Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லவில்லை என்பது உண்மைக்கு மாறானது

$
0
0

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கச் சொல்லவில்லை என்பது உண்மைக்கு மாறானது

கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்து அரங்கேற்றப்படும் சூழ்ச்சி

தமிழர் தலைவர் ஆசிரியர் அளித்த பேட்டி

விவேகானந்தரின் சீடர் நிவேதிதா-150 என்ற பெயரில் கல்வி நிறுவனங்களுக்கு (R.S.S.) ரத யாத்திரையா?

 

சென்னை, மார்ச் 11 காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உச்சநீதிமன்றம் சொல்லவில்லை என்று கூறுவது உண்மைக்கு மாறானது - கருநாடக மாநில சட்டமன்ற தேர்தலை முன்வைத்து சொல்லப்படும் சூழ்ச்சி என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:

சென்னை பெரியார் திடலில் நேற்று (10.3.2018) அன்னை மணியம்மையார் 99ஆம் ஆண்டு பிறந்த நாளையட்டி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றபின்னர்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:

தந்தை பெரியார் மண்

அன்னை மணியம்மையார் 99ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் நாள், உலகம் முழுவதும் மகளிர் உரிமைக்காகவும், மகளிருடைய எழுச்சி எப்படிப்பட்டது என்பதை மிகத்தெளிவாக எடுத்துக் காட்டக் கூடிய அளவிற்கும் பல்வேறு நிகழ்ச்சிகள், தமிழ் நாட்டிலும், இந்தியாவினுடைய பிற பாகங்களிலும், உலக நாடுகளிலும்கூட நடைபெற்றிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலே தந்தை பெரியார் மண்ணாக இந்த மண் மிக வேகமான ஒரு பெரு உருவத்தை அண்மையிலே எடுத்தது எல்லோருக்கும் தெரியும்.

Ôபெரியார்Õ பட்டம்

பெண்ணடிமை நீக்கிய பெரியார், பெண்களால் பெரியார் என்று அழைக்கப்பட்டவர் என்கிற பெருமைக்குரியவர். 1938இலே தந்தை பெரியார் அவர்களுக்கு சென்னையிலே ஒரு மாநாடு கூட்டி, அதிலே பெரியாருடைய தொண்டு, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தொண்டு என்று பாராட்டி, திருவாட்டி நீலாம்பிகை அம்மையார், மீனாம்பாள் சிவராஜ், டாக்டர் தருமாம்பாள் முதலியோர் இப்படி தாய்மார்கள்  பலர் மகளிர் கூட்டம் கூட்டி, 1938லேயே பெரியார் என்ற பட்டத்தை முன்கூட்டியே வழங்கினார்கள்.

அதற்குப்பிறகு பெரியார், தந்தை பெரியார் என்று அழைக்கக்கூடிய அளவிலும், அந்த தந்தை பெரியார் என்ற சொல் மத்திய அரசினுடைய கெசட்டிலேயே பதிவு செய்யப்பட்ட ஒன்றாக ஆகியிருக்கிறது என்றால், பெண்களுடைய முன்னோக்கு எப்படிப்பட்டது? நம் முடைய தமிழ்நாட்டுப் பெண்களின்,  முன்னோக்கு எத் தகையது என்பது மிகத்தெளிவாகத் தெரியும்.

அடுத்த ஆண்டு அன்னையாரின்

நூற்றாண்டு விழா!

அப்படிப்பட்ட அன்னை மணியம்மையார் அவர் களுடைய பிறந்த நாள் இந்த ஆண்டு 99. அடுத்த ஆண்டு அவருக்கு நூற்றாண்டு விழா! திராவிடர் இயக்கத்திலேயே மகளிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதற்கு அடையாளம், ஒரு சமூகப் புரட்சி - நாத்திக இயக்கத்துக்கு தலைமை தாங்கி, அதுவும் தந்தை பெரியார் போன்ற ஓர் இமாலயப் புகழ்பெற்ற தலைவரை அடுத்து, அன்னை மணியம்மையார் அவர்கள் அந்த புரட்சி இயக்கத்துக்கு, சமுதாய இயக்கத்துக்கு இன்னுங் கேட்டால், திராவிடம் என்று சொல்லக்கூடிய திராவிட இயக்கங்களுக்கெல்லாம் தாய்க்கழகமாக இருக்கக்கூடிய இந்தக் கழகத்திற்குத் தாயாக அன்னை மணியம்மையார் அவர்கள் திகழ்ந்தார்கள்.

செங்கற்பட்டு முதல் சுயமரியாதை

மாநாடு தீர்மானங்கள்

அவருடைய நூற்றாண்டு விழா அடுத்த ஆண்டு மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த கால கட்டத்திலே மகளிருக்கான பல்வேறு உரிமைகள் தந்தை பெரியார் சிந்தித்ததிலே 1929 சுயமரியாதை இயக்கத்தினுடைய முதல் மாநில மாநாடு செங்கற்பட்டிலே நடைபெற்றபோதுதான் மகளிருக்கு எல்லா வகையான வாய்ப்பும், ஆண்களுக்கு இருக்கிற உரிமை போலவே சம உரிமை வழங்கப்படவேண்டும். சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும், சம அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் தீர்மானங்களாகப் போட்டு, அதிலே ஆரம்பப்பள்ளிகளில் முழுவதும் பெண்களையே ஆசிரியர் களாக நியமிக்க வேண்டும் என்று சொன்னார்கள். அதை கலைஞர் ஆட்சி நடைமுறைப்படுத்தியது.

பெண்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று சொன் னார்கள். அதை அண்ணா, கலைஞர் ஆட்சி தொடர்ந்து, திராவிடர் இயக்க ஆட்சி தந்தை பெரியார் அவர்களுக்கு காணிக்கையாக்கப்பட்ட ஆட்சி என்ற காரணத்தாலே மிகத் தெளிவாக அதைச் சொன்னார்.

இந்தியாவிலேயே பெண்களுக்குச் சொத்துரிமையை முதலில் வழங்கிய ஒரு மாநிலம், வாக்குரிமையில் எப்படி நீதிக்கட்சி காலத்திலே 1921இலே வழங்கினார்களோ, அதே போல  சொத்துரிமையையும் வழங்கிய ஓர் ஆட்சி திராவிடர் ஆட்சிதான்.  கலைஞர் அவர்களுடைய தலை மையிலே, திமுக ஆட்சியிலே செங்கற்பட்டு மாநாட்டுத் தீர்மானத்தை விரிவாக செயலாக்கினார்.

பெண்களை அடிமைப்படுத்துவது மனுதர்மம்

இன்றைக்கு காவல்துறையிலே தலைமை, அய்ஜி, டிஜிபிவரையிலே பெண்கள் வந்திருக்கிறார்கள் என்று சொன்னால், அதற்கு அடித்தளம் கொடுத்த இயக்கம் திராவிடர் இயக்கம். தீர்மானத்தை நிறைவேற்றிய தலைவர் தந்தை பெரியார். அதை செயலிலே செய்துகாட்டிய இயக்கம் அண்ணா, கலைஞர், திராவிடர் இயக்கம் ஆகும்.

அந்த வகையிலே ஓர் அமைதிப்புரட்சி, ரத்தம் சிந்தாத புரட்சி, ஓர் அறிவுப்புரட்சியாக வந்தது. காரணம், மனு தர்மம் கோலோச்சிய இந்நாட்டில், பெண்கள் எந்தக் காலத்திலும் சுதந்திரத்துக்கோ, சமத்துவத்துக்கோ லாயக்கானவர்கள் கிடையாது என்பது மனுதர்மத்தினுடைய வாசகம்.

பெண்ணுரிமையில் தமிழ்நாடுதான் இந்தியாவுக்கே வழிகாட்டி

அந்த அடிப்படையில்தான் இன்றைக்கும்கூட, பெண் களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் பல துறைகளிலே குறைந்திருக்கிற காலகட்டத்திலே, இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் வழிகாட்டி.

அப்படிப்பட்ட இந்தக் காலகட்டத்திலே, தமிழ்நாட்டில் பெண்கள் இப்போது கல்லூரிக்குப் போகும்போது பாது காப்பில்லை. பெண்கள் பணிக்குச் செல்லும்போது பாதுகாப் பில்லை. பெண்களிடம் வன்முறை அல்லது முரட்டுத் தனங்கள் கூடிவருவது வருந்ததத்தக்கது கண்டிக்கத்தக்கது.

உரிமைகள் அல்லது சுதந்திரம் என்பதைக்கூட, தவறாக எதை வேண்டுமானாலும் செய்யலாம், அதற்கு உடன்படாவிட்டால், எப்படி வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்கிற அளவிற்கு இளைஞர்கள் தவறான போக்குக்கு போவதைக்கூட, அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

இன்னமும் ஆணாதிக்கத்தினுடைய சின்னம், அதனுடைய குரூரம் பல்வேறு ரூபங்களிலே, அடித்தளத்திலே இருக்கிறது  பெரியாரின் பெண்ணுரிமை இயக்கத்தில், அன்னை மணியம்மையார் போன்றவர்கள் இதற்காகப் பாடுபட்டு, ஒரு புரட்சித்தாயாக இருந்து மிகப்பெரிய ஒரு நிலையை உருவாக்கினார்.

ÔஇராவணலீலாÕ போராட்டம்

ÔஇராவணலீலாÕ என்று கலைஞர் அவர்கள் ஆட்சிக்காலத்திலே அன்னை மணியம்மையார் அவர்கள் நடத்தினார் என்பது ஒரு பெரிய சிறப்பு. அண்ணா, கலைஞர் போன்றவர்கள் எல்லாம் பல கட்டுரைகளை அதற்கு முன்னாலே எழுதியிருந்தார்கள்.

வடநாட்டிலே நம்முடைய உணர்வுகளையெல்லாம் கொச்சைப்படுத்துகின்ற வகையிலே, இராமனுக்குச் சிறப்பு  செய்வதாகக் கூறிக் கொண்டு ராவணனை எரிக்கிறார்களே, இது நியாயமா? என்று எழுதியிருக்கிறார்கள். அண்ணா எழுதியிருக்கிறார், கலைஞர் எழுதியிருக்கிறார். அன்னை மணியம்மையார் ராவணலீலா என்பதை நடத்தி இதை செய்தார். இதில் ஒரு விசித்திரம் என்னவென்றால், அது கலைஞர் ஆட்சிக்காலத்தில் நடந்தபோது, அம்மா அவர்கள் சொன்னார்கள், எங்களைக் கைது செய்யுங்கள், ஆட்சிப்பொறுப்பிலே இருக்கக்கூடிய நீங்கள் மத்திய அரசினுடைய கட்டளைப்படி கைது செய்யுங்கள். நாங்கள் எங்களுடைய கொள்கையை செய்கிறோம் என்று இரண்டு பேரும் இரண்டு கடமைகளைச் செய்தார்கள்.

அதிலே கொள்கையையும் விட்டுக்கொடுக்கவில்லை, கடமையையும் அவர்கள் ஆற்றினார்கள் என்கிற விசித்திரம், திராவிடர் இயக்கம் எப்படி ஆட்சி செலுத்துகிறது என்பதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.

காவிரி மேலாண்மை வாரியம்

உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி கொடுத்த இறுதித் தீர்ப்பு, இதற்கு முன்னால் 2007இல் நம்முடைய வேண்டுகோளை ஏற்று சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் நடுவர் மன்றத்தை அமைத்தார். அதனால்தான் நாம் இடைக்கால நிவாரணமாக 205 டி.எம்.சி. தண்ணீர் போன்றவைகளைப் பெற்று அது தொடர்ந்து நடந்தது.

கருநாடகா தொடக்கத்திலிருந்தே, சண்டித்தனமும், ஒத்துழையாமையும் செய்து கொண்டு, குறுக்குசால் போட்டுக்கொண்டே இருந்தது. அந்த காலகட்டங்களையெல்லாம் தாண்டி, கடைசியிலே அவர்கள் இறுதித் தீர்ப்பைக்கூட,        2007இலே கொடுத்த இறுதித்தீர்ப்பை, செயல்படுத்தாமலே  காலம் தாழ்த்திக்கொண்டு வந்தார்கள். பிறகு, தமிழ்நாடு அரசு தெளிவாக வழக்கு போட்ட நேரத்திலேதான், அதில் அதிமுக அரசு என்றாலும் பாராட்ட வேண்டியதுதான் வழக்கைப் பொருத்தவரையிலே. இந்த இயக்கம் என்பது ஒரு தொடர்ச்சி. அந்த வகையிலேதான், திராவிட இயக்கம் என்ன செய்தது? திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று புரியாமல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். திராவிடத்தால் விழுந்தோமா? எழுந்தோமா? உரிமை பெற்றோமா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு

அந்த வகையிலே உச்சநீதிமன்றத் தீர்ப்பு 16ஆம் தேதி வந்திருக்கிறது. அதிலே தெளிவாகவே சொல்லிவிட்டார்கள். ஆறு வாரத்துக்குள்ளாக ஏற்கெனவே பரிந்துரைத்த தெளிவான நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல், அதிலே நதிநீர் பங்கீட்டையெல்லாம் அதிகாரிகள் ஒழுங்குபடுத்தக்கூடிய ஒழுங்காற்றுக்குழு (Regulation Commission இந்த இரண்டையும் அமைக்க வேண்டும்.

இதில் எப்படியாவது அந்தந்த மாதங்களுக்குரிய நீர் பங்கீடு தாமதமானால், அதை ஒழுங்குபடுத்துவதற்கு Central Water Commission
அமைக்கக்கூடிய அதையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக கொடுத்திருக்கிறார்கள். கொடுத்துவிட்டு, கடைசியாக இதை விவரிக்கிறபோது அந்தத் தீர்ப்பிலே அவர்கள் குறிப்பிடும்போது, இந்தத் திட்டத்தை Scheme
என்கிற வார்த்தையைப் போட்டிருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை ஆறு வாரங்களுக்குள்ளாக செய்து தீரவேண்டும். யார்? மத்திய அரசு இதை கடைப்பிடிக்க வேண்டும்.

இதுதான் அந்தத் தீர்ப்பினுடைய ஒரு பகுதி.

When we say so, we also categorically Conway the need based monthly release

ஒவ்வொரு மாதமும்,  காவிரி டெல்டாவுக்கு தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர், தண்ணீர் இல்லாமல் பயிர்கள் காய்கின்றன.

ஆகவே,  நாங்கள் சொல்வதை மரியாதை காட்டி உடனே செய்யவேண்டும். நீதிமன்றம் சொல்கிறது.

கருநாடகா ஒத்துழையாமை செய்ய முடியாது. கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு, கடைசியாக ஒன்றை சொல்லியிருக்கிறார்கள்

எல்லோருக்கும் அடித்தளத்தை, மத்திய அரசு உள்பட எல்லோருக்கும் கோடிட்டுக் காட்ட வேண்டிய மிக முக்கியமான பகுதி

It is hereby way clear that no extension shall be granted for framing the scheme.

ஆறு வாரம் என்று சொல்லியிருக்கிறார்கள் அல்லவா? எந்தக் காரணத்தை முன்னிட்டும் இதை நீட்ட முடியாது. On any groun எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்த கால அவகாசத்தை ஆறு வாரம் என்பதை நீட்ட முடியாது என்று தெளிவாக சொன்னார்கள். இப்போது மூன்று வாரம் ஓடிப்போய்விட்டது.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தெளிவாக எடுத்துச்சொல்லி, இவர்கள் கூட்டத் தயங்கிய நேரத்தில் 23ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டுவதாக அவரே அறிவித்த உடனே, 22ஆம் தேதி நடத்துகிறோம் என்றார்கள். அவருடைய பெருந்தன்மை, ஜனநாயக உணர்வால், சரி  அப்படியானால், நாங்கள் அறிவித்த கூட்டத்தை ரத்து செய்கிறோம். எங்களுக்கு வேண்டியது அரசு அனைத்துக்கட்சிக்கூட்டம் கூட்டவேண்டும், விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று உடனே வரவேற்றார்.

அதிலே ஒருமனதாக தீர்மானம் போட்டு, அந்த தீர்மானத்தை தமிழ்நாட்டு முதலமைச்சர், பிரதமர் வந்திருக்கிறபோது சொல்லுகிறார். பிரதமர் வாயே திறக்கவில்லை. அதைப்பற்றி மூச்சு விடாமல் வேறு எதையோ பேசிவிட்டுப்போய்விட்டார். அப்போதும் இங்கே இருக்கிற அனைத்துக்கட்சித் தலைவர்களையும் சந்திக்கவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறார். ஆனால், சந்திப்பதற்கு அவர் தயாராக இல்லை. தமிழக அமைச்சரைப் பார்த்து, நீர்வளத்துறை அமைச்சர் கட்காரியை பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறார். அவர் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே அவமதிக்கின்ற வகையிலே ஆறு வார கால அவகாசத்துக்குள்ளாக முடியாது என்று சொல்லுவது இருக்கிறதே, அது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கின்ற குற்றத்துக்கு உள்ளாகின்ற அரசமைப்புச்சட்ட விரோத நடவடிக்கையாகும். மத்திய அமைச்சர்களாக இருந்தாலும், மாநில அமைச்சர்களாக இருந்தாலும், சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும், அவர்கள்  பிரமாணம் எடுத்துக்கொள்வது அரசமைப்புச்சட்டப்படி.

உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு. இது மாற்றப்பட முடியாத தீர்ப்பு 15 ஆண்டுக்காலத்துக்கு என்று அவரே சொல்லியிருக்கிறார்.

இதிலே தேவகவுடா அவர்கள் ஒரு செய்தியை சொன்னதாக ஏடுகளில் வந்திருக்கிறது. என்ன சொல்லியிருக்கிறார் என்றால், நிதின் கட்காரி எங்களிடம் மறு ஆய்வு மனு போடுங்கள் என்று யோசனை சொன்னார் என்று இருக்கிறது.

மத்திய அமைச்சரே, இப்படி யோசனை சொல்லிக்கொடுக்கிறார் என்பதை முன்னாள் பிரதமராக இருந்த, முன்னாள் முதல்வராக இருந்த கருநாடகத்தைச் சார்ந்த தேவகவுடா சொல்லுகிறார். இது  ஏடுகளிலே வந்திருக்கிறது.

மத்திய  பாஜக அரசின் தேர்தல் கண்ணோட்டம்

ஆகவே, மத்திய அரசு தேர்தலை குறிவைத்துக்கொண்டு, கருநாடகத் தேர்தலைக் குறிவைத்துக்கொண்டு, எப்படியாவது இதை தவிர்த்துவிட வேண்டும் என்று அவர்கள், கருநாடகத்தை திருப்தி செய்தால், அங்கே தங்களுககு வெற்றி வாய்ப்பு இருக்கும் என்று இதை வைத்துக்கொண்டாவது, பாருங்கள் நாங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று சொன்னாலும்கூட, நாங்கள் செய்ய வில்லை என்று சொல்லி வாக்கு வங்கி அரசியலுக்கு, அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு திட்டத்தைக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றும் சேர்ந்த திட்டம்

இப்போது இன்னும் ஒரு பேச்சு அடிபடுகிறது. என்ன என்று சொன்னால், இப்படி இவர்கள் துவக்கி ஏதோ முதல் கட்டம் பேசுவதுமாதிரி ஒன்பதாம் தேதி கூட்டம் நடந்து, அந்த ஒன்பதாம் தேதி கூட்டத்திலே காவிரி மேலாண்மை வாரியம் என்று அதிலே இல்லையே அந்த வாசகம் என்று மத்திய அரசு சார்பிலே சொல்லப்பட்டிருக்கிறதே, முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதாகும்.

ஸ்கீம் (திட்டம்) என்று சொன்னால், மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு, இதில்மாநில வாரியாக நீர்ப்பங்கீட்டுக்கொடுப்பதிலே எந்த விதமான சிக்கல் வந்தாலும் சந்தேகத்தை தீர்க்கும் வகையிலே மத்திய நீர்வள ஆணையம் (Central Water Commision) இந்த மூன்றும்  சேர்ந்ததுதான் அந்த திட்டம் என்பதற்கு அடையாளம்.

எனவே, தெளிவாகவே இருக்கிறது. நான் தீர்ப்பைப் படித்துக்காட்டினேன் எந்த காரணத்தை முன்னிட்டும் கால அவகாசத்தை நீட்ட முடியாது.

இன்னும் சொல்வதென்றால், அவர்கள் திட்டம், நோக்கம் என்னவென்றால், இன்னும் சில நாள்களிலே அல்லது ஒரு வாரத்துக்குள்ளாக கருநாடகத்துக்கு தேர்தல் அறிவிக்கப்படவிருக்கிறது. தேர்தல் வந்துவிட்டது ஆகவே, இதைச் செய்வதற்கு வாய்ப்பில்லை, இது தள்ளிப்போகும். தேர்தல் நடந்து பிற்பாடு சொல்லலாம் என்று ஒரு கருத்து எங்கு பார்த்தாலும் பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

கருநாடகத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டாலும்... ஓர் எச்சரிக்கை!

அதையும் சேர்த்து அதற்கும் பதில் சொல்லுகிறோம். தேர்தல் அறிவித்தாலும்கூட, கருநாடகத்தில் நடைபெறப்போகின்ற தேர்தல் தேதி அறிவித்தாலும்கூட, இது ரொம்ப முக்கியம். தேர்தல் தேதி அறிவித்தால்கூட, சட்டப்படி, இந்த ஆறு வார கெடுவை செயல்படுத்துவதில் எந்த சட்டத் தடையும் கிடையாது. ஏனென்றால், இது கருநாடகத்தை மட்டும் பொறுத்த விஷயம் அல்ல.

ஒரு மாநிலத்திலே தேர்தல் அறிவிப்பு வந்த பிற்பாடு, அந்த மாநிலத்துக்குரிய பிரச்சினையை வேண்டுமானால் அவர்கள் நிறுத்தி வைக்கலாமே தவிர, இது அந்த மாநிலத்துக்கு மட்டும் உள்ள பிரச்சினை அல்ல. கேரளா, கருநாடகம், தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்தது. இந்த மீதி மூன்று மாநிலங்களில் எந்த தேர்தலும் கிடையாது.

ஆகவேதான், இதைக்காட்டி சொல்லலாம் என்று இருக்கக்கூடாது. நம்முடைய அமைச்சர்கள் ஏமாந்துவிடக் கூடாது. அரசு இதிலே கவனம் செலுத்த வேண்டும். எதிர்க்கட்சிகளும் இந்த பிடிப்பான இந்த செய்தியை பரவலாக எடுத்துச் சொல்ல வேண்டும். ஊடகங்களும் இதைப் பரப்பவேண்டும்.

இதைக்காட்டி, அவர்கள் ஒளிந்துகொள்வதற்கு நாம் அனுமதிக்கக்கூடாது. இது முக்கியமானது.

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.




காவிரி நீர்ப் பிரச்சினை:

அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுக!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

விவேகானந்தரின் சீடர் நிவேதிதா-150 என்ற பெயரில் கல்வி நிறுவனங்களுக்கு (R.S.S.) ரத யாத்திரையா?

காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறுவாரங் களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக ஆணையிட்டுள்ள நிலையில், முழுப் பூசணிக்காயை கைச்சோற்றில் மறைப்பது போல, உச்சநீதிமன்றம் அவ்வாறு கூறவில்லை என்று கருநாடக  மாநில அரசு கூறுவதும், அதனை மத்திய அரசின் நீர்வளத்துறை செயலாளர் அதற்கு ஒத்து ஊதுவதும் கண்டிக்கத்தக்கது.

தமிழக அமைச்சரவை அளவில் இதுகுறித்து ஆலோசனை செய்வது ஒருபுறம் இருந்தாலும் உடன டியாக அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டுமாறு முதல்  அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள் கிறோம்.

நீதிமன்றத் தீர்ப்பும், நியாயமும் நம் பக்கம் உள்ள நிலையில், பாதிக்கப்படுபவர்களாக நாம் இருப்பது வேதனைக்குரியதாகும்.

இதில் காலதாமதம் செய்யாமல் அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனே கூட்டுமாறு முதல் அமைச்சரை வலியுறுத்துகிறோம்.

- கி. வீரமணி

சென்னை                                                 தலைவர்,

11.3.2018                                                திராவிடர் கழகம்


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles