மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானியின் கருத்துக்குக் கடும் கண்டனம்
அமைச்சர்மீது பீகாரில் வழக்குத் தொடுப்பு
மும்பை, அக்.27 சபரிமலைக்குப் பெண்கள் செல்லு வதுபற்றி மத்திய அமைச்சர் ஸ்மிரிதி இரானி வாய்க் கொடுத்து வம்பை விலைக்கு வாங்கி யுள்ளார். இதற்கு நாடெங்கும் பெண்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்ததோடு அல்லாமல், பீகாரில் மத்திய அமைச்சர்மீது வழக்கும் தொடுக் கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்த வாரத்தில் பிரிட்டிஷ் துணைத்தூதரகம் மற்றும் அப்சர்வர் ரிசர்ச் பவுண் டேஷன் இணைந்து நடத்தப்பெற்ற இளைய சிந்தனையாளர்கள் மாநாட்டில் மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி கலந்துகொண் டார். அப்போது அவரிடம் அந்நிகழ்வின் மேடை யில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அந்த கேள்விகளில் ஒன்று சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் செல்வதற்கான உரிமை அளித்துள்ள உச்சநீதிமன்றத்தீர்ப்பு குறித்து மத்திய அரசின் கருத்து என்ன? என்கிற கேள்வியாகும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகுறித்து நான் உள் பட யாரும் கேள்வியை எழுப்ப முடியாது. ஏனென்றால், தற்பொழுது நான் மத்திய அமைச் சரவையில் அமைச்சராக உள்ளேன். ஆனால், பொதுஅறிவு என்று பார்க்கும்போது, மாதவிலக் கின் ரத்தம் தோய்ந்த பஞ்சுடன் நீங்கள் நண்பர்கள் வீட்டுக்குள் நடந்து செல்வீர்களா? செல்ல மாட் டீர்கள். அதேபோல்தான் மதிப்புமிக்க கடவுளின் இல்லத்துக்குள்ளும் செல்ல முடியுமா? என்று நினைக்கவேண்டும். அதுதான் வேறுபாடு. நான் வழிபடுவதற்கு உரிமை உண்டு. புனிதத்தைக் கெடுப்பதற்கு எனக்கு உரிமை கிடையாது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றார். இதுகுறித்து டுவிட்டர் சமூக ஊடகங்களில் பலரும் கண்டனம் வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் கண்டனத்தை வெளி யிட்டு வருகின்றனர்.
டுவிட்டரில் பதில்
அதனைத் தொடர்ந்து, அமைச்சர் ஸ்மிரிதி இரானி தம்முடைய டுவிட்டர் பக்கத்தில் தன்னு டைய கருத்து குறித்து விளக்கம் அளித்து வெளியிட்டார்.
இந்து மதத்தைச் சேர்ந்த நான் திருமணமான பின்னர் ஜொராஸ்டிரிய மதத்தைப் பின்பற்றினா லும், ஜொராஸ்டிரிய கோயிலான அக்கினிக் கோயிலுக்குள் சென்று வழிபடுவதற்கு நான் அனு மதிக்கப்படுவதில்லை. ஜொராஸ்டிரிய சமுதாயத் தினரை, அந்த மதக் குருக்களை நான் மதிக்கிறேன். என்னை அந்த கோயிலுக்குள் அனுமதிக்கவில் லையே என்று எந்த ஒரு நீதிமன்றத்தையும் நான் அணுகவில்லை. ஜொராஸ்டிரிய குழந்தைகளான இரண்டு குழந்தைகளின் தாயாக நான் இருக்கிறேன். இதேபோன்றுதான், பார்சியாக இருந்தாலும், பார்சி அல்லாதவர்களாக இருந்தாலும் மாதவிலக் கின்போது பெண்களை அக்கினிக் கோயிலுக்குள் செல்ல அனுமதிப்பதில்லை.''
இவ்வாறு அவர் டுவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் கண்டனங்கள்
ஸ்வாதி மாலிவால் டிவிட்டர் பதிவில்,
ஸ்மிரிதி இரானியின் கருத்து மிகவும் வெட்க கரமானது. மாத விலக்காகும் பெண்கள் என்ப வர்கள் இந்தப் பெண்மணிக்கு வெறும் சானிட்டரி பேட்(பஞ்சு) தானா? அவருக்கு மாதவிலக்காகும் போது அவர் வீட்டைவிட்டு வெளியே செல்வது கிடையாதா? அவருடைய நண்பர்களின் வீடு களுக்கு செல்லமாட்டாரா? மாதவிலக்கு என்பது இல்லை என்றால், குழந்தைகள் உண்டா? அவரு டைய கொடுமையான சொற்களால் ஆணாதிக்கம் மற்றும் பெண்கள்மீதான வெறுப்பையே மீண்டும் புகுத்துகிறார்.''
இவ்வாறு ஸ்வாதி மாலிவால் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அதேபோல் ஏராளமானவர்கள் மத்திய அமைச்சரின் கருத்துக்குக் கண்டனத்தை வெளியிட்டனர்.
சபரிமலைக் கோயிலுக்கு பெண்கள் அனு மதிக்கப்பட வேண்டும் என்கிற பாலின சமத்துவ, பாலின சமநீதிக்கான உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று முற்போக் கான பெண்கள், பக்தியில் உள்ள பெண்கள், பெண்ணிய உரிமைக்கான செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலரும் போராடுகின்ற நிலை ஏற்பட் டுள்ளது. கேரள அரசு உச்சநீதிமன்றத்தின் உத்த ரவை நடைமுறைப்படுத்துவதில் உறுதியாக உள் ளது.
கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி முதல் வர் பினராயி விஜயனுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று பக்தியை ஒரு கருவியாக்கிக் கொண்டு, அரசியல் சித்து விளையாட்டுகளை ஆர்.எஸ்.எஸ்-. பாஜக இந்துத்துவ அமைப்புகள் செய்து வருகின்றன.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மாபெரும் சதித்திட்டத்தை உருவாக்கி, கூலிப் பட்டாளங்களை களமிறக்கி அம்மாநில அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகின்ற வரிசையில் ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் பங்களிப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்ற அதேநேரத்தில் அதே கருத்துகளை வெளியிடுபவர்களாக மத்திய அமைச்சர்களும் உள்ளனர் என்பதன்மூலம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமைச்சர்களே கேலிக்கூத் தாக்குவதா என்கிற கேள்வி எழுகின்றது.
இந்நிலையில், அமைச்சர் ஸ்மிரிதி இரானி எப்போதோ தொலைக்காட்சித் தொடரில் நடித்த போது எடுக்கப்பட்ட காட்சிப்பதிவின் படத்தை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள் ளார். அவருடைய கைகள், வாய் கட்டப்பட்டுள்ள அந்தப் படத்தை பதிவேற்றி, நான் என்ன கூறி னாலும் விமர்சனங்கள் வெளியாகின்றன என்று குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்மிரிதி இரானிமீது வழக்கு
பெண்களை அவமதித்துப் பேசிய காரணத்தால் அமைச்சர் ஸ்மிரிதி இரானிமீது பீகார் மாநிலத்தில் அவர்மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்மிருதி இரானியின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பீகார் மாநிலம் சித்தமாரியைச் சேர்ந்த சரோஜ் குமாரி என்ற பெண் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவரது வழக்குரைஞர் தாக்கூர் சந்தன் சிங்தாக்கல் செய்துள்ள மனுவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பெண்களுக்கு இழுக்கு ஏற்படும் வகையில் பேசியுள்ளார். அவர் மீது உரிய நட வடிக்கை எடுகக வேண்டும் என தெரிவித்துள்ளார். இந்த மனு அக்டோபர் 29 -ஆம் தேதி விசார ணைக்கு வருகிறது.