சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்குத் தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ஒளிப்பதிவாளர் கே.வி.மணி, இயக்குநர் மீரா கதிரவன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, கவிஞர் கண்ணிமை ஆகியோருக்கு பெரியார் விருதினை'' திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர்.
பெரியார் குத்து'' என்ற தனியிசைப் பாடலை உருவாக்கிய குழுவினரான பாடலாசிரியர் மதன் கார்க்கி, இசையமைப்பாளர் ரமேஷ் தமிழ்மணி, பாடலைப் பாடி நடனமாடிய நடிகர் சிலம்பரசன், தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, சஞ்சய் ராகவன் ஆகியோருக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து, பெரியார் சிலை''யினை நினைவுப் பரிசாக வழங்கினார்.