ராஜஸ்தான் பா.ஜ.க. ஆட்சியின் பச்சைப் பாசிசம்!
ஜெய்ப்பூர், ஜூலை 26 ராஜஸ்தான் மாநிலம் அல் வரில் இந்துத்துவ வெறியர்களால் அடித்து பலத்த காயமாக கிடந்த ரக்பர்கானை மீட்க வந்த காவல்துறையினரின் மெத்தனப் போக்கால் அவர் மரணமடைந்துள்ளார். இதில் நிகழ்விடத்தில் இருந்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் 4 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் காவல் துறையினரே ஒப்புதல் வாக்குமூலம் அளித் துள்ளனர்.
பசுப் பாதுகாப்பு என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த ஒருவர், காவல்துறையினருடன் இருந்தது தொடர்பான புகைப்படம் வெளியானது. அவர் காவல்துறையினருக்கு முன்பே ரக்பர்கானை தாக்கிக்கொண்டு இருந்தார். இந்துத்துவ சிந்தனை கொண்ட காவல்துறையினர் ரக்பர்கானின் கொலைக்குத் துணை போனதை காவல்துறை கண்காணிப்பாளர் மோகன் சிங், தனது குற்றம் குறித்து கேமரா முன்பு ஒப்புக் கொண்டார். மேலும் அவர் கூறும்போது, சமூகத்தின் பெரும்பான்மை மனநிலை எப்படியோ அப்படித் தான் தாங்களும் இருக்கமுடியும் என்று கூறி யிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட ரக்பர்கானை, காவல்துறையினர் முன்பு அடித்து கொடுமைப்படுத்தியது உண்மை தான். இருப்பினும் காவலர்கள் அவரை அடிக்க வில்லை. மேலும் அடித்தவர்களைத் தடுக்கவும் இல்லை. ஆகவே, காவலர்கள் தரப்பில் தவறுகள் நடந்துள்ளது உண்மைதான்'' என மாநில காவல் துறை ஆணையர் என்.ஆர்.கே.ரெட்டி கூறினார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதே பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட பஹெலுகான் விவகாரத்திலும் காவல்துறையினர் இந்துத்துவ வெறியர்களுக்கு ஆதரவாக செயல் பட்டு இறுதியில் அனைவருமே விடுதலை செய்யப்பட்டனர். விடுதலை ஆனவர்களில் பாஜகவைச் சேர்ந்த சிலருக்கு காவல்நிலையத்தில் மாலை அணிவித்து பாரட்டு தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
70 விழுக்காடு எலும்புகள் நொறுங்கின
மாட்டைகடத்தியதாக, ரக்பர்கான் இந்துத் துவவெறியர்களால்தாக்கப்பட்டு,அவர்இறப் பதற்குமுன் 4 மணி நேரங்களாக காவல் துறையினர் தேநீர்க்கடை, கோசாலா மற்றும் காவல்நிலையங்களுக்கு அவரை தூக்கிக் கொண்டு அலைந்துள்ளனர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காவல்துறையினர் கடு மையான காயமடைந்து உயிருக்குப் போராடி வந்த ரக்பர்கானை கும்பலிடம் இருந்து மீட்டு, அங்கிருந்து மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் செல்லாமல், அவருடையபசுக்களை கோசாலைக்குக் கொண்டு சென்றனர். இடையில் தேநீர் குடித்து விட்டு எந்த அவசரமும் காட்டாமல் காவல்துறையினர்இருந்துள்ளதாகவும்திடுக் கிடும் தகவல் கூறப்படுகிறது. பின், மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லும்போது அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் மெத்தனப் போக்கால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பரவலாக குற்றம் சாட் டப்பட்டு வரும் நிலையில், ரக்பர்கான் மீது நடத்திய பிரேத பரிசோதனை முடிவு கிடைத்துள்ளது.
அதில், ரக்பர்கான் உடலின் பல இடங் களில் பலத்த காயம் இருந்தது. அவருக்கு உடலுக்குள்ளேயே ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. இறக்கும் நேரத்தில் கடுமையான அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் இரும்புக் கம்பி, மரக்கட்டை போன்றவைகளால் தாக்கப்பட்ட அடையாளம் உடலில் இருந்தது. முதுகு, இடுப்பு, மார்பு, கை, கால், தாடை என உடலில் உள்ள பெரும்பாலான எலும்புகள் முறிந்துள்ளது கண்டறியப்படுள்ளது.
இந்த அதிர்ச்சியளிக்கும் சம்பவத்தில் தொடர் புடைய காவல்துறையினர் சிலரை ராஜஸ்தான் மாநில காவல்துறை தற்காலிக பணியிடை நீக்கம் செய்யதுள்ளது.
எல்லாம் கண்துடைப்புதான்.