தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 86ஆம் பிறந்த நாள் விழா 2,169 விடுதலை சந்தாக்கள் - கஜா புயல் நிவாரண நிதி ரூ.1,22,965
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழாவில் தி மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழின் ஆண்டு மலரை
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டார் (சென்னை பெரியார் திடல், 2.12.2018)
சென்னை, டிச.2 திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் பிறந்த நாளையொட்டி இன்று (2.12.2018) காலை சென்னை வேப்பேரி பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில்சுயமரியாதை நாள் பெரும் எழுச்சியுடன் கழகத் தோழர்களால் கொண்டாடப்பட்டது. விடுதலை சந்தா வழங்கும் விழா நடைபெற்றது.
நாகப்பட்டினம், திருவாரூர், வேதாரண் யம் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டப் பகுதிகளில் வீசிய கஜா புயலால் தங்களின் உடைமைகளை, வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கப்பட வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க விழா மேடையில் கஜா புயல் நிவாரண நிதி உண்டி யல் அமைக்கப்பட்டது.
தமிழர் தலைவரிடம் 2169 விடுதலை' சந்தா வழங்கல்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 86 ஆம் ஆண்டு பிறந்த நாளினையொட்டி இன்று (2.12.2018) பெரியார் திடலில் நடைபெற்ற விழாவில், தமிழர் தலைவர் அவர்களிடம் திராவிடர் கழக இளைஞரணி, மாணவரணி, மகளிரணி மற்றும் கழக மாவட்டங்களின் சார்பில், 2169 விடுதலை' சந்தாக்கள் வழங்கப்பட்டன.
கஜா புயல் நிவாரண நிதியாக தமிழர் தலைவர் ஆசிரியர், மோகனா ஆகியோர் ரூ.15ஆயிரத்தை உண்டியலில் செலுத்தி தொடங்கி வைத்தார்கள். அவரைத் தொடர்ந்து சாரை சாரையாக வந்த மனிதநேய செம்மல்கள் உண்டியலில் நிவாரண நிதியை அளித்தார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் தமிழகம் முழுவதுமிருந்து திரண்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் தமிழர் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்து கஜா புயல் நிவாரண நிதி, விடுதலை சந்தா மற்றும் உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா தொகைகளை வழங்கி மகிழ்ந்தார்கள்.
வரிசையாக மேடைக்குச் சென்று கழகக் குடும்பத்தினர் கழகத் தலைவர், கழகக் குடும்பத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உடன் பயின்ற வகுப்புத் தோழர்கள், அறிஞர் பெருமக்கள், நீதியரசர்கள், மருத்துவ வல்லு நர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் நேரில் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்ந்தார்கள்.
பெரியார் நுலக வாசகர் வட்டத் தலைவர் மயிலை நா.கிருஷ்ணன் தலைமையில் ஆளுயர ரோஜா மலர் மாலையை ஆசிரியர் அவர்களுக்கு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் ஏராளமானவர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
பிறந்த நாள் வாழ்த்து கருத்தரங்கம்
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமையில் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், மண்டலச் செயலாளர் தே.செ .கோபால், வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, கும்மிடிப்பூண்டி மாவட்டத் தலைவர் புழல் த.ஆனந்தன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் முன்னிலையில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி வரவேற்புரையாற்றினார். கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி அறிமுகவுரையாற்றினார். திமுக பொருளாளர் க.துரைமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தர சன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆற் றிவரும் பணிகளைப் பாராட்டி வாழ்த்து ரையாற்றினார்கள்.
ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு தமிழர் தலைவர் அறிவிப்பு
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஏற்புரையாற்றினார்.
டிச. 30இல் ஓசூரில் ஜாதி தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறும் என்று தமிழர் தலைவர் அறிவித்தார்.
கழக வெளியுறவு செயலாளர் வீ. குமரேசன், மாணவர் கழக மாநில செய லாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் இணைப்புரை வழங்கினர்.
விழா முடிவில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் நன்றியுரையாற்றினார்.
நூல் வெளியீடு
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் தி மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஆங்கில மாத இதழின் ஆண்டு மலர் 2018 வெளியிடப்பட்டது. நன்கொடை மதிப்பு ரூ.200.
திமுக பொருளாளர் துரைமுருகன் வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்களுக்கு மலர் வழங்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திரு மாவளவன் அவர்களிடமிருந்து பல ரும் நூலினைப் பெற்றுக்கொண்டார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் பிறந்த நாளில் வெளியிடப்பட்ட நூல்கள் விவரம் வருமாறு:
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில்... இயக்க வரலாறான தன் வரலாறு (பாகம் 6) (நன்கொடை ரூ.250), தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் 13ஆம் தொகுதி (நன்கொடை ரூ. 200), துரை. சக்கரவர்த்தி எழுதிய தமிழர் தலைவர் வீரமணி ஒரு கண்ணோட்டம் (நன் கொடை ரூ.40), வழக்குரைஞர் கி. மகேந்திரன் எழுதிய தமிழரின் பரி ணாமம் (நன்கொடை ரூ.40) ஆகிய நூல்கள் மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான பெரியார் பகுத்தறிவு நாட்குறிப்பு (ரூ.170), பெரியார் நாள்காட்டி (ரூ.120) ஆகியவை வெளியிடப்பட்டன.
பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், குருதிக்கொடை
சென்னை வேப்பேரி பெரியார் திடலில் அமையப்பெற்றுள்ள பெரியார் மணியம்மை மருத்துவமனையில் 2.12.2018 இன்று காலை முதல் குருதிக்கொடை சிறப்பு முகாம் மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் பிறந்த நாளை முன்னிட்டு காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை குருதிக்கொடை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பல்நோக்கு சிறப்பு மருத் துவ முகாம் நடைபெற்றது. பொது மருத்துவம், தாய் சேய் நலம், நீரிழிவு நோய், கண் மருத்துவம், காது மூக்கு தொண்டை மருத்துவம், பல் மருத்து வம், சிறுநீரக மருத்துவம் உள்ளிட்ட பல்துறைகளிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில் பரிசோதனைகள், மருத்துவ ஆலோச னைகள், சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
மு.க.ஸ்டாலின், ஈ.வெ.கி.ச.இளங்கோவன், வைரமுத்து வாழ்த்து
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 86ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (2.12.2018) நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் தலை வர்கள் வாழ்த்துத் தெரிவித்தார்.
விழா தொடக்கத்தில் திமுக தலை வர் தளபதி மு.க.ஸ்டாலின் தொலை பேசி வாயிலாக தமிழர் தலைவர் அவர் களைத் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டார். விழா நடைபெறும்போதே நேரிலும் வருகைதந்து மகிழ்வான இப்பெருவிழாவில் சிறப்பித்தார்.
மேனாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் மேனாள் தலைவருமாகிய ஈ.வெ.கி.ச.இளங்கோ வன் நேரில் வருகை தந்து பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன், எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகி யோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
கவிஞர் வைரமுத்து விழா மேடைக்கு நேரில் வருகைதந்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து வாழ்த்தினைத் தெரிவித்துக்கொண்டார்.
காங்கிரசு கட்சியின் பொருளாளர் நா.சே.ராமச்சந்திரன், மேனாள் சட்ட மன்ற உறுப்பினர் உ.பலராமன், செய்தி தொடர்பாளர் வழக்குரைஞர் சுதா, சீதாராமன் ஆகியோர் காங்கிரசு கட்சி யின் சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித் தார்கள்.
எழும்பூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், துறைமுகம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பி.கே.சேகர்பாபு, திமுக புரசை சின்னி கிருஷ்ணன் உள்பட பலர் விழாவில் பங்கேற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்னியரசு, செல்வதுரை, செல்வம் உள்பட பலர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்கள்.
தந்தை பெரியாரால் ஆசிரியரின் டாக்டர் என்று அழைக்கப்பட்டவரான காதுமூக்கு தொண்டை சிகிச்சை மருத் துவ வல்லுநர் காமேஸ்வரன் விழா மேடைக்கு வருகைதந்து வாழ்த்து தெரி வித்தார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளின் வகுப்புத் தோழர்கள் டாக்டர் இராஜசேகரன், உசேன், பேராசிரியர் திருக்குறள் பாஸ்கரன் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
மதிமுக சார்பில் அமைப்புச் செய லாளர் ஆ.வந்தியத்தேவன், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங் குட்டுவன், மாவட்டச் செயலாளர் ஜீவன் உள்ளிட்ட மதிமுக பொறுப்பா ளர்கள் பயனாடை அணிவித்து, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எழுதிய புத்தகங்களை வழங்கி வாழ்த்துத் தெரிவித்தார்கள். சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.ராஜன் மேனாள் நீதிபதி அக்பர் அலி மற்றும் நஜீமா பேகம், மேனாள் மாவட்ட நீதிபதி பரஞ்சோதி, மூத்த வழக்குரைஞர் தியாக ராசன், வரியியல் வல்லுநர் ச.ராசரத் தினம், சட்டக்கதிர் ஆசிரியர் வி.ஆர்.எஸ்.சம்பத், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர் அ.இராமசாமி, மூத்த வாக்குரைஞர் தியாகராஜன் ஆகி யோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு பயனாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
கவிஞர் காசிமுத்துமாணிக்கம், பேராசிரியர் மறைமலை இலக்குவனார், புலவர் பா.வீரமணி, கவிஞர் கண்மதி யன், கவிக்கொண்டர் மா.செங்குட்டு வன், அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் நலச்சங்க கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் கோ.கருணாநிதி, ஆடிட்டர் இராமச்சந்திரன் உள்பட ஏராளமானவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பெருமகிழ்வுடன் திரண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.
கழகப் பொறுப்பாளர்கள்
கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பொருளாளர் டாக்டர் பிறைநுதல் செல்வி, கழக சட்டத்துறைத் தலைவர் த.வீரசேகரன், கழகப் பொதுச்செயலாளர்கள் துரை. சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், கழக வெளியுறவு செயலா ளர் வீ.குமரேசன், கழக மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் வி.பன்னீர் செல்வம், ஊமை.செயராமன், த.சண் முகம், மற்றும் மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் பெருந்திரளமாக தமிழகம் முழுவதுமிருந்து திரண்டு விழாவில் கலந்துகொண்டார்கள்.
அமெரிக்கா கனெக்ட்டிகட் பகுதியி லிருந்து நெய்வேலி வெ.ஞானசேகரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.