Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

இந்துத்துவாவாதிகளைக் கண்டித்து தலித் அமைப்புகள் வேலை நிறுத்தம்

$
0
0



இறந்த மாடுகளை இனி தூக்க மாட்டோம்!

நகராட்சிகளில் அழுகி நாறும் 200 கால்நடைகள்

அகமதாபாத், ஜூலை 30இந் துத்துவாவாதிகளைக் கண் டித்து குஜராத்தில் மாநில தலித் அமைப்புகள் கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டுள்ளன. இறந்த கால்நடைகளை இனி தூக்கிச் சுமக்கவோ, அவற்றை அப்புறப்படுத்தவோ மாட் டோம் என்று அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.

திண்டாட்டத்திற்கு...

இதனால் மாநிலம் முழு வதும், இறந்த கால்நடைகளை அப்புறப்படுத்த முடியாமல், சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகங்கள் திண்டாட்டத் திற்கு உள்ளாகி இருக்கின்றன.

பசுவைக் கொன்றுஅதன் தோலை உரித்ததாகச்சொல்லி, குஜராத் மாநிலம் உனா நகரில் தலித் இளைஞர்கள் நால்வரை,ஆர்எஸ்எஸ்சங்- பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள், சாலையில் நிற்க வைத்து இரும்புக் கம்பிகளால் அடித் துத் தாக்கினர். அவர்களை அரை நிர்வாணமாக்கி ஊர் வலமாகவும் அழைத்துச் சென்றனர். அவமானப்பட்ட அந்த தலித் இளைஞர்கள் விஷமருந்தி தற்கொலைக்கும் முயன்றனர்.

பல்வேறு தலித் அமைப்பினரும்

இச்சம்பவம் நாடுமுழு வதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தில் தலித்மக்கள் தன்னெழுச்சியாக போராட்டத் தில் இறங்கினர். அதனொரு பகுதியாக, தலித் மானவ் அதிகார் இயக்கம் என்ற குஜராத்தின் முக்கியமான தலித் அமைப்பின்தலைமை யில், பல்வேறு தலித் அமைப் பினரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குஜராத்தில் உள்ள தலித் மக்கள் பெரும்பான்மையாக இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். தோலை உரித்து அப்புறப்படுத்தும் பணியை செய்யக்கூடாது என்று அவர்கள் முடிவெடுத் துள்ளனர்.

இதனால் மாவட்ட நிர் வாகம் நாளொன்றுக்கு 200 கால்நடைகளின் தோல் உரிப்பு உள்ளிட்ட வேலைகளை, தங்களின் பணியாளர்களை வைத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மாட்டுத் தோல் உரிப்ப வர்களுக்கு அடையாள அட்டை வழங்கவேண்டும், அப்போதுதான் நாங்கள்பசு மாட்டு கொலையில் ஈடுபடு பவர்கள் அல்லர் என்பது தெரியவரும்;மேலும்ஒவ் வொரு வருவாய் வட்டத்தி லும் இறந்த மாடுகளின் தோலை உரிக்க தனியாக நிலம் வேண்டும்ஆகிய கோரிக்கைகளை வலியுறுத் தியுள்ளோம் என்று நவ்சர்ஜன் டிரஸ்டைச் சேர்ந்த நதுபார்மர் என்பவர் தெரிவித்துள்ளார்.

எங்களுக்கான பாதுகாப்பு, அடையாள அட்டை உள் ளிட்ட கோரிக்கைகள்நிறை வேற்றப்படும்வரை வேலை நிறுத்தம்தொடரும்; எங்கள் மீது செலுத்தப்படும்வன் முறைகள்பற்றி உனா சம்ப வத்துக்கு பிறகே மக்களுக்கு தெரியவந்துள்ளது; தினப்படி மாட்டுத் தோல் உரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் இத்தகைய வன்முறையை சந்தித்து வருகின்றனர். அரசு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

இறந்த கால்நடைகளை தோல் உரிப்பவர்கள்கடந்த ஒரு வாரமாகவேலை நிறுத் தத்தில் ஈடுபட்டிருப்பதால், நாங்கள் நகராட்சி ஊழியர் களைக் கொண்டே இப்பணி களை நிறைவேற்றி வருகி றோம் என்று சுரேந்திர நகர் மாவட்ட ஆட்சியர் உதித் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தலித் அமைப்பினர் வைத் துள்ள கோரிக்கைகள் குறித்து விவாதித்து நல்ல முடிவுக்கு வருவோம் என்றும் கூறியுள்ள அவர், இதுவரை சுரேந்திர நகரில் 88 கால்நடைகளின் தோல் உரிக்கும் பணியையும், அப்புறப்படுத்தும்பணி யையும் நகராட்சி ஊழியர் கள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களை வைத்தே செய்துள்ளதாகவும் குறிப் பிட்டுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles