பாஜக பெண் எம்பி அதிரடி - சங் பரிவார் அதிர்ச்சி
அலகாபாத், அக்.24 பாபர் மசூதி இருந்த இடத்தில் புத்தர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என உ.பி.யைச் சேர்ந்த பெண் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் கூறி உள்ளார். இக்கூற்றுக்கு பா.ஜ.க., சங் பரிவார் வட்டாரத்தில் பதற்றம் ஏற் பட்டுள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பாரைச் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாவித்திரி பாய் புலே. பாஜகவைச் சேர்ந்த இவர் பலமுறை சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறி பாஜகவை நெருக்கடிக்கு உள்ளாக்கி வருவது தொடர்ந்து வருகிறது. சுமார் 37 வயதான சாவித்திரி கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டர். கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் பாரைச் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பாஜக தலைவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் வீட்டில் உணவு உட்கொள் ளுவது புகைப்படம் எடுத்துக் கொள்ள மட்டும் எனக் கூறியதில் இருந்தே, இவர் மிகவும் கவனத்துக்கு வந்தார். அதன் பிறகு பல சர்ச்சைக்குரிய கருத் துகளை கூறி வரும் இவர், பாகிஸ் தானை உருவாக்கிய முகமது அலி ஜின்னா ஒரு மகாத்மாவை' போன்றவர் எனக் குறிப்பிட்டார். அந்த சர்ச்சை முடிவதற்குள் சாவித்திரி அடுத்த சர்ச்சையை தொடங்கியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கும்பலால் இடிக்கப்பட்ட...
பாஜகவின் முக்கிய கொள்கைகளில் ஒன்று ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார் கும்பலால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதாகும். சாவித்திரி பாய் புலே சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பாபர் மசூதி இருந்த இடத்தில் தோண்டிய போது புத்தர் சிலை கண்டெடுக்கப் பட்டுள்ளது. ஆகவே உச்சநீதிமன்றம் அந்த இடத்தில் ஒரு புத்தர் கோவில் கட்ட உத்தரவிடுவேதே சரி என நான் நம்புகிறேன். வாக்கு வங்கிக்காக ஒரு சிலர் கோவில், மசூதி எனத் தேர்தல் நேரத்தில் மட்டும் விவாதம் செய்து வருகின்றனர். மசூதியும், கோவிலும் மக்களுக்கு உணவளிக்காது. சரியான வேலை வாய்ப்பு அளிப்பதால் மட் டுமே மக்களுக்கு உணவு கிடைக்கும். அலகாபாத் நகரின் பெயரை மாற்றுவது மக்களை திசை திருப்பும் ஒரு உத்தியாகும்'' எனப் பேசி உள்ளார். சாவித்திரி பாய் புலேவின் இந்தப் பேச்சு பாஜகவினருக்கு அடுத்த சர்ச் சையை உண்டாக்கி இருக்கிறது.
வரலாற்றை நோக்கினால் இந்தியா முழுமையும், திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்பட பழைய புத்த கோவில்களே! அவற்றைத்தான் ஆரி யம் அரசர்களைக் கையில் போட்டுக் கொண்டு இந்துக் கோவில்களாக மாற்றியது.