Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

மதவாத பா.ஜ.க.வை அதிகாரத்திலிருந்து வீழ்த்திட உ.பி. பார்முலாவைப் பின்பற்றுவீர்! - கி.வீரமணி

$
0
0

உ.பி., பீகார் தேர்தலில் பா.ஜ.க.வுக்குப் படு தோல்வி!

மதவாத பா.ஜ.க.வை அதிகாரத்திலிருந்து வீழ்த்திட

உ.பி. பார்முலாவைப் பின்பற்றுவீர்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

திருவெறும்பூர் உஷா சாவு; சென்னையில் அஸ்வினி படுகொலை; மலையேறச் சென்ற இருபால் இளைஞர்கள் பரிதாப மரணம்!  இனி இவை நடைபெறாமல் இருக்க அரசும் - சமூக ஆர்வலர்களும் இணைந்து செயல்படவேண்டும்

வட மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்ட தோல்விகளைத் தொடர்ந்து, இம்மாநிலங்களில் பின்பற்றப்பட்ட கூட்டணி  பார் முலாவை மற்ற இடங்களிலும் பின்பற்ற வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

பா.ஜ.க. ஓராண்டுக்கு முன்னர், முக்கிய பெரிய மாநிலங்களில் ஒன்றும், ஹிந்தி பிரதேசத்தில் முதன் மையாகவும் உள்ள மாநிலமுமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத்தில், 403 சட்டமன்ற இடங்களில் 312அய் கைப்பற்றியது.

வெற்றி மிதப்பில் பா.ஜ.க.

அந்த வெற்றி மிதப்பில், அவர்களில் ஒருவரான சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து கூட எவரையும் முதலமைச்சர், துணை முதலமைச்சர் பதவிக்கு பா.ஜ.க. நிறுத்தாமல், பிரதமர் மோடியும் அமித்ஷாவும், கோரக்பூர் தொகுதியில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் அமர்ந்த யோகி ஆதித்யநாத் என்ற மடத்து சாமியாரை முதலமைச்சர் பதவியிலும், துணை முதல்வராக நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்ற (பூல்பூர் நாடாளுமன்றத் தொகுதி) கேசவ் பிரசாத் மயூராவையும் ஆக்கினார்கள்!

இடைத்தேர்தலில் படுதோல்வி

இவர்களின் தலை தெறித்த ஹிந்துத்துவா வெறித்தன தேர்வு ஆட்டம் உ.பி. ஆட்சியில் தலைகால் தெரியாமல் இந்த ஓராண்டில் நடைபெற்று வரும் அவல நிலையில், இந்த இரு தொகுதிகளுக்கும் ஏற்பட்ட இடைத்தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வி அடைந்தது. மோடி, ஆதித்யநாத் செல்வாக்கு நாடு முழுவதும் உ.பி. முதல் அனைத்து இடங்களிலும் தேய்ந்து வருகிறது என்பது சுவரெழுத்து எழுதுவதைப்போல் காட்டியுள்ளது!

பா.ஜ.க. கோட்டை நொறுங்கியது!

கோரக்பூர் தொகுதி யோகி ஆதித்யநாத்தின் ஹிந் துத்துவா கோட்டை என்று அவர் தொடர்ந்து 4, 5 முறை வெற்றி பெற்றதால் தம்பட்டம் அடிக்கப்பட்டது.

அங்கு பா.ஜ.க.வால் நிறுத்தப்பட்ட வேட்பாளரான பார்ப்பனர் ஒருவரை சமாஜ்வாடி கட்சி தோற்கடித் துள்ளது. உபேந்திர சிங் சுக்லா என்ற பா.ஜ.க. வேட்பாளரை 21,961 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தவர் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் பிரவீன் நிஷாத் என்ற பிற்படுத்தப்பட்டவர் ஆவார்.

அதேபோன்று, உத்தரப்பிரதேச மாநிலம் பூல்பூர் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி வேட்பாளர் நாகேந்திர பிரதாப் சிங் படேல், பா.ஜ.க. வைவிட 59,613 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

எனவே அங்கு சமூகநீதி - இரு தொகுதிகளிலும் வென்றுள்ளது.

உ.பி.யில் இந்த ஓராண்டில் யோகி ஆதித்யநாத் என்ற சாமியார் ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, காவி எண்ணமே எங்கும் என்பதாகத் தான்தோன்றித்தனமாக நடைபெற்றதற்கு உ.பி. மக்களின் பதிலடி - ஜனநாயக ரீதியாக வழங்கப்பட்டுள்ளது.

பீகார் மாநிலம், அராரியா நாடாளுமன்றத் தொகு திக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில், போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் சராப்ரஸ் ஆலம் அய்ந்து லட்சம் வாக்குகளைப் பெற்று தன்னை எதிர்த் துப் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளரை தோற்கடித்து உள்ளார்.

மோடியின் பிரச்சாரம் - பா.ஜ.க.விற்கு இறங்கு முகத் தையே தந்துள்ளது!

வடகிழக்கு மாநிலங்களில்

பா.ஜ.க. வெற்றி பெற்றது எப்படி?

வெற்றி பெற்றதாக பீற்றிக் கொள்ளும் வடகிழக்கு மாநிலங்களில் கூட சில அரசியல் வித்தை - வியூகங்களால் அந்த வெற்றிகளை அவர்கள் பறித்துள்ளார்கள் என்பது நாட்டில் பல பேருக்குத் தெரியாது!

திரிபுராவானாலும், மேகாலயாவானாலும், நாகா லாந்தானாலும் அங்கு கூட்டணி - வித்தையே! காங்கிரசு கட்சி விரைந்து அரசியல் முடிவுகளை எடுக்கத் தயக்கம், மற்றவைகளால்தான் அந்த வெற்றித் தோற்றம் பாஜகவுக்குச் சென்றது.

மேகாலயாவில் இரண்டே இரண்டு பாஜக எம்எல்ஏக்கள் வெற்றி பெற்ற நிலையில் மற்றக் கட்சி களை இணைத்து பாஜகவின் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது!

திரிபுராவில் கம்யூனிஸ்ட் தோல்வி ஏன்?

திரிபுராவில்கூட கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சேராமல் தனியே நின்றது - இது சரியான அணுகு முறையாக இந்தச் சூழலில் தெரியவில்லை. இதனை பா.ஜ.க. பயன்படுத்திக் கொண்டது.

நாகாலாந்தில் மொத்தம் 60 தொகுதிகளில் 20 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. போட்டியிட்டது. மற்ற 40 தொகுதிகளை என்.டி.பி.பி.க்கு விட்டுக் கொடுத்தது. என்.டி.பி.பி. கட்சிக்கு 15 இடங்களும், பாஜகவுக்கு 11 இடங்களும் கிடைத்தன.

மொத்தம் 60 இடங்களில் 11 இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க. மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்தது.  மேகாலயாவில் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது.

நாகாலாந்தில் 60 இடங்களில் 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று பா.ஜ.க. ஆட்சி அமைத்துள்ளது.

திரிபுராவில்கூட, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்), காங்கிரசு கட்சி, அய்.பி.எஃப்ஃடி கட்சியினர் பெற்ற வாக்குகளைக் கூட்டி, அதில் பா.ஜ.க.வின் ஓட்டுக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால்  அதன் தோல்வி முகம் புரியும்.

பீகார் மாநிலத்திலும் ஜெஹனாபாத், பபுவா சட்ட சபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் ஜெஹ னாபாத் தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளமும் (லாலு பிரசாத் யாதவின் கட்சி), பபுவா தொகுதியில் பா.ஜ.க.வும் வெற்றி பெற்றுள்ளன.

இதேபோல் தான் முன்பு கோவா போன்ற மாநிலங் களிலும் ஆளுநர்களின் தயவால் ஆட்சிகளை பா.ஜ. ஆட்சி அமைத்தது!

மணிப்பூரில் ஆளுநரைத் துணை கொண்டு ஆட்சி அமைத்த கோமாளித்தனத்தை என்னவென்று சொல்லுவது?

மோடியின் செல்வாக்கு தேய்கிறது!

உ.பி.யிலும், பீகாரிலும் 3 தொகுதிகளில் பா.ஜ.க.விற்கு விழுந்த பலத்த அடி சாதாரணமானதல்ல.

1. பிரதமர் மோடி செல்வாக்கு நாளும் குறைந்து தேய்ந்து வருகிறது.

2. எதிர்க்கட்சிகள் உ.பி. போல ஒருங்கிணைந்து விட்டுக் கொடுத்து, மதவெறி அமைப்பான பா.ஜ.க.வைத் தனிமைப்படுத்தித் தோற்கடிக்க வேண்டும்.

3. பிரதமர் மோடி 2014இல் தந்த வாக்குறுதிகளில் எதனையும் உருப்படியாக நிறைவேற்றவில்லை என்பது  அனைத்துத் தரப்பினருக்கும் புரிந்து வருகிறது. மக்களின் கோபம் பாஜகவிற்கு தோல்வியை - முகத்தில் அறைவதைப் போல - தொடர்ந்து இடைத்தேர்தலில் ராஜஸ்தான், ம.பி. போன்ற மாநிலங்கள் உட்பட பரவலாக நாடு தழுவிய அளவில் தந்து கண்விழிக்கச் செய்து வருகிறது.

தேவை உ.பி. பார்முலா!

பணமதிப்பு இழப்புத் திட்ட தோல்வி, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு என்ற கொதிநிலை, வங்கிகளில் பல லட்சம் கோடி ரூபாய்கள் பெரும் கார்ப்பரேட் முதலாளி நீரவ் மோடி போன்றவர்கள் சுருட்டல். அதேநேரத்தில் அப்பாவி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வழி செய்யாமை, இளைஞர்களிடையே வேலையில்லாத் திண்டாட்டம், புதிய வேலைவாய்ப்புகள் இல்லாமை என்பதைவிட, இருக்கும் வேலை வாய்ப்பும்கூட பறிக்கப்படும் வேதனை; வாட்டிடும் வறுமை நிலை - இவைகளாலும், வெளிப்படையாக; சுதந்திரம் பறிப்பு, ஹிந்துத்துவாவைப் புகுத்தி தாழ்த்தப்பட்ட, இசுலாமிய, கிறித்தவ அடிப்படை உரிமைகளைப் பறித்து, வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ள நிலை, சமூக நீதிக்குச் சவக்குழி ஆகிய அத்தனையும்தான் உண்மைகளாகும். எதிர்க்கட்சிகள் வாக்குகள் சிதறாவண்ணம். உ.பி. பார்முலாவை கைக் கொள்ளுவது அவசியம் - அவசரம்!

பா.ஜ.க. - மோடி - ‘கவுண்ட் டவுன்‘ - இறங்கு முகம் துவங்கி விட்டது!

வெற்றி பெற்றவர்களுக்கும், கட்சித் தலைவர் களுக்கும் நமது வாழ்த்துகள்!

 

கி.வீரமணி
தலைவர்        
திராவிடர் கழகம்.


சென்னை
15.3.2018


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles