Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

பிஜேபியின் எதிர்மறை அரசியலே தோல்விக்குக் காரணம்

$
0
0

கூட்டணிக் கட்சியான சிவசேனா உட்பட பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க.வுக்குக் கண்டனம்

புதுடில்லி, டிச.13- அய்ந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் பிஜேபி தோல்விக்குக் காரணம் அதன் எதிர்மறை அரசியலே என்று காங்கிரஸ் உட்பட பல கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன. பிஜேபியின் கூட்டணி கட்சியான சிவசேனாவும் குறை கூறியுள்ளது.

பாரதிய ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு

எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது சோனியாகாந்தி

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை யுடன் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேசத்திலும் அதிக இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அங்கு பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவளிக்க முன் வந்திருப்பதால் காங்கிரஸ் கட்சி ஆட்சி யமைப்பது உறுதியாகி உள்ளது.

இந்தி பேசும் இந்த மாநிலங்களில் பா.ஜனதாவிடம் இருந்து காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி இருப்பது மிகப்பெரும் சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த தேர்தல் வெற்றி குறித்து சோனியா காந்தி மகிழ்ச்சி அடைந்து உள்ளார். இது தொடர்பாக நேற்று அவர் கூறுகையில், பா.ஜனதாவின் எதிர்மறை அரசியலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. இந்த வெற்றியை வழங்கிய மக்களுக்கு நன்றி. இதற்காக உழைத்த கட்சியினருக்கும் பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.

மோடி மாயாஜாலம் தகர்ந்தது: யஷ்வந்த் சின்ஹா கருத்து

அய்ந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மோடி மாயாஜாலம் என்ற கருத்தை தகர்த்துவிட்டன. பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள இந்தத் தோல்வி, 2019 மக்கள வைத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அனைத் தும் ஓரணியில் திரள உந்துதலாக இருக்கும் என்று பாஜக முன்னாள் தலைவர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

யஷ்வந்த் சின்ஹா தேர்தல் முடிவுகள் குறித்து புதன்கிழமை கூறியதாவது:  5 மாநில தேர்தல் முடிவுகள், மோடி மாயாஜாலம் என்ற கருத்தைத் தகர்த்துள்ளது. இது, மக்க ளவைத் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள்வதற்கு உந்துத லாக இருக்கும்.

2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க இரு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு தேர் தலுக்கு முன்பாக தேசிய அளவிலான கூட்டணி ஒன்றை ஏற்படுத்த வேண்டும். இதன்மூலம் இருமுனைப் போட்டி ஏற்படு வதுடன், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் சிதறுவது தவிர்க்கப்படும் என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.

தேர்தல் முடிவுகள் மாற்றத்துக்கான தொடக்கம்: சரத் பவார்

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

சோனியாகாந்தி மீது நடத்திய தனிநபர் தாக்குதலைத் தவிர எந்த வகையிலும் பிரதமர் மோடி, செயல்படாதவர் என்பது தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி, காங்கிரஸை ஆதரிக்கும். அதேபோல, சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியும் காங்கிரசுடன் வலு வான கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஆளும் பாஜகவினர், ராகுல் காந்தியை பரிகசிக்கும் வகையில் பப்பு என விமர்சித்ததை மக்கள் சற்றும் விரும்ப வில்லை.  வரும் மக்களவைத் தேர்தலில் ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பி பாஜகவால் வாக்குகளைப் பெற முடியாது. மீண்டும் ராமர் கோயில் விவகாரத்தை எழுப்ப முயற்சித்தால் மக்கள் அவர்களை நம்ப மாட்டார்கள். தேர்தல் முடிவுகள் மாற்றத்திற்கான தருணம் உருவாகிவிட்டதையே காட்டுகிறது.  கடந்த நான்கரை ஆண்டுகளாக மத்தியில் ஆளும் பாஜகவினர் எடுத்த முடிவுகள் அனைத்தும் மக்களுக்கு பாதகமாக இருந்த தால்தான் மோடி அரசை மக்கள் புறக் கணித்துவிட்டனர் என்று தெரிவித்தார்.

பாஜக இல்லாத இந்தியாவே

மக்களின் விருப்பம்: சிவசேனா

சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளே டான 'சாம்னா'வில் தலையங்கத்தில் தெரி விக்கப்பட்டிருப்பதாவது:

"5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த வாக்குகள் மூலம், வானத்தில் பறந்து கொண்டிருந்த நபர்களை மீண்டும் பூமிக்கு மக்கள் வர செய்துள்ளனர். 4 முதல் 5 தொழிலதிபர்களின் விருப்பத்தின்படி நாடு ஆளப்படுகிறது. இது ரிசர்வ் வங்கி போன்ற முக்கிய அமைப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பாஜக முதலில் கூட்டணி கட்சிகளை இழந்தது. இப்போது முக்கிய மாநிலங்களை (மாநிலங்களில் ஆட்சியை) இழந்து விட்டது. மிகப்பெரிய பேச்சின் மூலம் தேர் தலில் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்பதை இத்தேர்தல் முடிவு நிரூபித்துள்ளது.

5 மாநிலங்களில் இருக்கும் மக்கள், பாஜக இல்லாத இந்தியா வேண்டும் என் பதை சூசகமாக தேர்தல் மூலம் தெரிவித் துள்ளனர்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது, மிகப்பெரிய கேலிக்கூத்து. இது நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைத்து விட்டது. இதனால் மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர், பணவீக்கம் அதிகரித்தது. அந் நேரத்தில் நமது பிரதமரோ, சர்வதேச அர சியலில் ஈடுபட்டிருந்தார். வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருந்தார். பிறகு, 4 மாநில தேர்தல்களுக்கு விமானத்தில் வந்தார். அவரது சிறுபிள்ளைதனமான பேச்சு, நம்பிக் கைகளாக நிறைந்திருந்தன. அதுவே அவ ருக்கு எதிராக திரும்பிவிட்டது" என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles