Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

இந்துத்துவா வாதிகளை கண்டித்து திராவிடர் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

$
0
0

தாழ்த்தப்பட்டோரை இழிவுப்படுத்துவதா? பசுவின் பெயரால் வன்முறை தூண்டுதலா?

இந்துத்துவா வாதிகளை கண்டித்து
திராவிடர் கழகத்தின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜூலை 29 குஜராத்தில் செத்த பசுமாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்டோரை இழிவுப்படுத்துவதா? பசுவின் பெயரால் வன்முறை தூண்டு தலா? இந்துத்துவா வாதிகளை கண்டித்து இன்று திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன் மாபெரும் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.

தமிழர் தலைவரின் மனித உரிமை அறிக்கை


பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் செத்த பசுமாட்டின் தோலை உரித்த தாழ்த்தப்பட்ட சகோதரர்கள் நால்வரை இந்துத்துவாவாதி கள் கண்மூடித்தனமாக தாக்கி யதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 29.7.2016 அன்று திராவிடர் கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழர் தலைவர் 21.7.2016 அன்று மனித உரிமை அறிக் கையை வெளியிட்டிருந்தார்.

துணைத் தலைவர் தலைமையில் ஆர்ப்பாட்டம்

அதன்படி இன்று (29.7.2016) முற்பகல் 11 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் எழுச்சியுடன் பெரும் திரளான கழகத்தோழர், தோழியர்கள் பங்கேற்புடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் சு.குமார தேவன் வரவேற்புரையாற்றி னார். கழக வெளியுறவு செய லாளர் வீ.குமரேசன் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்கவுரையாற் றினர்.

கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மாநில தொழி லாளரணி செயலாளர் பெ.செல்வராசு, சென்னை மண்டல செயலாளர் வி.பன்னீர்செல்வம், மாநில மாணவரணி செயலா ளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், மண்டல மாணவரணி செயலாளர் பா.மணி யம்மை ஆகியோர் ஆர்ப்பாட்ட விளக்க ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாநில அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப் பினர் க.பார்வதி, மாநில இளைஞரணி துணைச் செய லாளர் பொழிசை கண்ணன், மாநில மாணவரணி துணைச் செயலாளர் நா.பார்த்திபன், சென்னை மண்டல இளை ஞரணி செயலாளர், ஆ.இர. சிவசாமி, சென்னை மண்டல மகளிரணி செயலாளர் செ.உமா ஆகியோர் முன்னிலை வகித் தனர்.

சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மாவட்ட பொறுப்பா ளர்கள் தாம்பரம் ப.முத்தை யன், பா.தென்னரசு, செ.உதய குமார், தே.ஒளிவண்ணன், செ.ர.பார்த்தசாரதி, கு.ஆறு முகம், த.ஆனந்தன் ஆகியோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத் தின் நிறைவாக தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக வழக்குரைஞரணி மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, பகுத்தறிவா ளர் கழகம் சேரலாதன், பொதுக் குழு உறுப்பினர்கள் சைதை எம்.பி.பாலு, நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் மற்றும் நாகூர் சி.பெரியார் செல்வன், சி.காமராஜ், வேலூர் செந்த மிழ்கோ, பொதுக்குழு உறுப் பினர் தருமபுரி தமிழ்செல்வன், போளூர் பன்னீர்செல்வம், விழிகள் பதிப்பக வேணு கோபால் தொழிலாளரணி நாக ரத்தினம், பாலு, ராசு, பழனிக் குமார், சிவக்குமார், மகேஷ், காரல்மார்க்ஸ், யுவராஜ், ரேவந்த், அமுதராசன், கீழப் பழுர் கே.எம்.உதயசூரியன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எல்.அய்.சி. பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஊழியர் நல சங்கத்தின் சார்பில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர் களுக்கு பயனாடை அணிவிக்கப்பட் டது.

வடசென்னை


வெ.மு.மோகன், பிரபாக ரன், தமிழினியன், நாத்திகன் சேகர்,ச.இ.முகிலரசு, ஜெ.கோபி, கு.ஜீவா, சா.தாமோதரன், செ. கலையரசன், வ.கலைச்செல் வன், சொ. அன்பு, திருவொற் றியூர் இராசேந்திரன், அன்பு செல்வன், கருங்குழி கண்ணன், ச.செல்வம், வின்சன், தளபதி பாண்டியன், து.இராஜசேகர், இரா.செந்தில், நாத்திகன் மோகன், பா.பார்த்திபன், சித் தார்த்தன், சுரேஷ், செஞ்சி ந.கதிரவன், பாலமுருகன்

மகளிரணி

தங்க.தனலட்சுமி, மு.பசும் பொன், க.சுமதி, மோ.விஜயா, ச.கற்பகம், த.மரகதமணி, இ.ப.சீர்த்தி, ச.இ.இன்பக்கனி, உ.மோகனப்பிரியா, தெய்வ மணி, தமிழ்ச்செல்வி, இந்திரா, மு.பவானி, அஜந்தா, வி.வளர் மதி, மு.சந்திரா முனு சாமி, மு.தமிழ்செல்வ¤

பெரியார் நூலக வாசகர் வட்டம்

ச.சேரன், இரா.ராச்சந்திரன், ச.சனார்த்தனன், பொன்.இராம சந்திரன், ஆ.வெ.நடராசன், சி.வ.வேலு, பெரியார் மாணாக் கன், எஸ்.பழனிசாமி, எல். ராஜமாணிக்கம், ஆர்.கோபால், கோ.அமரன்

கும்முடிப்பூண்டி கழக மாவட்டம்

ந,சனாதிபதி, கு.நாகராஜ்கே.என்.உதயசூரியன், வே.அருள், க.குமார், ந.கசேந்திரன், சோழவரம் சக்கரவர்த்தி, ஏ.முரளி, புழல் த.ஏழுமலை, புழல் க.ச.க.இரணியன், வ.இரவி, சோ.பாலு, மீஞ்சூர் இராஜ்குமார், காவாங்கரை சுகுமார், தொழிலதிபர் ஏழுமலை, ஏ.விஜயா

தாம்பரம்

கோ.நாத்திகன், தாம்பரம் மோகன்ராஜ், விடுதலைநகர் ஜெயராமன், அனகை சன்சரவணன், கே.எம்.சிகாமணி, கூடுவாஞ்சேரி ம.இராசு, கு.சோமசுந்தரம், தமிழினியன், ஜெனார்தனம், குணசேகரன், புலவர் சங்கரலிங்கம், விஜயகுமார், இராமலிங்கம், ஊரப்பாக்கம் ராமண்ணா, மேடவாக்கம் விஜய் ஆனந்த், இராகுல், கடப்பேரி அரங்க நாராயணன், தே.சுரேஷ், கலாநிதி, சுரேஷ், அரி, லட்சுமிபுரம் கமலகண்ணன், வழக்குரைஞர் உத்திரகுமார்

ஆவடி

ஜெய.தென்னரசு, கோ.முருகன், பெரியார் மாணாக்கன், சரவணன், செல்வி, மணிமேகலை, நாகராசு, நடராஜன், வேலு, கலைமணி, நெடுங்கிள்ளி, கணேசன், எழிலரசன், நாராயணன், முத்துகிருட்டிணன், கோபால், விமலன்
எல்.அய்.சி.பிற்படுத்தப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஊழியர் நலசங்கம்
கோ.சுந்தரமூர்த்தி, சி.குமார், ச.அய்யனார், பீ.பாலச்சந்திரன், ஏ.அழகுதுரை


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles