ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ்., அய்.எஃப்.எஸ்.
அதிகாரிகள் குடியரசுத் தலைவர் - பிரதமர் - உச்சநீதிமன்றத்திற்குக் கடிதம்
புதுடில்லி,நவ.14 நாட்டின் அரசமைப்புச் சட்டத்தின் நடைமுறையை, வீதியில் நின்று கலகம் செய்தோ அல்லது மத்திய ஆட்சியைப் பயன்படுத்தி மோசமான அரசியல் நடவடிக்கை மூலமாகவோ சீர்குலைத்திட எந்தவொரு தனிநபருக் கும், குழுவிற்கும், அல்லது அரசியல் கட்சிக்கும் உரிமை கிடையாது என்றும், எனவே கேரள மாநிலம் கண்ணூரில் பாஜகவின் தலைவர் அமித்ஷா, சபரிமலை தொடர்பாக அர சமைப்புச்சட்டத்திற்கு விரோதமாகப் பேசியதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரி ஓய்வுபெற்ற அய்ஏஎஸ், அய்எஃப்எஸ் அதிகாரிகள் 30 பேர் தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோருக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்கள்.
ஓய்வுபெற்ற அய்ஏஎஸ் மற்றும் அய்எஃப்எஸ் அதிகாரிகளான எஸ்.பி.அம்புரோஸ், என்.பால பாஸ்கர், ஜி.பாலச்சந்திரன், வப் பாலா பாலச்சந்திரன், கோபாலன் பாலகோபால், சந்திரசேகர் பாலகிருஷ் ணன், மீரான் சி.பொர்வாங்கர், சுந்தர பர்ரா, ஆர்.சந்திர மோகன், சோம் சதுர்வேதி, கல்யாணி சவுத்ரி, அண்ணா டானி, சுர்ஜித் கே. தாஸ், விபாபூரி தாஸ், நிதின் தேசாய், எம்.ஜி. தேசசகாயம், சுசில் துபே, கே.பி. ஃபாபியான், ஆர். கோவிந்தராஜன், மீனாகுப்தா, வஜஹாத் ஹபிபுல்லா, சஜ்ஜத் ஹசன், ஜகதீஷ் ஜோஷி,வினோத் சி கன்னா, பிரிஜேஷ் கமார், பி.எம்.எஸ். மாலிக், ஹர்ஷ் மண்டர், அதிதி மேத்தா, சிவசங்கர் மேனன் மற்றும் சோபா நம்பீசன் ஆகியோர் இதில் கையெழுத்திட்டு உள்ளனர்.
அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: நாங்கள் ஓய்வுபெற்ற அய்ஏஎஸ், அய்எஃப்எஸ் அதிகாரிகளாவோம். கடந்த பல ஆண்டுகளாக மத்திய அரசிலும், மாநில அரசாங்கங்களிலும் பணியாற்றியிருக்கிறோம்.
நாங்கள் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவர்கள் அல்ல. அதே சமயத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மீது பாரபட்சமற்ற முறையில் நம்பிக்கை கொண்டவர்கள். நாங்கள் அதிகாரியாகப் பணியாற்றியபோது எந்த விதத்தில் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உறுதி எடுத்துக்கொண்டோமோ அத்தகைய உறுதிமொழியை தொடர்ந்து பின்பற்றி வருபவர்கள். கேரள மாநிலம், கண்ணூரில் 2018 அக்டோபர் 27 அன்று ஒரு பொதுக் கூட்டத்தில் பேசும்போது, நாட்டின் பிரதான ஆளும் கட்சியின் தலைவர், ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்ட இரண்டு விமர்சனங்களைக் கூறி யுள்ளார். உச்சநீதிமன்றம் அமல்படுத் தத்தக்க ஆணைகளை வெளியிட வேண்டும் என்பது ஒன்று. கேரளாவில்ஆட்சிபுரியும்மாநில அரசு, சபரிமலை கோவிலுக்குள் குறிப்பிட்ட வயது பெண்களை அனு மதிப்பது தொடர்பான போராட்டத்தில் அய்யப்பப் பக்தர்களைக் கைது செய்த தன்மூலமாகவும்,நசுக்கியதன்மூல மாகவும்,உச்சநீதிமன்றத்தின்உத்தரவை அமல்படுத்துவதில்மடத்தனமான துணிச்சலை மேற்கொண்டிருப்பதாக வும், எனவே அந்த அரசு பதவிநீக்கம் செய்யப்படவேண்டும்என்றுகூறி யிருப்பது மற்றொன்று. இவ்வாறு பேசியதன்மூலம், அவர் நாட்டின் உச்சபட்ச நீதிமன்றமான உச்சநீதிமன் றத்தையே கேள்விக்கு உட்படுத்தி, அவதூறை அள்ளி வீசியிருக்கிறார். மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவதிலிருந்து கேரள மாநில அரசு தன்னைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும் என்றும், இல்லையேல் தங்கள் கட்சியினர் வீதியில் இறங்கி ரகளை செய்து ஆட்சியை அகற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும்மிரட்டியிருக்கிறார்.மாநில அரசு, மத்திய அரசால் பதவி நீக்கம்செய்யப்படும்என்பதுபோன்ற அச்சுறுத்தலையும்ஏற்படுத்தி இருக்கி றார். நாட்டில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும், நாட்டின் அரசமைப்புச்சட்டத்திற்கும், சோசலிசம்,மதச்சார்பின்மைமற்றும் ஜனநாயகத்தைஉயர்த்திப் பிடித்திட வும் உண்மையான விசுவாசத்துடன் செயல்படுவோம் என்றும், நாட்டின் இறையாண்மை,ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உயர்த்திப் பிடித்தி டுவோம் என்றும் உறுதிமொழியை அளித்திட வேண்டும். அவ்வாறு அரசமைப்புச்சட்டத்தின்கீழ் செயல்பட மறுக்கும் அரசியல் கட்சியின் அங் கீகாரத்தை ரத்து செய்யக்கூடிய உரிமை தேர்தல் ஆணையத்திற்கு உண்டு.
நாட்டின்ஆளும்கட்சித்தலை வரின் பொதுக்கூட்ட உரையானது, அரசமைப்புச் சட்டத்தை ஒட்டுமொத்த மாக மீறிய நடவடிக்கையாகும். இப் பேச்சானது நம் நாட்டின் அரசிய லிலேயே மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்திடக்கூடும்.எனவே, தேர்தல் ஆணையம் மேற்படி பேச்சின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அரசி யல் கட்சியிடமிருந்து விளக்கம் கோரி,அரசமைப்புச்சட்டத்தின்மேன் மையைக் காப்பாற்றும் விதத்திலும், நாட்டின் சட்டங்களின் கீழும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். அதேபோன்று நாட்டின் பிரதமரும் தமது கட்சித் தலைவரின் பேச்சுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடையாது என்று அறிவித்திட வேண்டும். உச்சநீதிமன்றம் இவருடைய பேச்சு குறித்து சுயமாகவே கணக்கில் எடுத் துக்கொண்டு சட்டரீதியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். குடியரசுத் தலைவரும் நாட்டின் அரசமைப்புச் சட்டகண்ணியத்தைக் காப்பாற்றிடவும், அமல்படுத்திடவும் தேவையான நடவடிக்கைகள் எடுத் திட வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தங்கள் கடிதத்தில் கோரியுள்ளார்கள்.