இந்திய உளவுத் துறையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் குற்றச்சாட்டு
புதுடில்லி, மார்ச் 3 தேர்தலுக்காக பிரதமர் மோடி மோதலைத் தூண்டுகிறார் என்று இந்திய உளவுத் துறையின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் கூறியுள்ளார்.
இந்திய உளவுத் துறையின்(Intelligence Bureau) சிறப்பு இயக்குநராக வும், வெளிநாடுகளுக்கான உளவுப் பிரி வான ‘ரா’ (Research and Analysis Wing) அமைப்பின் தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர் அய்பிஎஸ் அதிகாரி ஏ.எஸ்.துலாத். குறிப்பாகச் சொன்னால், 1999 - 2000 ஆண்டுகளுக்கு இடையே நடைபெற்ற கார்க்கில் போரின்போது, ‘ரா’ அமைப்பின் தலைவராக இருந் தது இவர்தான். ஜம்மு - காஷ்மீர் மாநி லத்திற்கான பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகராகவும் செயல்பட்டுள்ளார்.
தற்போது, இந்தியா - பாகிஸ்தான் நாடுகளிடையே போர்ப் பதற்றம் ஏற் பட்டுள்ள பின்னணியில், ‘தி கேரவன்’ இணையதள ஏட்டிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
புல்வாமா தாக்குதலுக்குப் பிந்தைய இந்திய அரசின் நடவடிக்கைபற்றி கருத்துக்கூறவிரும்பவில்லை. ஆனால், பாகிஸ்தானின் கைபர் பக் துங்வா மாகாணத்தில் உள்ள பாலகோட் பகுதி யில் இந்தியா நடத்திய விமானப்படைத் தாக்குதலுக்குப் பின்னரும், தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்தையும் பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறிய விதம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.
இதன்மூலம் பாகிஸ்தானிலும், சர்வ தேச அளவிலும் இம்ரான்கான் நல்ல பெயரைச் சம்பாதித்துள்ளார். அதேநேரம், இந்த விமானத் தாக்குதல்மூலம் நரேந் திர மோடிக்கு, சர்வதேச அளவில் மிகப்பெரிய அளவிற்கு கெட்டப் பெயர் ஏற்பட்டிருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு, வான்வெளித் தாக்குதல் நடத்துவது தவிர்க்க முடியா மல் போனதற்கு சிலரின் தேர்தல் மன நிலையே காரணம்.
உண்மையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வேண்டுகோளை ஏற்று, அமைதிப் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்து இருக்கவேண்டும். அதன் மூலம் பதற்றத்தையும் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும். ராஜ தந்திரம்தான் தற்போது தேவை. இங்கு பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத் துவதோ அல்லது நடத்தாமல் போவதோ, அது அரசின் முடிவு. குத்துச்சண்டையில் 3 அடிப்படைச் சுற்றுக்கள் உண்டு.
அதன்படிஇப்போதுஆடிக்கொண் டிருப்பது முதல் ரவுண்ட். ஆனால், சூழ்நிலை தானாகவே விளையாடி முடித்து விட்டது. கடந்த 30 ஆண்டுகளாகவே, இந்தியா தீவிரவாதத்தை தனது பக்கத் தில் வைத்துக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானில் தீவிரவாத தொழிற்சாலை இருக்கிறது என்பதிலும், அதில் தீவிர வாதிகள்உருவாக்கப்படுவதிலும்எவ் வித சந்தேகமும் இல்லை. ஆனால், குறிப்பிட வேண்டியது என்னவென் றால், தீவிரவாதத்தால் பாகிஸ்தானும் பாதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தா னுக்கு, இந்தியா போன்ற அண்டை நாடுகளின் அச்சுறுத்தலைவிட, பாகிஸ் தானிலிருக்கும் தீவிரவாத இயக் கங்களால்தான் பாதிப்பு அதிகம். அப்படியொரு ஆபத்தான அண்டை நாட்டை வைத்துக் கொண்டுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். காஷ்மீர் விவகாரத்தை ஒவ்வொரு பிரதமரும் சோதித்துப் பார்த்திருக்கிறார்கள்.
வாஜ்பாய் மூன்றுமுறை சோதித்துப் பார்த்திருக்கிறார். கார்கில் போர், விமானக் கடத்தல், நாடாளுமன்ற வளாகத் தாக்குதல் ஆகியவற்றை அவர் எதிர்கொண்டிருக்கிறார். அவர் கடைசிவரை ஆத்திரமூட்டும் செயலில் ஈடுபட்டது கிடையாது. மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது, மும்பைத் தாக்குதலை எதிர்கொண்டார். காஷ்மீர் பிரச்சினையில் வாஜ்பாயோடு, மோடியை ஒப்பிடவே முடியாது. அனை வரும் இதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
வாஜ்பாய் கடைசிவரைக்கும், காஷ் மீர் பள்ளத்தாக்குப் பகுதி மக்கள்மீது மரியாதை வைத்திருந்தார். ஆனால், மோடி ஆட்சியில் இப்போது என்ன நடக்கிறது? மோடி பிரதமரான ஆரம் பத்தில் பள்ளத்தாக்கு மக்களுக்கு ஏராளமான நம்பிக்கை இருந்தது. ஆனால், ராணுவ நடவடிக்கை மூலம் காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை அவர் உணரவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்சினையை நிறையவே குழப்பிவிட்டோம். வாஜ் பாயும், மன்மோகன்சிங்கும் குறை வாகத்தான் பேசுவார்கள். ஆனால், செயல்பாடு அதிகமாக இருக்கும். ஆனால், மோடியோ இந்த விவகாரத்தை பெரிதாக்கப் பார்க்கிறார். பிரதமரின் இந்த நடவடிக்கைகளை மக்களவைத் தேர்தலையொட்டிய நிகழ்வாகவே பார்க் கிறேன்.
இவ்வாறு ஏ.எஸ்.துலாத் கூறி யுள்ளார்.