புதுடில்லி, அக்.22 தமிழ் நாளிதழ்களில் வந்த இரண்டு பணிவிண்ணப்ப விளம் பரங்கள். ஒன்று, தனியார் நிறுவனம் தன்னுடைய நிறுவனத்திற்கு பணி யாளர்கள் தேவை என்றும், அதற்கேற்ற கல்வித்தகுதி போன்றவற்றையும் கொடுத்துள்ளது.
இரண்டாவது விளம்பரம் இந்திய அரசின் தேசிய தொற்றுநோய் தடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளதாகும். அரசு நிறுவனங்களின் பணியாளர்களுக்கான விளம்பரங்களில் இட ஒதுக்கீடு, வயது வரம்பு, இட ஒதுக்கீட்டில் வரும் பிரிவினருக்கான பணி எண்ணிக்கை உள்ளிட்டவைகள் கட்டாயம் இடம் பெறவேண்டும். இது எதற்கு என்றால் இட ஒதுக்கீட்டில் வரும் பட்டதாரிகள் அல்லது கல்வித்தகுதி உடையவர்கள் முன்னதாக விண்ணப்பிக்கவும், அவர் கள் பணி விண்ணப்பம் செய்ய தேவை யான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி யிருக்கும் என்ற நோக்கத்திலும் தான் விளம்பரங்களில் இட ஒதுக்கீடு தொடர்பான தகவல்கள் கட்டாயம் இடம்பெறும். எடுத்துக்கட்டாக ஒரு அரசுப் பணிக் கான விளம்பரம் வருகிறது என்றால் அதில் காலாவதி தேதி குறிப்பிடப் பட்டிருக்கும். அதே போல் விண் ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.
இதனால் தமிழகத்தின் ஏதோ ஒரு குக்கிராமத்தில் வசிக்கும் கல்வித்தகுதி உடையவர் இட ஒதுக்கீட்டுடன் கூடிய விளம்பரத்தைக் கண்டவுடன், ஜாதிச் சான்றிதழ், இதர கெசட் அதிகாரியின் முத்திரை போன்றவற்றை குறிப்பிட்ட தேதிக்குள் பெற்று விண்ணப்பம் அனுப்ப ஏதுவாக இருக்கும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில், விளம்பரத்தில் வரும் பதவிகளுக்கு உயர்ஜாதியினர் மட்டுமே எளிதில் விண்ணப்பித்து விடுவார்கள். இதனால் இட ஒதுக்கீட்டின்படி வரும் பயனாளிகள் அவர்களின் உரிமை பறிபோய் குறிப் பிட்ட கல்வித்தகுதி இருந்தும் வேலை யின்றி இருப்பார்கள். சமீப காலங்களில் இது போன்ற விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இது குறித்து மத்திய, - மாநில அரசுகள் அக்கறை கொள்வதில்லை.
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்த நாள் முதல் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கீழறுப்பு வேலைகள், சன்னமான சூழ்ச் சிகள் அரங்கேறி வருகின்றன என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டு.