உச்சநீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவை!
உச்சநீதிமன்றத்தில் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி, பிரசாந்த் பூஷண் வழக்கு!
புதுடில்லி, அக். 26 ரபேல் ஊழல் வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பி.ஜே.பி. பிரமுகர்களான யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி மற்றும் வழக்குரை ஞர் பிரசாந்த் பூஷண் ஆகியோர் உச்சநீதி மன்ற கண்காணிப்பில் இதுகுறித்து விசா ரணை நடத்தப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர்.
சி.பி.அய். இயக்குநர் அலோக் வர்மா விடம் ரபேல்' ஊழல் குறித்து கடந்த அக்டோபர் 4 ஆம் தேதி புகார் கொடுத்தி ருந்தனர். அதன் அடிப்படையில் சி.பி.அய். இயக்குநர் அலோக் வர்மா செயல்படத் தொடங்கிய நிலையில், அவசர அவசரமாக கட்டாய விடுப்பில் அவர் அனுப்பப் பட்டதும், புதிய இயக்குநர் உடனடியாக நியமிக்கப்பட்டிருப்பதும் மிகப்பெரிய சந்தேகத்தை பிரதமர் மோடிமீது எழுப்பி யுள்ளது.
ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில், பல ஆயிரம்கோடி ரூபாய் ஊழல் நடந்துள் ளதால், இதுபற்றி சிபிஅய் விசாரிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 4-ஆம் தேதியே இம்மூவரும் மத்தியப் புலனாய் வுக் கழக இயக்குநர் அலோக் வர்மாவிடம் மனு அளித்திருந்தனர். இவர்களுக்கு முன்னதாக ஆம் ஆத்மி கட்சியினரும், மார்ச் 12- ஆம் தேதியே சிபிஅய் விசாரணை கேட்டிருந்தனர். காங்கிரசு கட்சியினர், மத்திய கணக்குத் தணிக்கைத் துறை அதிகாரியான ராஜீவ் மகரிஷியைச் சந்தித்து, ரபேல் ஊழல் பற்றி விசாரணை கோரியிருந்தனர். இதையடுத்து, ரபேல் ஊழல் புகார்கள் குறித்துமுறைப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மா தெரி வித்திருந்தார். இதுதொடர்பான பூர்வாங்க விசாரணையை அலோக் வர்மா துவங்கிய தெல்லாம் கசிந்தன.
மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீசு
சி.பி.அய். இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீசு அனுப்பியுள்ளது. முன்னாள் நீதிபதி முன்னிலையில் அலோக் வர்மாவை விசாரணை நடத்தவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.அய். இயக்குநர் கொள்கை முடிவெடுக்கவும் தடை விதித்துள்ளது உச்சநீதிமன்றம்
ஆனால், மத்திய பாஜக அரசு, செவ் வாயன்று நள்ளிரவு திடீரென அலோக் வர் மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ரபேல் விவகாரம் குறித்து அலோக் வர்மா விசாரணை நடத்துவதைத் தடுப்பதற் காகவே மோடிஅரசு இவ்வாறு செய்துள்ள தாக எதிர்க்கட்சிகளும் பகிரங்ககுற்றச் சாட்டை முன்வைத்துள்ளன. இந்நிலையில், மீண்டும் களத்தில் குதித்த யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, பிரசாந்த் பூஷண் ஆகியோர் இம்முறை உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். ரபேல் ஒப்பந்த முறைகேடு குறித்து, சிபிஅய் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்; அந்த விசாரணையை உச்சநீதிமன்றம் கண் காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இது பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். மற்றும் அமைச்சரவை வட்டாரத்தில் கடும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்தது என்ன?
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
பிரான்சு நாட்டைச் சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க கடந்த 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தத்தில் பல்வேறு ஊழல் நடந்துள்ளதற்கு முகாந் திரங்கள் உள்ளன. நாட்டின் உயர்ந்த மதிப்புமிக்க அரசு அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஊழல் செய்துள்ளதற்குப் போதுமான அளவு முகாந்திரங்கள் உள்ளன. பிரதமர் மோடி தன்னுடைய அலு வலகத்தைப் பயன்படுத்தி கோடிக்கணக் கான ரூபாயை தனியார் நிறுவனம் பயன் பெற உதவியுள்ளார். உயர் பதவி வகிக்கும் மக்கள் பிரதி நிதிகள் தங்களின் பதவியை தவறாக பயன் படுத்தி, ரபேல் பேரத்தின் மூலமாக, அனில் அம்பானியிடம் இருந்து ஆதாயங்கள் அடைய முற்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக சிபிஅய் விசாரணை நடத்தக் கோரிஅக்டோபர் 4- ஆம் தேதி சிபிஅய் இயக்குநர் அலோக் வர்மாவிடம் மனு அளித்தோம். அந்த 132 பக்க மனுவில், புகார்களை தக்க ஆதாரங்களுடன் தந்திருக்கிறோம். ஆனால், இந்த விவகாரம் குறித்து சிபிஅய் இயக்குநர் விசாரணை நடத்தி, தகவல்களைத் திரட்டுவது அறிந்ததும், சிபிஅய் அமைப்புக்கு மறை முகமாக, நேரடியான அழுத்தங்களை அரசு அளித்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. சிபிஅய் இயக்குநர், துணை இயக்குநர் திடீரென மாற்றப்பட்டது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
அதிகாரிகளுக்கு நெருக்கடி!
ஆதலால், உச்சநீதிமன்றத்தின் கண் காணிப்பில் ரபேல் போர் விமான ஒப்பந் தத்தில் நடந்துள்ள ஊழல்குறித்து விசா ரணை நடத்த வேண்டும். இந்தஊழல் குறித்து விசாரணை நடத்தும் அதிகாரி களுக்கு மோடி அரசு நெருக்கடி அளிப்பதில் இருந்து தடுக்க வேண்டும்'' என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரான்சு நாட்டின் டஸ்ஸால்ட் நிறுவ னத்துடனான ரபேல் விமான ஒப்பந்தத்தில் ஒரு லட்சத்து 71 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் நடந்திருக்கிறது என்பது குற்றச்சாட்டு ஆகும். ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்திற்கு சாதகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ள இந்த ஒப்பந் தத்தில் பிரதமர் மோடி நேரடித் தொடர்பு கொண்டிருக்கிறார் என்பதை, பிரான்சு முன்னாள் அதிபர் பிரான் காய்ஸ் ஹாலண்டே, டஸ்ஸால்ட் நிறுவனத்தின் மூத்தஅதிகாரி லோய்க் சிகாலன் ஆகியோர் அளித்த வாக்குமூலங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன.
வலுவான சாட்சியங்கள்
இதுதவிர மீடியா பார்ட், போர்ட்டல் ஏவியேஷன்ஆகிய பிரான்ஸ் நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள், டஸ் ஸால்ட் நிறுவனத்தின் சிஎப்டிடி, சிஜிடி என்ற பிரான்ஸ் நாட்டு தொழிற்சங்கங்கள் 2017 மே 11- ஆம் தேதி வெளியிட்ட ஆவணங்கள் ஆகியவையும் மத்திய பாஜக அரசுக்கு எதிரான வலுவான சாட்சியங்களாக மாறியிருக்கின்றன.