Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

பெண்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும்!

$
0
0

ஆகமப் பயிற்சி பெற்ற அனைவருக்கும் அர்ச்சகர் பணி அவசியம்

அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடர்ந்து நடத்துக!

குற்றாலத்தில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர்

குற்றாலம், ஆக.6   அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றி உச்சநீதிமன்றம் தெளிவாக தீர்ப்பு அளித்துள்ளதால், பயிற்சி பெற்றுத் தயாராக இருக்கக்கூடிய 200-க்கும் மேற்பட்ட வர்களுக்கு உடனடியாக பணி நியமன உத்தரவைத் தமிழக அரசு பிறப்பிக்கவேண்டும்; பெண்களுக்கும் பயிற்சி அளித்து அர்ச்சகர்களாக நியமிக்கவேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (5.8.2018) குற்றாலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் கூறியதாவது:

1924 இல் தந்தை பெரியார் தொடங்கிய ஜாதி - தீண்டாமை ஒழிப்புப் போர்!

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள் தன்னு டைய வாழ்நாளில் தொடங்கிய ஜாதி- தீண்டாமை ஒழிப்புப் போர் 1924 இல் கேரளாவில் வைக்கத்தில் தொடங்கியது.

ஜாதிப் பாம்பை நான் தாக்கித் தாக்கி, அது எங்கெங்கோ ஓடி ஓடி கடைசியில் பாதுகாப்பாக கோவில் கருவறைக்குள் புகுந்துவிட்டது. கருவறைக்குள் ஜாதியும், தீண்டாமையும் தொடர்ந்து இருந்துகொண்டு இருக்கிறது.

எனவே, ஜாதி, தீண்டாமை ஒழியவேண்டும் என்கிற என் னுடைய லட்சியம் நிறைவேறவேண்டுமானால், கருவறைக் குள் அனைவருக்கும் சம உரிமை, வாய்ப்புகள் இருக்கவேண்டும். தகுதி படைத்தவர்கள் அதிலே வரவேண்டும் என்று சொல்வதில் எனக்கு ஆட்சேபணையில்லை என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்லி, கோவில் நுழைவு, கருவறை நுழைவு  போராட்டங்களை அறிவித்த நேரத்தில்,

மானமிகு சுயமரியாதைக்காரரான'  கலைஞர்  கொண்டு வந்த சட்டம்

முதல்வராக  இருந்த நம்முடைய மானமிகு சுயமரியாதைக் காரரான' கலைஞர் அவர்கள் தெளிவாக தந்தை பெரியார் அவர்களிடத்தில் சொன்னார்.

அய்யா இது உங்கள் ஆட்சி. போராடவேண்டிய அவசிய மில்லை. நானே உங்கள் விருப்பப்படி சட்டம் கொண்டு வருகி றேன்'' என்று சொல்லி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்கிற சட்டத்தைக் கொண்டு வந்தார்கள்.

அந்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில், சிறீபெரும் புதூர் ஜீயர் தலைமையில், சங்கராச்சாரியார் மற்றவர்கள் எல்லாம் சென்றார்கள். பிரபல வழக்குரைஞர் பல்கிவாலாவே வாதாடினார் என்றாலும், 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு தெளிவாக தமிழ்நாடு அரசு, திராவிட  முன்னேற்றக் கழக அரசு, கலைஞர் அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்துவிட்டு, கடைசியாக ஒன்றைச் சொன்னார்கள்,

ஆகம விதிகளின்படி அர்ச்சகர்கள் நியமனம் இருக்க வேண்டும். காரணம் ஜாதீய அடிப்படை இல்லாமல் அர்ச்சகர் நியமிப்பது என்பது சமூக சீர்திருத்தம்.

பாரம்பரிய அர்ச்சகர் முறை ஒழிக்கப்படவேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அர்ச்சனை முறையில் மாற்றம் என்று சொல்லவில்லை. ஆகவே, அந்த சட்டம் செல்லும் என்று சொன்னார்கள்.

இதன்மூலமாக, ஆகம விதிகளை அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக அந்தத் தீர்ப்பிலே அவர்கள் சொன்னார்கள்.

இதைத்தான் அன்றைக்கே நாங்கள் விடுதலை'யில் சுட்டிக் காட்டினோம். ஆபரேசன் வெற்றி நோயாளி செத்தார்' என்று சொன்னோம்.

முதலமைச்சர் கலைஞரின் உருக்கம்!

பிறகு அதனை நிவர்த்தி செய்வதற்காக, தந்தை பெரியார் அவர்கள் மறைந்தபொழுது, அரசு மரியாதை கொடுத்த நம்மு டைய மானமிகு முதல்வர் கலைஞர் அவர்கள், உருக்கமாக ஒன்றை சொன்னார்கள்

தந்தை பெரியாருக்கு அரசு மரியாதை கொடுக்க முடிந்ததே தவிர, அவர் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்ற முடியவில்லையே என்கிற ஆதங்கம் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது'' என்று சொன்னார்.

அதன்படியே மறுபடியும் ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, அந்த சட்டத்தின் அடிப்படையில் ஜஸ்டீஸ் ஏ.கே.ராஜன் அவர்களின் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அந்தக் குழுவில், இந்து மதத் துறை நிபுணர்களை எல்லாம் போட்டு, ஆகம விதிப்படி இரண்டு வகை பள்ளிகளை உருவாக்க வேண்டும். சைவ ஆகமம், வைணவ ஆகமம் என்று சொல்லி, 69 சதவிகித இட ஒதுக்கீட்டுப்படி, தெளிவாக நியமனங்கள் செய்யப்பட்டு, ஓராண்டு பயிற்சி கொடுத்து, 207 அர்ச்சகர் பயிற்சி பெற்று வந்தார்கள். அனைத்து ஜாதியினர் அடிப்படையில் 69 சதவிகித இட ஒதுக்கீடுபடி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

10 ஆண்டு காலம் கிடப்பில் இருந்த வழக்கு விசாரணை

அதையும் எதிர்த்து மதுரை அர்ச்சகர் நல சங்கம் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்கு 2006 ஆம் ஆண்டு  விசாரணை நடைபெற்று ஏறத்தாழ 10 ஆண்டுகாலம் கிடப்பில் போடப்பட்டு, இறுதித் தீர்ப்பாக கலைஞர் அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று தெளிவாக சொன்ன பிறகும்,

அதற்குப் பிறகும் 2 ஆண்டு காலம் ஏறத்தாழ ஒரு 10 ஆண்டு காலத்திற்கு பயிற்சி முடித்தவர்களுக்கு வேலையில்லை. பயிற்சி பெற்றவர்களில் மூன்று, நான்கு பேர் இறந்துபோய்விட்டார்கள்.

நாங்களும் இதனை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அதற்குப் பிறகு வந்த அ.தி.மு.க. அரசின் முதலமைச்சர்களும், நிச்சயமாக இதை நிறைவேற்றுவோம் என்று சட்டமன்றத் திலேயே உறுதிமொழி கொடுத்தார்கள்.

தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு எந்தவிதமான மாறுபாடும் கிடையாது

எனவே, இந்தப் பிரச்சினையில், தி.மு.க. - அ.தி.மு.க.வுக்கு எந்தவிதமான மாறுபாடும் கிடையாது. கொள்கை அடிப்ப டையில் அதை எல்லோரும் வரவேற்றார்கள்.

இப்பொழுது அந்த அர்ச்சகர்களில் ஒருவர் மதுரை தல்லாகுளத்தில் உள்ள ஒரு அய்யப்பன் கோவிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது வரவேற்கத்தகுந்தது.

கலைஞர் அவர்களுடைய வாழ்நாளிலேயே இந்த வெற்றியை கேட்டு மகிழக்கூடிய  ஒரு நல்ல வாய்ப்பு

பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றவேண்டும் என்று சொன்ன கலைஞர், இன்றைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்து வருகிறார். அவருடைய வாழ்நாளிலேயே இந்த வெற்றியை அவர்கள் பெற்று, கேட்டு மகிழக்கூடிய  ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதைத்தான் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் தெளிவாக சொன்னார்கள்.  திராவிட இயக்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்று.

அ.தி.மு.க. அரசின் அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சரும் சொல்லியிருக்கிறார். தொடர்ந்து நியமனங் களை மற்றவர்களுக்கும் செய்வோம் என்று; இது வரவேற்கப் படவேண்டிய ஒன்று.

காலதாமதம் இல்லாமல் உடனடியாக அர்ச்சகர்கள் நியமனம் என்பதை அவர்கள் தொடரவேண்டும்.

இதுமட்டுமல்லாமல், இன்னொரு வேண்டுகோள் என்ன வென்றால், நிறுத்தி வைக்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளி தொடர்ந்து நடைபெறவேண்டும்.

அந்த அர்ச்சகர் பயிற்சி பள்ளியைத் தொடரும்போது, அந்தத் தீர்ப்பிலேயே குறிப்பிட்டிருப்பதுபோல, ஆண் - பெண் என்கிற பேதத்திற்கு இடமில்லை - அரசியல் சட்டத்தில் இருக்கின்ற அடிப்படை உரிமையின்படி என்று உச்சநீதிமன்றம் சொல்லியிருக்கிற காரணத்தினால், அவர்கள் பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளிக்கவேண்டும் - நியமனம் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம்.

பெண்களுக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்து - பணி நியமனம் செய்க!

இது எந்த வகையிலும், ஆகமங்களுக்கோ, மற்றவை களுக்கோ விரோதமாக இருக்காது. அரசியல் சட்டம்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி இறுதியான ஒரு கட்டம். அதற்கு மாறான சூழல் இருக்க முடியாது. அதனுடைய அடிப்படை உரிமைகளைப் பறிக்க எந்த அமைப்பிற்கும் உரிமை இல்லை. மத சுதந்திரம் என்றாலும்கூட, அது சில கட்டுப்பாடுகளுக்குக் கீழே இருக்கிற சுதந்திரமே தவிர, எல்லையற்ற சுதந்திரம் இல்லை என்பதுதான் உச்சநீதிமன்றத் தீர்ப்பினுடைய அடிப் படை.. ஆகவே, அதனுடைய அடிப்படையில் பெண் அர்ச்சகர் களுக்குப் பயிற்சி கொடுப்பதும், பணி நியமனம் செய்வதற்கும் எந்தத் தடையும் இல்லை.

விபத்தில் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்குக்கூட அரசாங்கம் உதவி செய்கிறது.  அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் பயிற்சி பெற்று இறந்து போனவர்களுடைய, வறுமையினால் இறந்துபோனவர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்யவேண்டும். செய்வார்கள் என்று நம்புகிறோம்.

ஜாதியை, தீண்டாமையை ஒழிப்பதற்கு இதைவிட சிறந்த வாய்ப்பு வேறு இருக்க முடியாது. திராவிட இயக்க சாதனைகளில் இது சரித்திர சாதனையாகும். அந்த வெற்றி தந்தை பெரியார் தொடங்கிய போராட்டம் - அரை நூற்றாண்டுக்குப் பிறகு, திராவிட இயக்கத்தாலே சாதிக்கப்பட்டு இருக்கிற சரித்திர வெற்றியாகும்.

இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையை ஒழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்!

செய்தியாளர்: சாமி சிலைகளை கடத்தல் தடுப்பில் பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டார் என்று சொல்வதில் இருவேறு கருத்துகள் இருக்கிறது; அந்த வழக்கை சி.பி.அய்.,க்கு மாற்றியிருக்கிறார்களே, அதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: திராவிடர் கழகத்தைப் பொறுத்தவரையில், 'விடுதலை'யில் விரிவான அறிக்கையை எழுதியிருக்கிறோம். இந்தப் பிரச்சினையில், மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் பொழுது, சிலை திருட்டு என்பது நேரு காலத்திலிருந்து இந்திரா காந்தி காலத்திலிருந்து நடந்துகொண்டுதானிருக்கிறது. சர்.சி.பி.ராமசாமி அய்யர் தலைமையில் ஒரு குழு அமைத்து, அந்தக் குழுவின் அறிக்கையை அளித்திருக்கிறார். சாராயத்திற்காக அர்ச்சகர் சிலையை விற்றிருக்கிறார் என்று அந்த அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

எனவே, சிலை திருட்டு என்பது நீண்ட காலமாக இருக்கிறது. ஆனால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பி.ஜே.பி.யினர், சுப்பிரமணியசாமி, எச்.இராஜா போன்ற இன்னும் சிலர், இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை நீதிக்கட்சி ஆட்சியினால் உருவாக்கப்பட்டது 1925 ஆம் ஆண்டு. அந்தத் துறையை அழித்துவிடவேண்டும்; அதனை ஒழித்துவிட்டு, வடநாட்டில் எப்படி கோவில்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்கீழ் உள்ளதோ, அதன்படியே செய்யவேண்டும் என்கிற ஒரு திட்டத்தை இங்கேயும் கொண்டுவரவேண்டும் என்பதற்காக வழக்கு போட்டிருக்கிறார்கள்.

தயானந்த சரசுவதி என்கிற ஒருவர் தொடர்ந்த வழக்கு - அவர் இன்றைக்கு உயிரோடு இல்லை. அவர் யார் என்றால், மஞ்சக்குடி நடராஜ அய்யர்தான். எனவே, அவர் தொடுத்த அந்த வழக்கு, இன்றைக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது.

அந்த வழக்குக்கு வலு சேர்க்கக்கூடிய அளவில், பல அதிகாரிகளை அவர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதில் எத்தனை அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? உண்மையான குற்றவாளிகளை அவர் கண்டுபிடிப்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. நேர்மையான அதிகாரிகளை வேட்டையாடுவது கூடாது.

எனவே, இந்த விசாரணையின் போக்கு அதிருப்தியைத் தருகிறது என்பதை, அறநிலையப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும், ஊழியர்களும் வெளியாக்கியிருக்கிறார்கள் என்பது சில நாள்களுக்குமுன் வந்த செய்தி.

எனவேதான், சி.பி.அய்.க்கு மாற்றம் என்பது, சாதாரணமாக மாநில அரசின்மீது நம்பிக்கை, சி.பி.அய்.க்கு மாற்றவேண்டும் என்பது ஒருமுறை. அதோடு இது சர்வதேச சம்பந்தப்பட்டது என்று சொல்லும்பொழுது, சி.பி.அய். விசாரித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் தவறு இல்லை. ஆனால், ஒரு அதிகாரி, ஒரு அரசாங்கத்தின்கீழே இருக்கும்பொழுது, உயர்நீதிமன்றத்திலேயே அந்த அரசுமீது குற்றம்சாட்டுகிறார் என்கிறபொழுது, ஒரு தெளிவான புரிதல் இல்லை - அரசாங்கத்திற்கும் அதிகாரிக்கும் என்று சொல்லும்பொழுது,

விசாரணையில் குற்றவாளிகள் அல்லாதவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. எனவேதான், இதனை விசாரிப்பதற்கு சி.பி.அய். முழுத் தகுதி பெற்றிருக்கிறது. திராவிடர் கழகம் அதனை வரவேற்கிறது.

இதில் இருக்கின்ற உள்நோக்கத்தினைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையினை அழித்துவிடவேண்டும், ஒழித்துவிடவேண்டும் என்பதற்கான ஆயத்தமான முன்னோட்டம் இது. ஆகவே, அதனை ஆழ மாகப் பார்க்கவேண்டும்; மேலெழுந்தவாரியாக பார்க்கக்கூடாது. அதிகாரியினுடைய போக்கு யாருக்குப் பயன்படுகிறது என்பதுதான் மிக முக்கியம்.

அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகள்பற்றி...

செய்தியாளர்: தற்போதைய அ.தி.மு.க. அரசின் நடவடிக்கைகள்பற்றி உங்களுடைய கருத்து என்ன?

தமிழர் தலைவர்: பெரும்பாலான நடவடிக்கைகள் ஏமாற்றம் அளிக்கக்கூடியவைகளாக இருக்கின்றன.

ஆதரிக்கவேண்டியவர்களை எந்த ஆட்சியாக இருந்தாலும் நாங்கள் ஆதரிப்போம். எதிர்க்கவேண்டியவர்களை எந்த ஆட்சியினராக இருந்தாலும் நாங்கள் எதிர்ப்போம்.

உதாரணமாக, நீட்' தேர்வு மசோதா நிறைவேற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இரண்டு மசோதாக்கள் ஏகமனதாக எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்ட மசோதா என்னாயிற்று என்றே தெரியாத அளவிற்கு டில்லியில் இருப்பதை வற்புறுத்தி இவர்கள் பெறவேண்டும். அந்த மசோதாக்களுக்கு  குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

குடியரசுத் தலைவர் ஒப்புதலைத் தர மறுத்தால், என்ன காரணம் என்பதை  அவர்கள் அறிவிக்கவேண்டும். நாங்கள் அதற்குப் பிறகு நீதிமன்றத்திற்கும், மக்கள் மன்றத்திற்கும் செல்லக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

ஏனென்றால், நீட் தேர்வு என்பது, ஒத்திசைவுப் பட்டியலில் இருக்கிறது. மாநில அரசின் அனுமதியில்லாமல், கல்வித் துறையில் ஏராளமான மாற்றங்களை செய்து வருகிறார்கள். குருகுலக் கல்வி என்று திடீரென்று அறிவிக்கிறார்கள். பல்கலைக் கழக மானியக் குழுவைக் கலைக்கிறோம் என்று சொல்கிறார்கள். எப்படி திட்டக் கமிஷனைக் கலைத்தார்களோ, அதே போன்று இதனையும் கலைத்துவிட்டு எல்லா இடத்திலேயும் காவி மயமாக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கின்ற மத்திய அரசுக்கு, எதற்கெடுத்தாலும் தலையை ஆட்டிக் கொண்டிருக்கக்கூடாது மாநில அரசு. மாநில உரிமைகள் நாள்தோறும் பறிபோகக்கூடிய சூழ்நிலையில், அதனைத் தடுத்த நிறுத்தவேண்டிய போக்கு கட்டாயமாக இந்த அரசுக்கு உண்டு. அந்த வகையில், இந்த அரசினுடைய போக்கு மாநில உரிமைகளைக் காப்பாற்றக் கூடிய அளவிற்கு இருக்கவேண்டும். அதேநேரத்தில், பல நேரங்களில் தங்களுடைய அதிகாரத்தையும், வலிமையையும் தெளிவாகக் காட்டவேண்டும்.

தமிழ் தெரிந்தவர்களே தலைமை நீதிபதியாக வரவேண்டும்

சமூகநீதியின் அடிப்படையில் நீதிபதிகள் நியமனத்தில்கூட, தமிழகத்திற்கு வரக்கூடிய நீதிபதிகள் தமிழ் தெரிந்தவர்களே தலைமை நீதிபதியாக வரவேண்டும்.

பிற மாநில நீதிபதிகள் தலைமை நீதிபதியாக வருவதை  கொள்கை ரீதியில் எதிர்க்கக்கூடிய அளவிற்கு, மாநில உரிமையை நிலைநாட்டவேண்டும்.

ஏனென்றால், வழக்குகள் கீழ்நீதிமன்றங்களில் தமிழில் நடைபெறுகின்றன. ஏற்கெனவே, நீதிமன்ற நடவடிக்கைகள் தமிழில் நடைபெறவேண்டும் என்று ஒரு பெரிய இயக்கம் நடைபெற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. மீண்டும் அதுபோன்ற தீர்மானங்களை தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி, அதனை செயல்படுத்தக் கூடிய அளவிற்கு வரவேண்டும்.

அண்ணா பல்கலைக் கழக ஊழல் பற்றி...

செய்தியாளர்: அண்ணா பல்கலைக் கழகத்தில் மறுகூட்டலில் ஊழல் நடைபெற்றிருப்பதுபற்றி..?

தமிழர் தலைவர்: ஜனநாயகத்தில் ஆட்சியே மறுகூட்ட லுக்கு உட்படுத்தவேண்டிய கட்டத்தில், தேர்வு மட்டுமல்ல - தேர்தலும்கூட மறுகூட்டலுக்கு உட்படுத்தவேண்டிய கட்டம்.

செய்தியாளர்: அண்ணா பல்கலைக் கழகத்தில் முறைகேடுகள் நடைபெற்றது என்று சொல்லி, ஒரு பேராசிரியர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளாரே?

தமிழர் தலைவர்: அந்தப் பல்கலைக் கழக துணைவேந்தர் தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்க விரும்புகிறார். ஒரு அரசாங்கத்தில் ஊழல் என்றால், முதலமைச்சர்மீது குற்றம் சாட்டுகிறார்கள். அதுபோல, ஒரு பல்கலைக் கழகத்தினுடைய உறுப்புக் கல்லூரியில்  வெளியே தான் இது நடந்தது என்ற சொல்வது இருக்கிறதே - ஒட்டுமொத்தமாக துணைவேந்தர்தான் அதற்குப் பொறுப்பு.

அவர் அதிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு, மற்றவர்களை குற்றவாளிக் கூண்டில் ஏற்றலாம் என்று நினைப்பது இருக்கிறதே - அது விரும்பத்தக்கதல்ல. ஏற்கெனவே அந்தத் துணைவேந்தர் பிரச்சினைக்குரிய துணைவேந்தராகத்தான் பொறுப்பேற்றார்.

இப்பொழுது தன்னை காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்பதற்காக, மற்றவர்களின்மீது குற்றம்சாட்டக்கூடாது.

பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அவர் - அந்தப் பல்கலைக் கழகத்தில் ஊழல் எங்கே நடைபெற்றாலும், அதற்குப் பொறுப்பேற்கவேண்டியது துணைவேந்தரே தவிர மற்றவர்கள் அல்ல. ஆகவே, துணைவேந்தர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது ஏற்கத்தக்கதல்ல.

இவ்வாறு செய்தியாளர்களிடம் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி குறிப்பிட்டார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles