பா.ஜ.க. தொண்டர்களின் கேள்விக்கு பதிலளிக்க தெரியாத பிரதமர்
புதுச்சேரி, டிச. 30 -பிரதமர் நரேந் திரமோடியிடம் எழுப்பப்போகும் கேள்விகளை 48 மணி நேரத்திற்கு முன்ன தாகவே அளித்துவிட வேண்டும் என்று அக்கட்சியினருக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.
இந்நிலையில், ‘பிரதமர் மோடி யைப் பின்பற்றி, மாணவர்களும், தாங்கள் தேர்வு எழுவதற்கு 48 மணி நேரம் முன்னதாகவே கேள்விகளை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் என்ன செய்வது?’ என்று ‘தி பிரிண்ட்’ செய்தி ஊடகம் கிண்டல் செய்துள்ளது.
பிரதமர் நரேந்திரமோடி, அண்மை யில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில பாஜக தொண்டர்களுடன் காணொளிக் காட்சி மூலமாக உரையாடினார்.
பதிலளிக்க தெரியாத மோடி
கட்சியினர் கேட்ட கேள்விகளுக்கும் பதிலளித்தார். அப்போது, புதுச் சேரியைச் சேர்ந்த நிர்மல்குமார் ஜெயின் என்ற பாஜக தொண்டர், “நடுத்தர வர்க்க மக்களிடம் வரியை வசூலிப் பதில் மட்டுமே நமது அரசு குறியாக உள்ளது; பதிலுக்கு நடுத்தர வர்க்கத் தினருக்கு நாம் என்ன செய்தோம்?” என்று இந்தி யில் கேள்வி எழுப்பினார்.இப்படியொரு தடாலடியான கேள்வி வரும் என்று எதிர்பார்க்காததால், மோடியின் முகம் திடீரென சுருங்கிப் போனது. ‘நீங்கள் வியாபாரி. வர்த்தக ரீதியாக பேசு கிறீர்கள்’ என்று பதி லளித்த மோடி, ‘வணக்கம் புதுச்சேரி’ என்று அத்துடன் ஒட்டுமொத்த கலந் துரையாடலுக்கும் மங்களம் பாடிவிட்டு கிளம்பி விட்டார்.பொதுவாக பிரதமர் மோடிக்கு கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாது. அதாவது பதிலும் தெரியாது; பதில் சொல்லவும் தெரியாது என்பது தான் நெடுநாள் குற்றச்சாட்டு.
பா.ஜ.க. தீவிர ஆலோசனை!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும், இதையே அண்மையில் கூறியிருந்தார். செய்தியாளர்களைச் சந்திப் பதற்கு, பிரதமர் மோடியைப் போல, ஒருநாளும் நான் அஞ்சியதில்லை என்று மன்மோகன் விளாசியிருந்தார்.அப்பேற்பட்ட மோடியிடம், சொந்தக் கட்சிக்காரரே திடீரென ஒரு கேள்வியை கேட்டதும் ஆடிப்போய் விட்டார். பிரச்சினை இத்துடன் முடியவில்லை. அடுத்து வரும் காலங்களிலும், கலந் துரையாடல் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டியது இருப்பதால், தொண் டர்கள் எப்படியெல்லாம் கேள்வி கேட்பார் களோ என்ற அச்சம் பிரதமர் மோடியை பீடித்தது. இதனைத் தவிர்ப் பதற்கு என்ன செய்யலாம் என்று, பாஜக தலைமையும் தீவிர ஆலோசனை மேற்கொண்டது.
கேள்விகளை பார்த்து பயம்!
அதன் முடிவில், புதிய வழியைக் கண்டுபிடித்துள்ள பாஜக தலைமை, பிரதமர் மோடி உட னான நேர்காணலில் பங்கேற்ப வர்கள், தங்களின் கேள்வி களை வீடியோ பதிவாக 48 மணிநேரத் திற்கு முன்னதாகவே அனுப்பி வைத்து விட வேண்டும் என்று உத்தரவு போட்டுள்ளது. இந்த உத்தரவே பிர தமர் மோடியின் கேள்வி மீதான அச் சத்தையும் அப்பட்டமாகவும் வெளிக் காட்டி விட்டது. இதைக் குறிப் பிட்டுத்தான் ‘தி பிரிண்ட்’ ஊடகம் தற்போது மோடியை கிண்டலடித் துள்ளது. மாணவர்கள்தான் தேர்வின் போது என்ன கேள்வி வருமோ? என்று பயப்படுவார்கள். ஆனால், பிரதமர் மோடியே கேள்விகளைப் பார்த்து பயப்படும்போது, மாணவர்கள் பாவம் என்ன செய்வார்கள்? என்று கூறி யுள்ளது. அத்துடன், மோடியைப் போல, மாணவர்களும் 48 மணிநேரத் திற்கு முன்னதாகவே தங்களுக்கு கேள் விகளை வழங்கி விடுமாறு கூற முடி யுமா? என்று கேட்டுள்ளது.