கோட்சே இல்லையென்றால் நானே காந்தியைக் கொலை செய்திருப்பேன்!
இந்து நீதிமன்ற நீதிபதியின் திமிர் கொண்ட பேச்சு
லக்னோ, ஆக. 25 உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் இந்து நீதிமன்றம் அமைக்கப் பட்டுள்ளது. இதன் நீதிபதியாக பெண் சாமியார் பூஜா சாகுன் பாண்டே நிய மிக்கப்பட்டுள்ளார். இந்த நீதிமன்றம் அதிகாரப்பூர்வமற்றது என்றாலும் பூஜா சாகுன் பாண்டே கூறிய சர்ச்சைக்குரிய கருத்தால் தற்போது தலைப்புச் செய்தி களில் இடம் பிடித்துள்ளது.
பாண்டே கூறுகையில், மகாத்மா காந்தியை கோட்சே கொல்லவில்லை என்றால் அதை நான் செய்திருப்பேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை துண்டாடுவதில் நம்பிக்கை கொண்ட காந்தி தற்போதும் வாழ்ந்தால் கோட்சேயும் இருப்பார். நானும், அகில பாரத இந்து மகாசபாவும் நாதுராம் கோட்சேவை வணங்குகிறோம். கோட்சேவை நினைத்து பெருமை கொள்கிறோம்'' என்றார்.
சில நாள்களுக்கு முன்பு இந்த அமைப்பைச் சேர்ந்த சுவாமி சக்கரபாணி மகராஜ், மாட்டு இறைச்சி சாப்பிடுவோர் கேரளா வெள்ள நிவாரணங்களை பெறக் கூடாது என்று கூறி சர்ச்சை ஏற்படுத்தினார்'' என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மகாசபா நீதிமன்றத்தில் நீதி தேவதைக்குப் பதில் கோட்சே சிலை உள்ளது, இந்த சிலையில் சத்தியம் வாங் கிய பிறகு வழக்காடுபவர்கள் தங்கள் வாதத்தைத் தொடரலாம், இந்த நீதிமன் றம் முழுக்க முழுக்க மனுநீதியின் சட்ட அடிப்படையில் செயல்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இந்தியா முழுவதும் இந்து நீதிமன்றங்களை அமைக்கப்போவதாகவும், இதற்கான நீதிபதிகள் நியமிக்கும் பணியைத் துவங்கி விட்டதாகவும் இந்து மகாசபா கூறியுள்ளது. இந்து மகாசபா, கோட்சேவிற்கு நாடு முழுவதும் சிலை வைக்கவேண்டும், கோட்சேவின் பாடத்தை பள்ளிப்பாடங் களில் சேர்க்கவேண்டும், கோட்சேவின் படம் நாடாளுமன்ற வளாகத்தில் திறக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை களை எழுப்பி வருகிறது. இந்த நிலையில் சட்டவிரோதமாகச் செயல் படும் இந்து நீதிமன்றம் என்ற பெயரில் உள்ள ஒரு அமைப்பில் நீதிபதியாக உள்ள ஒரு பெண்ணே நான் காந்தியைக் கொலை செய்திருப்பேன் என்று பகிரங்க மாகக் கூறியிருப்பதும், இதுவரை அவர்மீது மத்திய அரசோ, மாநில அரசோ அல்லது உள்துறை அமைச்சகமோ சட்ட நடவடிக்கை எதும் எடுக்காமல் இருப்பதும் ஒருவேளை இதுபோன்ற நீதிமன்றங்களை மத்திய அரசு ஆத ரிக்கிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகியுள்ளது.