Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பொறுப்பேற்று - பதவி விலகியதை மத்திய அரசு பாடம் படிக்கட்டும்!

$
0
0

உத்தரகாண்டைத் தொடர்ந்து
அருணாசலப்பிரதேச ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கைக்கு
உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு எதிராக அதிரடித் தீர்ப்பு

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பொறுப்பேற்று - பதவி விலகியதை மத்திய அரசு பாடம் படிக்கட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள  அறிக்கை

தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வும்- நீதிபதிகள் போக்கும் - நிலைமையும்!

உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கலைத்து குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்தபோது உச்சநீதிமன்றம் மத்திய அரசின்  முடிவுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கி, மறுபடியும் அங்கு காங்கிரஸ் ஆட்சியே நடக்கும்படி செய்தது. இப்பொழுது அருணாசலப்  பிரதேசத்திலும் அதே வகையான தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியுள்ளது. மத்திய அரசுக்குத் தொடர்ந்து அதிரடி தீர்ப்பின்மூலம் உச்சநீதிமன்றம் பாடம் கற்பித் துள்ளது.

இதற்குப் பிறகாவது இத்தகைய “ஜனநாயகப் படுகொலை'' யில் மத்திய பி.ஜே.பி. அரசு  ஈடுபடக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நேற்று (13.7.2016) உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு, அரசமைப்புச் சட்டம் 356 பிரிவினைப் பயன்படுத்தி காங்கிரஸ் ஆளும் அருணாசலப் பிரதேச ஆட்சியை - ஆர்.எஸ்.எஸ். வழிநடத்தும் மத்திய பா.ஜ.க. அரசு கலைக்கச் செய்து, ஜனநாயகப் படுகொலையைச் செய்தது. இந்த நிலையில், மீண்டும் 2015 டிசம்பரில் அங்கிருந்த (காங்கிரஸ்) அமைச்சரவையே பதவியில் அமர்த்தப்படவேண்டும் என்று உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு கூறிவிட்டது. நாட்டில் உள்ள அத்துணை ஜனநாயக விரும்பிகளாலும் இது பெரிதும் வரவேற்கப்படுகிறது!

பா.ஜ.க.விற்கு மட்டும்தான் இது விசித்திரமான தீர்ப்பாகத் தென்படுகிறது!

உத்திரகாண்டைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்திலும் மத்திய அரசுக்கு அடி!

முன்பு இதேபோல், உத்தரகாண்ட் மாநிலத்திலும் காங் கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கி, ‘குதிரைப் பேரம்‘ நடத்தி அங்குள்ள ஹரிஷ்ராவத் தலைமையிலான  அரசு முறைப்படி தன் பலத்தை நிரூபிப்பதற்கு முன்பே, அரைவேக்காட்டுத்தனமாக நீக்கியது செல்லாது என்று மத்திய -பிரதமர் மோடி அரசின் முகத்தில் அடித்ததைப்போல தீர்ப்பு தரப்பட்டது!

இரண்டாவதாக அருணாசலப்பிரதேசத்தில் இருந்த காங்கிரஸ் அரசினைக் கவிழ்த்து,  அங்கும் காங்கிரஸ் உறுப் பினர்களை கட்சி மாறச் செய்து, அங்குள்ள காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்தது செல்லாது என்று நேற்று தீர்ப்பு வெளிவந்துள்ளது!

அவமானப்பட்டதேன்?

இந்திய அரசியல் சட்டத்தின் 356 ஆம் பிரிவுபற்றிய எஸ்.ஆர்.பொம்மை வழக்கில், உச்சநீதிமன்றம் முன்பு வழங்கிய தீர்ப்பில் மிகத் தெளிவான நடைமுறைகள் எப்படி பின்பற்றப்பட வேண்டும் என்பதை நெறிமுறைப்படுத் தியுள்ளதையும் அலட்சியப்படுத்தி, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு நடந்துகொண்டதன் விளைவு இந்த அவமானத்தை அவர்கள் சுமந்து தீரவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுவரை 356 ஆம் பிரிவு, இந்தியாவில் 120 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது!

ஆனால், பெரிதும் தவறாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. இப்படி ஒரு பிரிவு தேவையா என்ற சிந்தனையையே நாட்டில் விவாதப் பொருளாக்கியும் விட்டுள்ளது!

இதற்குக் காரணமான அத்துணைப் பேர்களும் ஆளுநர், பிரதமர் - அமைச்சரவை, பிறகு கையெழுத்திட்ட குடியரசுத் தலைவர் உள்பட ஜனநாயக ரீதியில் பொறுப்பேற்க வேண் டாமா?

பிரிட்டன் பிரதமரைப் பாரீர்...!

அய்ரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று 52 விழுக்காட்டினர் வாக்களித்த நிலை யில், இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் தனது நிலைப் பாட்டுக்கு எதிரான கருத்தை மதித்து, யாரும் கேட்காமலேயே, தான் பதவி விலகுகிறேன் என்று கூறி, அடுத்த பிரதமருக்கு வழிவிட்டுச் சென்றதோடு, அந்த 10, டவுனிங் தெரு, பிரதமர் அலுவலகத்தில் வளர்ந்த பூனைக்குட்டியைக்கூட ‘அது அரசின் சொத்து, அதை என் வீட்டிற்கு அழைத்துச் செல்லமாட்டேன்' என்று கூறியுள்ளாரே! என்னே ஜனநாயக மாண்பு!

இந்த மக்களாட்சியின் உயர்ந்த மாண்பையும் பார்த்து, இந்த ‘‘ஞானபூமி’’யில் நடக்கும் ஜனநாயகப் படுகொலைகளையும் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?

அவரை முன்மாதிரியாகக் கொண்டு பாடம் படிக்கவேண் டாமா?

ஜனநாயகத்தில் தவறான முடிவுகளின் பாரதூர விளைவு களுக்கும் பொறுப்பேற்காமல் ‘ஹிதோபதேசம்' செய்வது அசல் கேலிக்கூத்து அல்லவா?

இனிமேலாவது அவலங்கள்
தொடராதிருக்கட்டும்!


இனிமேலாவது இப்படிப்பட்ட ஜனநாயக அவலங்கள் தொடரவேண்டாம்! உச்சநீதிமன்றம் எடுத்த ஜனநாயகப் பாடம் அருமையானது - பாராட்டத்தகுந்தது!

கி.வீரமணி   
தலைவர்,  திராவிடர் கழகம்.

சென்னை
14.7.2016


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles