளுக்கு மதிப் பளியுங்கள்!
சென்னை தலைவர்
28.2.2018 திராவிடர் கழகம்.
உச்சநீதிமன்றம் அறுதியிட்டுத் தீர்ப்புக் கூறியும் - 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தயங்குவது ஏன்?
தமிழக விவசாயிகள் வேதனை எரிமலைமீது அமர்ந்து மகுடி வாசிக்கவேண்டாம் மத்திய பி.ஜே.பி. அமைச்சர்
தமிழர் தலைவர்
ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை
உச்சநீதிமன்றம் அறுதியிட்டு தீர்ப்புக் கூறிய பிறகும், 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய பி.ஜே.பி. அமைச்சர், தமிழக விவசாயிகளின் வேதனை என்னும் எரிமலைமீது ஏறி நின்று மகுடி வாசிக்க ஆசைப்படவேண்டாம் என்று எச்சரித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
அறிக்கை வருமாறு:
அண்மையில் 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமாக அளித்த 500 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், ஒரு முக்கிய தீர்வு என்ன?
உச்சநீதிமன்றத்தின் திட்டவட்ட தீர்ப்பு
இத்தீர்ப்புக் கிடைத்த ஆறு வாரங்களுக்குள் ஏற்கெனவே நடுவர் மன்றம் தந்த இறுதித் தீர்ப்பில் கூறியபடி, காவிரி மேலாண்மை வாரியத்தையும் (சிணீuஸ்மீக்ஷீஹ் கீணீtமீக்ஷீ விணீஸீணீரீமீனீமீஸீt ஙிஷீணீக்ஷீபீ) காவிரி ஒழுங்காற்று குழு (ஸிமீரீuறீணீtஷீக்ஷீஹ் சிஷீனீனீவீssவீஷீஸீs - அதிகாரிகளைக் கொண்டது) இவர்களை நியமித்து, ஏற்கெனவே தீர்ப்பில் தரப்பட்டுள்ளபடி அவ்வப்போது மாநிலங்கள் காவிரி நீரைப் பங்கீட்டுக் கொள்ள சுமுகமான முறையில் தீர்வினை நடைமுறைப்படுத்த வேண்டும்.