பாட்னா, அக்.9 பீகாரில் பாஜக -- ராஷ்ட்டிரிய ஜனதா தள் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு தலைநகர் பாட்னாவிற்கு அருகில் உள்ள நகரத்தில் சாலையில் பெண் ஒருவரை, சில இந்துத்துவா அமைப்பினர் ஆடைகளை அவிழ்த்து அடித்து உதைத்து இழுத்துச்சென்ற நிகழ்வின் பரபரப்பு அடங்கும் முன்பு பள்ளி மாணவிகளை கும்பலாகச் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை நிகழ்ந்துள் ளது.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. திரிவேணிகஞ்ச் என்ற பகுதியில் உள்ள கஸ்தூரிபா தனியார் பெண்கள் பள்ளியில், கும்பல் ஒன்று புகுந்து படித்துக்கொண்டிருந்த சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் 34 சிறுமிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளனர்.
சனிக்கிழமை அன்று திரிவேணிகஞ்ச என்ற நகருக்கு வெளியே உள்ள பள்ளி ஒன்றில் வகுப்புகள் நடந்துகொண்டிருந்தது. அப்போது 50- க்கும் மேற்பட்ட வன்முறைக் கும்பல் பள்ளிக்குள் நுழைந்தது. அவர்கள் பள்ளியின் முக்கிய கதவுகளை மூடிவைத்தனர். பின்னர் ஆசிரியர்களை அடித்து உதைத்தனர். 8, 9 10- ஆம் வகுப்பிற்குள் நுழைந்த அந்தக் கும்பல் கண்ணில் பட்ட மாணவிகளின் ஆடைகளைக் கிழித்து பாலியல் வன்கொடுமை செய்தனர். இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஊர்க்காரர்கள் அப்பகுதிக்கு வருவதற்குள் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். இந்த நிகழ்வில் 3 ஆசிரியைகள் உள்பட 34 மாணவிகள் படுகாயமடைந்தனர். இதில் 10 மாணவிகள் கடுமையான பாதிப் புக்கு உள்ளாயினர்.
ஊருக்கு வெளியே உள்ள இந்த பள்ளியில் சமூக விரோதிகள் இரவில் வந்து தங்குகின்றனர். முழு மதுவிலக்கு உள்ள மாநிலமான பீகாரில் தினசரி அதிகாலை பல மது பாட்டில்கள் பள்ளியின் வகுப்பறைகளிலும், வெளியேயும் சிதறிக் கிடக்கின்றன. தினசரி இதுகுறித்து பள்ளி நிர்வாகம், காவல்நிலை யத்தில் புகார் அளித்தும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது தொடர்பாக சில சமூக விரோதிகள் பள்ளி நிர்வாகத்தை மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் வகுப்பறைக்குள்ளேயே புகுந்து மாணவிகளை சீரழித்த கொடூரமான நிகழ்வு நடந்துள்ளது. மிகவும் மோசமான இந்த நிகழ்வு குறித்து இதுவரை பீகார் முதல்வர் அல்லது துணை முதல்வர் எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.
பொது இடத்தில் அரை நிர்வாணமாக நிறுத்தி சித்திரவதை
பீகாரில் நவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணை மரத்தில் கட்டி வைத்து அரை நிர்வாணமாக்கி, கிராம மக்க ளால் பல மணி நேரம் அடிக்கப்பட்டுள்ளார். நவாடா பகுதியில் உள்ள கிராமத்தில் ஒரு பெண் ஜாதி மறுப்பு திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் காவல்துறையினரை வைத்து மிரட்டி அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்துவந்தனர். இச்சம்பவத்தை உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கைப்பேசி மூலம் சிலர் நேரடியாக ஒளிபரப்பும் செய்துள்ளனர். ஒரு நாள் முழு வதும் அந்தப் பெண்ணை அடித்து துன்புறுத் திய போதும் காவல்துறையினர் அங்கு செல் லவே இல்லை.
பின்னர் அந்தப் பெண் மயக்க மடைந்ததும் ஊரார் அப்பெண்ணை அங் கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர். சில நாள்களுக்கு முன்பு பீகார் துணை முதல்வரும், பாஜக மாநிலத் தலைவருமான சுஷில் குமார் மோடி, பெண்கள் ஆண்களுக்கு நிகராக கல்வி கற்பதில் சில சிக்கல்கள் உள்ளது. பொது இடங்களில் ஆண்களை விட அதிகம் படித்த பெண்கள் தற்பெருமையுடனும், கர்வத்துடனும் நடந்து கொள்கிறார்கள். இது நமது கலாச்சாரத்திற்கு உகந்ததல்ல என்று கூறியிருந்தார். இது குறித்து கேட்டபோது நான் ஒரு சில பெண்களை மட்டுமே கூறி னேன்; அனைத்துப் பெண்களையும் அப்படிக் கூறவில்லை என்று மழுப்பலாக பதிலளித் திருந்தார்.
நிர்வாணப்படுத்தி சோதனை
சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக தலைவர் அமித்ஷா தலைமையில் மஹிளா சம்மேளன் என்னும் மகளிர் விழா நடைபெற்றது. அதில் கலந்துகொள்ள வந்த பெண்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். பெண் காவலர்கள் சோதனை செய்து அனுப் பினாலும், பாஜக பிரமுகர்கள் வந்திருந்த பெண்களின் ஆடைகளை அவிழ்த்து, உள்ளே ஏதும் கருப்புக் கொடி வைத்துள்ளார்களா என சோதனை செய்துள்ளனர்.
இது குறித்து சத்தீஸ்கர் மாநில காங்கிரசு மகளிர் அணியின் கிரண்மயி, முதலில் ஆண் களின் சாக்ஸ் மற்றும் பெல்ட்டை அகற்றுமாறு உத்தரவிட்ட பாஜகவினர், தற்போது மகளிர் மற்றும் சிறுமிகளையும் அசிங்கப்படுத்தி உள் ளனர். அவர்களின் உள்ளாடையை அவிழ்த்து சோதிப்பது அவமானப்படுத்துவதற்காகவே எனத் தோன்றுகிறது என்று கூறினார். அரியானா மாநிலத்தில் சிபிஎஸ்இ தேர் வில் மாநிலத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்று மாநில முதல்வரிடம் பரிசு வாங்கிய மாணவியை 7 பேர் சேர்ந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்து பேருந்து நிலையம் ஒன்றில் வீசிவிட்டுச் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் 3 பேரை கைது செய்ததோடு அந்த விவகாரம் அப்படியே முடிந்துவிட்டது. முக்கியமாக பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் மீதான வன்கொடுமைகள் அதிகரித்துள்ளது. பட்டப்பகலில் பள்ளியில் புகுந்து மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும்வரையில் சட்டம் ஒழுங்கு மிகக் கேவலமாக உள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். இருப்பினும் மாநில காவல்துறையும், பெண்கள் ஆணை யமும் இச்சம்பவங்கள் குறித்து தொடர்ந்து மவுனம் காத்துவருகின்றனர்.