காரணம் குலக்கல்வித் திட்டத்தை ஒழித்தவர்கள் அவர்கள், இந்தக் காவி மய திட்டத்தையும் ஒழித்திட வழி செய்யுங்கள்!
‘‘பொதுப் பள்ளிக்கான மாநில மேடை’’ கருத்தரங்கில்
த.மு.எ.க. துணைத் தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் கருத்துரை
சென்னை, ஜூலை 15 தேசிய புதிய கல்வித் திட்டம் ஒன்றை மத்திய பி.ஜே.பி. அரசு திணிக்கிறதுஅதனை ஒழித்துக்கட்ட, குலக்கல் வியை அன்று ஒழித்துக்கட் டிய தந்தை பெரியார் வழி வந்த தலைவர் ஆசிரியர் வீரமணி அவர்கள் வழி காட்டவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் துணைத் தலைவர் வழக்குரைஞர் ‘சிகரம்’ செந்தில்நாதன் அவர் கள்.
‘பொதுப் பணிக்கான மாநில மேடை’ என்றஅமைப் பின் சார்பில் நேற்று (14.7.2016) மாலை சென்னை பல்கலைக் கழக பவள விழா மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள்சங்க துணைத் தலைவர்வழக்கு ரைஞர் Ôசிகரம்Õ ச.செந்தில் நாதன் தலைமையுரையில் பேசியதாவது:
தமிழ்நாட்டுக்கே தலைவர்
நான் இந்த நிகழ்ச்சிக் குத்தான் தலைவர். ஆனால், தமிழ்நாட்டுக்கே தலைவர் இங்கே வந்து வீற்றிருக்கிறார் ஆசிரியர் அய்யா வீரமணி அவர்கள்.
அய்யா அவர்கள் பேச வேண்டும். இந்தப் பிரச்சினை ஓர் அரசியல் பிரச்சினையாக, சமூகப் பிரச்சினையாகமாற வேண்டும் என்றஆவலில் தான் இங்கே இருக்கின்றவர் கள் எல்லாம் கூடி இருக் கின்றோம்.
காலையிலிருந்து நிகழ்ச்சி நடைபெறுகின்றது. மதியத்தில் பல பேர் பேசினார்கள். ஒவ்வொருவரும் சிறப்பாக நல்ல வகையிலேகருத்து களையெல்லாம்எடுத்து வைத்தார்கள். அவற்றையெல் லாம் தொகுத்துப் பேசுவது என்பது இப்போது சாத்தி யமல்ல.
யோகா என்பது இப்போது கார்ப்பரேட் யோகாவாக மாறியிருக்கிறது. தமிழ்நாட்டில் திருமூலர், சித்தர்கள் எல் லாரும் கூட யோகப்பயிற்சி உடையவர்கள்தான். ஆனால், திருமூலர் சொல்கின்ற யோகா வேறு. இவர்கள் சொல்லுகிற யோகா வேறு. திருமூலர் சொல்லுகிற யோகா அவ்வளவு எளிமையானது அல்ல. சிரமமானது.
1976ஆம் ஆண்டு நமக்கு மிக மோசமான ஆண்டு. அது என்ன 1976 ஆம் ஆண்டு மட்டும் மோசமா? மற்றவையெல்லாம் பொற் காலமா? என்று கேட்காதீர்கள். மோசத்திலும் மோசம் மிக மோசமான ஆண்டு 1976 ஆம் ஆண்டு. அதற்கு அண்ணன் யார் என்று சொன்னால், 1975ஆம் ஆண்டு.
1975 ஆம் ஆண்டுதான் அவசர நிலை பிரகடனப்படுத் தப்பட்ட ஆண்டு. அவசர நிலை வந்தபோதுஇடது சாரிகள் எல்லாம் தலை மறைவு வாழ்க்கையை மேற் கொண்டார்கள்.
அப்போது தமிழ்நாட்டிலே இருந்தது திமுக ஆட்சி. ஓர் ஆறு மாத காலம் அந்த ஆட்சி நடத்த அனுமதிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த ஆட்சி கலைக்கப்பட்டது. அவசர நிலையை திமுக ஆட்சி எதிர்த்தது. எம்ஜிஆர் எதிர்க்க வில்லை. இந்த சூழ்நிலையில்தான், குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கிறபோதுதான் அரசமைப்புச் சட்டத்தில் 42 ஆம் திருத்தம் வந்தது. 42 ஆம் திருத்தம் மாநிலப் பட்டியலிலிருந்த கல்வியை, மாநிலத்துக்கும்,மத்திய அரசுக்குமான பொதுப்பட் டியலுக்கு கொண்டு செல் லப்பட்டது
அதை இப்போது இருக்கிற பிஜேபி அரசு நன்றாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்தக் கல்விக்கொள்கையின் சாராம்சம் என்பது ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்று சொன்னால், கல்வியை காவி மயமாக்குவது.
காவி மயமாக்குவது என்று கல்வியை அவர்கள் முடிவு செய்தால், எதிர்க்கிறவர்கள் யாராக இருப்பார்கள்? சிவப்பு சட்டை போட்டவர்கள் எதிர்ப்பார்கள். காவி மயமாவதை தமிழ்நாட்டிலே கருப்புச்சட்டை போட்டவர்கள் எதிர்ப்பார்கள்.
கல்வியை காவி மயமாக்கும்போது, தருண் விஜய் வந்து குதித்தார். திருக்குறளை, திருவள்ளுவரை வடமாநிலங்களில் எல்லாம் கொண்டுபோய் பரப்புவேன் என்று ஒரு முயற்சியை மேற்கொண்டார். அந்த முயற்சியின் பின்னாலே என்ன இருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், இப்போது கங்கைக்கரையிலே வைக்கிறேன் என்று திருவள்ளுவரை எடுத்துக்கொண்டுபோய், அங்கே இருக்கிற பூங்கா கக்கூஸ் பக்கத்திலே வைத்துவிட்டார். இதுதான் திருவள்ளுவருக்கு நேர்ந்திருக்கிற கெதி.
திருவள்ளுவரை ஏன் எதிர்க்கிறார்கள்? காவி மயமாகிற கல்விக்கொள்கையில், கீதைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கீதையை தேசிய நூலாக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
தமிழ்நாட்டிலிருந்து குரல் வருகிறது. இல்லையில்லை திருக்குறளை தேசிய நூலாக ஆக்கவேண்டும் என்று சொல்லுகிறார்கள்.
கீதையின் எதிரி திருக்குறள். எப்படி என்று கேட்டால், கீதை என்பது ஒரு சமய நூல். திருக்குறள் சமய நூல் அல்ல. திருக்குறளில் எந்தக்கடவுளையும் குறிப்பாகப் பேசவில்லை. கீதை வருணாசிரமத்தை போதிக்கின்றது. திருக்குறள் வர்ணாசிரமத்துக்கு எதிரானது.
காவி மயமாவதை எதிர்ப்பது எப்படி? என்பதுதான் நம்முன்னால் இருக்கக்கூடிய கேள்வி. அது கல்வியிலே வருகிறபோது மிகமிக ஆபத்தானது. அந்த ஆபத்தைப் புரிந்து கொண்டுதான் பிரின்சு கஜேந்திரபாபு தலைமையில் பொதுப்பள்ளிக்கான மாநில மேடை இயங்கிக்கொண்டிருக்கிறது.
ஆசிரியர் அய்யா அவர்களை நான் கேட்டுக்கொள்வதெல்லாம், இது மக்கள் இயக்கமாக மாறவேண்டும். மக்கள் இயக்கமாக என்று சொன்னால், அதிலே உங்களுக்கு முக்கியப் பொறுப்பு உண்டு. ஏனென்றால், நீங்கள் பெரியார் வழி வந்தவர்கள்.
தமிழ்நாட்டிலே இராஜாஜி குலக்கல்வித்திட்டத்தைக் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் பெரியார். அதனுடைய விளைவாகத்தான் காமராசர் முதலமைச்சராக வர முடிந்தது. காமராசர் முதலமைச்சராக வந்ததற்கு பிறகுதான், தமிழ்நாட்டிலே அரசுப்பள்ளிகள் ஏராளமாக வந்தன. கிட்டத்தட்ட அவருடைய ஆட்சிக்காலத்தில் ஆண்டுக்கு ஆயிரம் அரசுப்பள்ளிகள் என கல்வியிலே மிகப்பெரிய மாற்றத்தை காமராசர் கொண்டுவந்தார் என்று சொன்னால், அதற்குக் காரணம் பெரியார் அவர்கள்தான்.
பெரியாருடைய போராட்டம்தான் குலக்கல்வித் திட்டத்தைத் தூக்கி எறிந்தது. இப்போது, காவி வடிவத்தில் தலைதூக்கி நிற்கிறது. இதை எதிர்ப்பதற்கு பல அரசியல்கட்சிகள் முன்வந்தாலும், நீங்கள்தான் திறவுகோலாக இருக்க வேண்டும். மற்ற அரசியல் கட்சிகளுக்கெல்லாம் வாக்கு வங்கி அரசியல் கொஞ்சம் உண்டு. அதை அரசியல்வாதிகள் பார்ப்பார்கள். ஆனால், நீங்கள் சமூக இயக்கம். தமிழர்களின் நலனுக்காகப் போராடிக்கொண்டிருப்பவர்கள். தமிழர்களுடைய நலன் காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால், ஒரு தனியான பண்பாட்டுக்குரிய தமிழர்களுடைய பண்பாடு காப்பாற்றப்பட வேண்டும் என்று சொன்னால், காவி மயமாகும் கல்வியை எதிர்த்தாக வேண்டும். காவிமயமாகும் கல்வியை எதிர்ப்பதற்கு நீங்கள் என்ன சொல்லப்போகிறீர்கள், என்ன செய்யப்போகிறீர்கள் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்துக்கெண்டிருக்கிறோம். வேறு
சில இடங்களிலே பேசுவதற்கு உங்களுக்கு வாய்ப்பு
கிடைக்கும்.அதையெல்லாம் நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பயன்படுத்தி தமிழ்நாட்டுக்கு ஒரு விடிவு ஏற்படுத்த வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் உங்களுக்கு இருக்கிறது. அதை நீங்கள் வெளிப்படுத்துங்கள் என்று சொல்லி விடைபெறுகிறேன் என்று பேசினார்.