Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

பி.ஜே.பி. அரசா - தனியார்மய அரசா?

$
0
0

பாரத் பெட்ரோலியம் உள்பட 5 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாம்!

புதுடில்லி, நவ.21 நாட்டின் 2 ஆவது மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமான பாரத் பெட்ரோலி யத்தின் பங்குகளை விற்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித் துள்ளது.

மத்திய அரசு ஒப்புதல்

டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங் களின் பங்குகளை விற்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு பேசிய, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,

"பாரத் பெட்ரோலியத்தில் 53.29 சதவிகித பங்குகளை விற்க முடி வெடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன் குறிப்பிட்ட நிர்வாகத்தையும் தனி யாரிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும்’’ கூறினார்.

"அதில், இந்திய கப்பல் கார்ப்ப ரேசனின் 63.75% பங்குகளும், அதன் நிர்வாகமும் தனியாருக்கு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதே போல், இந்திய கண்டெய்னர் கார்ப் பரேசனின் 30.8% பங்குகளும் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளன."

"மேலும், THDC எனும் நீர்மின் உற்பத்தி நிறுவனத்தின் 74.23% பங்குகளும், வடகிழக்கு மின் உற்பத்தி கார்ப்பரேஷ் நிறுவனமான நிப்கோ வின் 100% பங்குகளும் தனியாருக்கு விற்கப்படுவதாக குறிப்பிட்டார்."

எதிர்காலம் கேள்விக்குறி

ஏற்கெனவே நாட்டின் பல பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கிவரும் மோடி அரசு தற்போது பாரத் பெட்ரோலி யமும் தனியார் மயமாக்கப்பட்டதால் அதில் பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

பொருளாதார சரிவை சரிசெய்ய எந்த திட்டமும் வகுக்காமல் வழக் கம்போல் நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் வேலையில் மட்டுமே மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட் சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மேலும், இந்த பாரத் பெட்ரோலி யமும் அம்பானியின் வசம் செல்ல இருப்பதாகவும் முன்பு தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles