Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

"ஆரியர்கள் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களே"மீண்டும் உறுதி செய்த மரபணு ஆய்வுகள்

$
0
0

புதுடில்லி, ஜன. 4   இந்திய மனித இனம் குறித்த மரபணு ஆய்வில் குறிப்பிட்ட பிரிவு மக்கள் மத்திய ஆசியாவின் மேய்ச்சல் நிலப்பகுதியில் இருந்து வந்தவர்கள் என்று மரபணு ஆய்வாளர் டோனி ஜோசப் பிபிசி--க்கு தனது ஆய்வின் முடிவுகள் குறித்து பேட்டியளித்துள்ளார். இதன் மூலம் ஆரியர்கள் மத்திய ஆசியாவில் இருந்துவந்தவர்கள் தான் என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பரந்து விரிந்த இந்திய தீபகற்ப பகுதியில் வாழ்ந்த மண்ணின் மைந்தர்கள் யார் என்ற கேள்வி நீண்ட காலமாகவே தொடர்ந்து இருந்துகொண்டு வருகிறது, ஆனால் அரசியல் அதிகாரம் மிக்க பதவிகளில் அமர்ந்திருக்கும் பார்ப்பனர்களால் ஆரியர்கள் வருகை குறித்த உண்மைத் தகவல் நீண்டகாலமாகவே மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

சமீபகாலமாக கடந்த சில ஆண்டுகளாக இது தொடர்பான ஆய்வறிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கின்றன.

பார்ப்பனர்களின் தில்லு முல்லு

"இந்திய நாகரிகம் என்பது ஆரியர்களால் உருவாக்கப்பட்டது. கால்நடை மேய்க்கும், குதிரை ஓட்டும் அந்த நாடோடி இனக்குழு இந்திய நாகரிகத் தைக் கட்டி எழுப்பியது. அவர்கள்தான் வேதங்களை எழுதினர்." இது ஆரியர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் பார்ப்பனர்கள் கூற்று. மேலும் தங்கள் பிறப்பிடம் இந்தியாதான் என்பதும் ஆரியர்கள் வாதம். இங்கிருந்தே ஆசியா, அய்ரோப்பா ஆகிய நாடுகளுக்கு பரவினோம். இப்போது இந்தியா மற்றும் அய்ரோப்பாவில் பேசப்படும் இந்தோ - அய்ரோப்பிய மொழிகளை உருவாக்கியது தாங்கள்தான் என்கிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மத்திய அய்ரோப்பாவைச் சேர்ந்த இனவரவியலாளர்கள் மற்றும் ஹிட்லர், ஆரிய இனம் மேலான இனம் என்று கருதினர். நார்டிக் மரபைச் சேர்ந்த இனம் அது என்றார்கள்.

இது குறித்து ஆய்வாளர் டோனி ஜோசப் கூறும் போது இந்தியாவின் முந்தைய நாகரிகம், அதாவது வடமேற்கில் இருந்த சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சி அடைந்தபின் ஆரியர்கள் இந்த பகுதிக்கு வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த சிந்து வெளி நாகரிகமானது, எகிப்திய மற்றும் மெசோ போடாமிய நாகரிக காலகட்டத்தை சேர்ந்தது, ஆரியக் கலாச்சாரத்திற்கு முற்றிலும் எதிரான திராவிடக் கலாச்சாரம் என்று சான்றுகளுடன் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால்,அராப்பா, மோகஞ்சாதோரே சான்றாக இருக்கும் சிந்துவெளி நாகரிகம்தான் ஆரிய நாகரிகம், வேத நாகரிகம் என்று இந்துத்துவ அமைப்பினர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். வரலாற்றுச்சான்றுகளை சிதைத்து அதை ஆரியநாகரிகமாக மாற்ற முற்பட்டு வருகின்றனர்.

வாஜ்பாய் ஆட்சி செய்த மோசடிகள்!

முக்கியமாக  2014 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபின் ஆரிய நாகரிகம் என்ற கோட்பாடு வலிந்து அனைத்து தளங்களிலும் திணிக்கப்பட்டு வருகிறது, ஏற்கெனவே வாஜ்பேயி ஆட்சியில் திராவிட என்ற வார்த்தைகளைத் தேடித்தேடி அழித்தொழித்தனர். முக்கியமாக இந்தியாவில் மிகவும் பிரபலமான மும்பையில் உள்ள பிரின்ஸ் வேல்ஸ் அருங்காட்சியகம் சத்திரபதி சிவாஜி அருங்காட்சியகம் என்று பெயர் மாற்றப்பட்டது, அப்படியே அங்கு இருந்த சிந்துச்சமவெளி நாகரிகத்தின் பொருள்கள் மீது எழுதப்பட்டிருந்த திராவிட நாகரிகத்தினர் என்ற வார்த்தை அகற்றப்பட்டு அடையாளம் தெரி யாத இனக்குழு (Unidentified civilization) என்று மாற்றி னார்கள்.   இருப்பினும் தொடர்ந்து இனக்குழுக்களிடையே ஆன மரபணு ஆய்வுகள் இந்திய தீபகற்பத்தில் வாழ்ந்த மக்கள் தனித்துவமான அதாவது திராவிட இனக் குழுக்களே என்று உறுதிசெய்கிறது, அதே போல் ஆரியர்களையும் அடையாளம் காட்டுகிறது, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மரபணுவிய லாளர் டேவிட் ரெய்ச்சின் ஆய்வு முடிவானது 2018 மார்ச்சில் வெளியானது. அவருடன் உலகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த,வரலாறு, தொல்லியல், மானுடவியல், மரபணுவியல் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 92 அறிஞர்கள் இந்த ஆய்வில் பணியாற்றினார்கள்.

மிகப்பெரிய மனிதக் குடிபெயர்வு கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருக்கிறது. அதாவது ஆரியர்களின் வருகை  இன்றைய கஜகஸ்தான் பகுதியிலிருந்து வந்திருக்கலாம் என அனுமானிக்கிறார்கள். குதிரை செலுத்துவதில் வல்லுநர்களான அவர்கள் சமஸ்கிருதத்தின் முந்தைய மொழி வடிவத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். பலியிடும் பழக்கத்தையும், வேதப் பண்பாட்டையும் உருவாக்கியது அவர்களே.

இதன் மேல்தான் பீட்சாவின் பிற பகுதிகள் அமைக்கப்பட்டன. அதாவது இந்திய மக்களின் மரபணுவை சோதனை செய்தால், அது 50 முதல் 65 சதவீதம் இந்தியாவில் உள்ள பூர்வீக மக்கள் ஹரப்பன் (சிந்து சமவெளி) நாகரிக மக்களின் மரபணுவை ஒத்து இருக்கிறது.

ஆனால், தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் இதை முற்றிலுமாக மறுக்கின்றனர். அவர்கள் இந்திய வரலாற்றின்  உள்ளடக்கத்தை மாற்றி அமைக்க முயற்சிக்கிறார்கள். ஆரியர்கள் வெளியிலிருந்து குடிபெயரவில்லை என்கிறார்கள். ஆரியர்கள் வருகைக் கோட்பாட்டை முன் வைக்கும் முன்னணி வரலாற்று ஆய்வாளர்களுக்கு மாறாக சமூகவலைதளம் மற்றும் பொதுத்தளத்தில் கடுமையாக கருத்துத்தாக்குதலை மேற்கொள்கின்றனர்.  இந்திய ஆளும் வர்க்கமும் வேத பண்பாட்டைப் முன்னெடுத்துச் செல்வதாக உள்ளது. மனிதவள இணை அமைச்சர் சத்தியபால் சிங், "வேத கல்விதான் நம் குழந்தைகளுக்கு சிறந்தது" என்று கூறி இருந்தார்.

பல்வேறுதரப்பட்ட மக்கள் குழு கலப்பது தங்களின் இனத் தூய்மைக்கு ஊறு விளைப்பதாக கருதுகிறார்கள். ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பதை ஒப்புக்கொள்ள மறுப்பதற்கு மற்றொரு காரணம், வெளியிலிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் கூறும் முகலாயர்கள் போல தாங்களும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்பது போலாகிவிடும் என்பதால்தான்.

சரஸ்வதி நாகரிகமா?

வெறும் தத்துவ விவாதங்களாக மட்டும் முன்னெடுப் பதை இந்துத்துவ சக்திகள் விரும்பவில்லை, ஆகவே தான் சிந்துவெளி நாகரிகம் இருந்த இந்திய பகுதிகளான அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களில் ஆளும்  பா.ஜ.க. அரசுகள் ஹரப்பன் நாகரிகத்தை சரஸ் வதி ஆற்று நாகரிகமெனப் பெயர் மாற்றக்கோரி இருக்கிறது. வேதத்தில் சரஸ்வதி ஆறு என்ற ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.மேலும் சரஸ்வதி நதி ஓடுவதாகக் கூறி பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு, பொங்கும் தண்ணீர் ஊற்றுக்களை எல்லாம் சரஸ்வதி ஆற்றின் அடையாளம் என்று கூறி அதை வரலாற்றில் தொடர்ந்து பாடமாக சேர்த்து வருகின்றனர்.

சு.சாமிகளின் ஆத்திரம்

குஜராத் அரசு மேற்கு கட்ச் பகுதியில் இருக்கும் தொல்லியல் துறைக்கு சொந்தமான சிந்துசமவெளி நாகரிக நகர எச்சங்கள் உள்ள பகுதிக்கு இருக்கும் பண்டைய பெயரான திராவிட என்ற பெயரை தொளவீரா என்று மாற்றி அதற்கு அங்கு உள்ள பிரபல தொளவீரேஷ்வரின் பெயர் என்று புதிய பொய்யைக்கூறி அதை வரலாற்றுப்படுத்திவருகிறது.  ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ஆய்வாளர் டோனி ஜோசப்பின் புதிய ஆய்வின் முடிவுகள் இந்துத்துவவாதிகளுக்குப் பேரதிர்ச்சியாக உள்ளது. இதன் முடிவுகளும், இதில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரங்களும் சுத்தப் பொய் என்று சிந்துசமவெளி நாகரிக ஆய்வாளர் பேராசிரியர் டேவிட் ரெய்சின் கருத்தை சுப்பிரமணிய சுவாமி  கடுமையாக மறுத் துள்ளார். அவர் கூறும்போது, வெளியில் இருந்து வந்த ஆங்கிலேய ஆய்வாளர்கள் இங்குள்ள சமூக மக்களின் வாழ்க்கையைத்தீர்மானிப்பதை ஏற்க முடியாது, ஆய்வுகள் பல காலத்திற்கேற்றாற்போல் மாற்றம் கண்டுகொண்டே இருக்கும், ஆகவே பொய் யர்களின் பொய் ஆய்வுகள் மீண்டும் ஒருமுறை பொய்யாகிவிடும் என்று ஆய்வாளர்களை பொய்யர்கள் என்று கூறியிருந்தார் என்பது நோக்கத்தக்கது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles