வெ(ற்)றியால் தலைகால் புரியவில்லை
திரிபுராவில் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸின் பாசிசம்
லெனின் சிலை உடைப்பு - லெனின் தலை கால் பந்தானது
அகர்தலா, மார்ச் 6 திரிபுராவில் சட்ட சபை தேர்தல் முடிவு வெளியான 48 மணிநேரத்திற்குள் கல்லூரி வளாகத்தில் இருந்த லெனின் சிலையை பாஜகவினர் இடித்துத்தள்ளினர்.சிலையின் தலையைபாஜகவினரும்,
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் காலால் உதைத்து விளையாடியதாக ‘திரிபுரா ரோஜ் சஞ்சா' என்ற தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.
வெற்றி வெறியாகி தங்கள் பாசிசப் புத்தியை சங் பரிவார் நிரூபித்துள்ளனர்.
திரிபுரா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று நீண்ட காலம் ஆட்சி செய்த இடதுசாரிகள் தோல்வி அடைந்தனர். இங்கு பாஜக அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமரவிருக்கிறது. தேர்தல் முடிவு வெளியான 48 மணி நேரத்திற்குள் பாஜகவினரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் தங்களின் கொடூர முகத்தைக் காட்டத் துவங்கியுள்ளனர்.
சிலை உடைப்பு - ‘பாரத் மாதா கி ஜே' கூச்சல்
பெலோனியா நகரில் தனியார் கல்லூரி வளாகத்தில் இருந்த லெனின் சிலையைபாஜகவினரும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர் களும் ஜேசிபி இயந்திரம் மூலம் இடித்துத் தள்ளினர். கடந்த 5 ஆண்டு களாக இருந்த சிலையை உடைத்தபோது ‘‘பாரத் மாதா கி ஜே'' என்று பாஜகவினர் வெறிக் கூச்சல் போட்டனர். சிலையை அகற்றியதைப் பார்த்து இடதுசாரிகள் கோபம் அடைந்தனர். பாஜகவுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
லெனின் தலை கால் பந்தானது!
லெனின் சிலையை அகற்றி அதன் தலையை துண்டித்து பந்து போன்று பயன்படுத்தி பாஜகவினர் கால் பந் தாட்டம் விளையாடினார்கள் என்று சிபிஎம் நிர்வாகி தபஸ் தத்தா தெரி வித்துள்ளார். இச்செய்தியை திரிபுரா வின் தினசரி நாளிதழான ‘ரோஜ் சஞ்ஜா' உறுதிப்படுத்தியுள்ளது. ரூ.3 லட்சத்தில் அமைக்கப்பட்ட லெனின் சிலை திரி புராவில் இடதுசாரிகளின் 21 ஆண்டு கால ஆட்சியை கொண்டாடும் விதமாக கடந்த 2013 ஆம் ஆண்டு நிறுவப் பட்டது.
மேலும் திரிபுராவில் பல்வேறு இடங் களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஏஎன்அய் செய்தி வெளியிட்டுள்ளது.
சிலை உடைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்கப்பட்டுள்ளதற்கு அக்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பாஜகவினரே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டியுள்ளனர். திரிபுரா வில் வலதுசாரி ஆதாரவாளர்களின் இந்த வன்முறை காரணமாக பதற்றம் நிலவி வருகிறது