87 வயதிலும் இத்தனை வேகத்தில் பணியாற்றும் ஆசிரியர் போல ஒரு தலைவரைப் பார்க்க முடியாது! - சுப.வீ.
தி.க.வையும், கம்யூனிஸ்டுகளையும் எண்ணிக்கையை வைத்து மதிப்பிட வேண்டாம் - தியாகத்தில் முகிழ்த்த இயக்கம் இவை!
ஆசிரியரின் பிறந்த நாளில் அவரது மகனாக கலந்துகொள்கிறேன் - தோழர் முத்தரசன் நெகிழ்ச்சியுரை
நமது சிறப்புச் செய்தியாளர்
சென்னை, டிச.3 87 வயதிலும் அயராது பாடுபடும் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். அவரை இழிவுபடுத்த முயற்சிப்பதன்மூலம் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்ளவேண்டாம் - இளைஞர்களுக்கு வரலாற்றைச் சொல்லிக் கொடுப்போம் என்று தோழர்கள் முழக்கமிட்டனர்.
சென்னை பெரியார் திடலில் நேற்று (2.12.2019) நடை பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவில் தோழர்கள் ஆற்றிய உரை வருமாறு:
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 87 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா (டிசம்பர் 2) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குவைத்தில் தோழர் இரா.சித்தார்த்தன் அவர்களின் தொழிலகத்தில் கழகத் தோழர்கள் புடைசூழ திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், குவைத் உலகத் தத்துவ ஞானி பெரியார் படிப்பகத்தின் காப்பாளர் செல்லபெருமாள் ஆகியோர் தமிழர் தலை வரின் சிறப்புகளை எடுத்துக் கூறி, பிறந்த நாள் கேக்கினை வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.
சென்னையில்...
வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புரசைவாக்கம் தாணா தெருவில் நடைபெறுவ தாக அறிவிக்கப்பட்டு இருந்த ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் மழையின் காரணமாக சென்னை பெரியார் திடலில் நடந்தது.
பிறந்த நாள் விழா கூட்டத்திற்கு முன்னதாக தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழகப் பிரச்சார செயலாளர் வழக்கு ரைஞர் அருள்மொழி, கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வீ.பன்னீர்செல்வம், சென்னை மண்டலக் கழக செயலாளர் தே.செ.கோபால், வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், தென்சென்னை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் இரா.வில்வநாதன், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.முத்தையன், மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை மற்றும் கழகத் தோழர் கள் புடைசூழ தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு வாழ்த்தொலி எழுப்பப்பட்டது.
கலகலப்பூட்டும் ‘இனநலம்' கலைக்குழுவினரின் நிகழ்ச்சியோடு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் தொடங் கப்பட்டது.
விழாவுக்குத் தலைமை வகித்த வடசென்னை மாவட்டக் கழகத் தலைவர் வழக்குரைஞர் சு.குமார தேவன் தனது உரையில், கலைஞரை சிறுமைப்படுத்திய காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி யைக் கண்டித்து சங்கர மடத்தின் மோசடிகளை விளக்கி பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட சிறப்புக் கூட்டங்களில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய தொடர் சொற்பொழிவுதான் ‘‘சங்கராச்சாரியார்-யார்?'' எனும் நூலாக வெளிவந்தது. இன்றைக்குப் பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் அந்த நூல் பெரிதும் பயன்படுகிறது என்று குறிப்பிட்டார்.
கழகப் பிரச்சார செயலாளர்
வழக்குரைஞர் அருள்மொழி
தந்தை பெரியார் மறைந்த இந்தக் காலகட்டத்தில், ஆசிரியர் அவர்கள் தலைமையேற்ற காலகட்டத்தில் இயக்கத்தை அவர் நடத்திச் சென்ற சிறப்பையும், சந்தித்த சவால்களையும் மிகவும் நேர்த்தியாக எடுத்து ரைத்தார்.
திராவிடர் கழக மாநாடுகளில்தான் ஆண்களுக்கு தனி இடம், பெண்களுக்குத் தனி இடம் என்று தனியாக ஒதுக்கப்படுவதில்லை. குடும்பம் குடும்பமாக மாநாட்டுப் பந்தல்களில் அமர்ந்து அவரவர் கொண்டு வந்த சாப்பாட்டை கலந்து பகிர்ந்து உண்ணும் பண்பாட்டைப் பார்க்க முடியும்.
விருது நகரில் நடைபெற்ற பகுத்தறிவாளர் கழகப் பொன்விழா மாநாட்டில் பங்கேற்ற டாக்டர் சாலினி அவர்கள், முகநூலில் பதிவிட்ட ஒன்றை எடுத்துக்காட் டினார்.
திராவிடர் கழக ஆண் தோழர்கள் மத்தியில் ஒரு பெண்ணாகப் பயணித்த நான், எந்த அளவு மதிக்கப்பட்டேன் என்பதைப் பெருமிதத் தோடு குறிப்பிட்ட வழக்குரைஞர் அருள் மொழி - தந்தை பெரியார் காலந்தொட்டு ஆசிரியர் அவர்களின் காலம்வரை தொடரும் கழகத்தின் பெரும் பண்பை சிலாகித்துப் பேசினார்.
துணைத் தலைவர் கலி.பூங்குன்றன்
87 ஆண்டில் 77 ஆண்டு பொது வாழ்க்கை என்னும் விகிதாச்சாரம் தமிழர் தலைவர் அவர்களுக்கு மட்டுமே உரித்தா னதாகும்.
தந்தை பெரியார் மறைந்த நிலையில், திராவிடர் கழகத்தின் எதிர்கால நிலை என்ன என்று கேள்வி எழுப்பியவர்கள் உண்டு. அன்னை மணியம்மையார் அவர் கள் குறுகிய கால அளவுதான் தலைமை யேற்று நடத்தக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டாலும், அவர்கள் நடத்திக் காட்டிய இராவண லீலா நிகழ்ச்சி யை வரலாறு என்றைக்குமே பேசிக்கொண்டே இருக்கும்.
அன்னை மணியம்மையார் அவர்க ளின் மறைவிற்குப் பிறகு கழகத்திற்குத் தலைமையேற்று தமிழர் தலைவர் ஆசிரி யர் ஆற்றிய பணிகளை, சாதனைகளைப் பட்டியலிட்டார்.
குறிப்பாக பிற்படுத்தப்பட்ட மக்களுக் கான இட ஒதுக்கீட்டில் வருமான வரம்பு ஆணை கொண்டு வந்த நிலையில், அதனை எதிர்த்து முறியடித்ததையும், அத னைத் தொடர்ந்து வருமான வரம்பு ஆணை ரத்து செய்யப்பட்டு, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 31 சதவிகிதமாக இருந்த இட ஒதுக்கீடு 50 சதவிகிதமாக உயர்த்தப் பட்ட வரலாற்றையும் எடுத்துக்காட்டினார். 69 சதவிகிதத்தைக் காப்பாற்றிட தமிழ்நாடு அரசுக்குச் சட்டத்தை (31-சி) எழுதிக் கொடுத்த தலைவர் ஆசிரியர் கி.வீரமணி என்று எடுத்துக் கூறினார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல் படுத்திட திராவிடர் கழகத்தின் சார்பில் 42 மாநாடுகளும், 16 போராட்டங்களும் நடத்தி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகித இடங்கள் கிடைப்பதற்குக் காரண மாக இருந்தவர் ஆசிரியர் வீரமணி என்று உரையாற்றினார்.
பேராசிரியர் சுப.வீ.
திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை யின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தனது உரை யில் குறிப்பிட்டதாவது:
சமூகத்தில் இழிவை ஒழிப்பதற்காக - பாடுபடும் தலைவர் ஆசிரியர் அவர்களை இழிவுபடுத்துவோர்களை அடையாளம் காட்டினார்.
உணர்ச்சிக் கவிஞருக்கு இது அழகா?
காவிகள் பேசும் கூட்டத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் தெரிவித்த கருத்தை மிக வருத் தத்துடன் பதிவு செய்தார். உடல் முழுவதும் காவி உடை தரித்த குன்றக்குடி அடிகளாரை ஏற்றுக் கொண்டவர்கள், தோளில் காவி அணிப வர்களை ஏற்றுக் கொள்வதில் என்ன தயக் கம் என்று உணர்ச்சிக் கவிஞர் பேசலாமா?
அடிகளார் யார்? அவரது அறிவாற்றல் என்ன? தந்தை பெரியாரால் மதிக்கப்பட் டவர் அல்லவா! அடிகளாரின் காவி மதவாதத்தைத் திணித்ததா? சமூகநீதிக்கு எதிராகப் பேசியதா? என்ற அர்த்தமிக்க வினாவை எழுப்பினார்.
சிலர் இப்பொழுது புறப்பட்டுள்ளனர். எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கு மடிசார் புடவை களை அளிக்கிறார்களாம். இதன்மூலம் அவர்கள் திருமாவளவனை சிறுமைப்படுத் திடவில்லை, பெண்களை இழிவுபடுத்து கின்றனர் என்றார்.
87 வயதிலும் நாள்தோறும் எழுதுகிறார், பேசுகிறார், பயணிக்கிறார், உழைக்கிறார், கழகத்தை நடத்துகிறார், மக்களை வழி நடத்துகிறார் ஆசிரியர் அவர்கள்.
திராவிடத்துக்குப் புது விளக்கம்!
சிலர் திராவிடத்துக்குப் புது விளக்கம் கொடுக்கப் புறப்பட்டுள்ளனர். திராவிடம் என்றால், தமிழ்நாடு, ஆந்திரா, கருநாடகம், கேரளம் இவற்றின் இணைப்பு என்று கருதுகிறார்கள். அவர்களுக்கு நாம் சொல்லிக் கொள்வது, திராவிடம் என்றால் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் ஆகியோரின் கோட்பாடுக் கான ஒரு பெயர் என்றும் கூறினார்.
தோழர் இரா.முத்தரசன்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன் உரையில் குறிப்பிட்டதாவது:
ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழாவில், மகனாகிய நான் பங்கேற்காமல் இருப்பேனா? (பலத்த கரவொலி). இந்த விழாவில் உள்ளப்பூர்வமாகக் கலந்து கொள்கிறோம்.
திராவிடர் கழகம் நடத்தும் ஒவ்வொரு கூட்டத்திலும் நூல் வெளியிடுவதை ஒரு வழமையாகக் கொண்டுள்ளது மிகவும் பாராட்டத்தக்கது. மற்றவர்களுக்கு எடுத் துக்காட்டானது.
எங்களுடைய கட்சிக் கூட்டத்திலும் திராவிடர் கழகத்தின் இந்த செயல்பாட்டை எடுத்துக் கூறிவருகிறேன்.
இன்றைக்கு இருக்கும் அரசியலைப் பார்க்கும்பொழுது வெட்கப்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். அரசியல் வாதிகள் என்றால் மக்கள் அருவருப்பாகப் பார்க்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழல் மாற்றப்படவேண்டும். இந்த அருவருப்பு அரசியல் நிரந்தரமான தல்ல. மாறும் - ஏன் மாற்றப்படவும் வேண்டும்.
திராவிடர் கழகத்தின் பணி அரசியல் பணியல்ல - அதன் சமுதாயப் பணி மிகவும் தேவையான பணி; எத்தனைப் பேர் திராவிடர் கழகத்தில் இருக்கிறார்கள் என்பது முக்கியமல்ல; 10 பேர் தி.க.வில் இருக்கிறார்கள் என்றால், அவர்கள் பத்து கோடிக்குச் சமம் (பலத்த கரவொலி).
இன்றைய இளைஞர்களின் போக்கு எப்படி இருக்கிறது? இட ஒதுக்கீட்டால் பயன் பெற்றவர்களே அந்த இட ஒதுக் கீட்டைக் கேலி செய்யலாமா? எதிர்க்க லாமா?
இளையதலைமுறையினருக்கு, அவர் கள் கடந்து வந்த பாதையின் வரலாற்றை நாம் எடுத்துச் சொல்லவேண்டும். அந்தக் கடமை நமக்கு இருக்கிறது.
காந்தியார் மதுவிலக்குப் போராட்டத்தை நடத்தினார். தந்தை பெரியார் என்ன செய்தார்? மதுவிலக்குக் காரண மான தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தாரே - இந்த வரலாறு எல்லாம் நமது பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளதா?
இத்தகைய உண்மை வரலாற்றை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத் திருந்தால், மதவெறி சக்திகளான மோடி போன்றவர்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து இருக்க முடியுமா?
‘நீட்' என்னும் முறை நீட்டித்தால் அனிதாக்கள் சாகவேண்டியதுதான். தமிழ்நாடு அரசு 19 ஆயிரம் பேருக்கு ‘நீட்' தேர்வுக்கான பயிற்சிகளை நடத்தியது. இதில் ஒருவர்கூட வெற்றி பெறவில்லையே ஏன்? இதைப்பற்றி தமிழ்நாடு அரசு சிந்திக்காதது ஏன்?
தேசிய கல்விக் கொள்கையாம், 5 ஆம் வகுப்பு, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுப் பொதுத் தேர்வாம் - இதனை எதிர்த்துக் கேட்டால், கல்வி அமைச்சர் செங்கோட்டையன் என்ன சொல்லுகிறார், பரீட்சை உண்டே தவிர, அவர்களைப் பெயிலாக்கமாட்டோம் என்கிறார் - இது முரண்பாடு அல்லவா?
எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வருமான வரம்பு ஆணை கொண்டு வந்தார். ஆசிரியர் தலை மையில் தமிழ்நாடே திரண்டு எழுந்தது. தேர்தலில் தோல்வி கண்ட நிலையில், தன்னைத் திருத்திக் கொள்ளவில் லையா?
இன்று காலை வந்த ஒரு தகவல் மிகவும் அதிர்ச்சியை அளிக்கிறது. மேட்டுப்பாளையத்தில் ஒரு சுவர் இடிந்து விழுந்து, 17 தாழ்த்தப்பட்ட மக் கள் பலியாகி உள்ளனர். இதில் குழந்தைகளும் உண்டு.
1998 ஆம் ஆண்டிலேயே இந்த சுவர் அபாயகரமானதாக இருக்கிறது என்று அரசுக்குப் புகார் கொடுத்துள் ளனர். அரசு அலட்சியமாக இருந்த காரணத்தால்தான் இந்த அவலம் நடந் துள்ளது.
செத்த குடும்பங்களுக்குத் தலா ரூபாய் நான்கு இலட்சம் பணம் கொடுத் துவிடுவதாலேயே போன உயிர்கள் திரும்பி வருமா?
அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தியவர்களை காவல்துறை தடியடி நடத்துவது எந்த வகையில் நியாயம்? அதிகாரம் இருப்பதால் எப்படியும் நடந்துகொள்ளலாமா?
தோழர் திருமுருகன் காந்தி மீது எத் தனை எத்தனை வழக்கு? அவர் என்ன பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டார்?
ஆசிரியர் அவர்கள் வரட்டும், அவரிடம் கலந்துகொண்டு இதற்கொரு முடிவு கட்டப்படவேண்டும்.
தமிழர் தலைவர் பிறந்தநாளன்று தந்தை பெரியார் சிலைக்கு துணைத் தலைவர் தலைமையில் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது
திராவிடர் கழகமும் சரி, கம்யூனிஸ்டு இயக்கமும் சரி, அதன் தொண்டர்கள் - தங்களைத் தாங்களே வருத்திக் கொண்டு, தியாகங்களைச் செய்து கொண்டு இந்த நாட்டுக்காக - மக்களின் உரிமைகளுக்காகப் போராடக்கூடிய வர்கள்.
கம்யூனிஸ்டுகள் தேர்தலில் தோற் கலாம்; தேர்தலில் தோற்றதாலேயே அதன் கொள்கைகள் தவறானவை என்று பொருள் அல்ல.
இதன் கொள்கை மானுடத்திற்கு - அதன் உரிமைக்கு, சமத்துவத்திற்குத் தேவையானயாகும்.
தேர்தல் வெற்றி - தோல்வியை வைத்து கம்யூனிஸ்டு கட்சியை மதிப் பிடக் கூடாது - மதிப்பிடவும் வேண் டாம் என்று பேசினார்.
திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சுயமரியாதை நாளாக பன்னாட்டளவில் தமிழ்ச்சமுதாயத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கும் பெருவிழாவாக நேற்று (2.12.2019) தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 87ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. குருதிக் கொடை முகாம்கள் நடைபெற்றன. மரக்கன்றுகள் நடப்பட்டன. மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
நீட், புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து திராவிடர் கழகத்தின் சார்பில் விழிப்புணர்வு பரப்புரைக் கூட்டங்கள் தமிழ்நாடெங்கும் நடைபெற்று வருகின்றன.
சென்னை புரசைவாக்கத்தில் நடை பெறுவதாக அறிவிக்கப்பட்டு பரப்புரைப் பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில், கனமழை காரண மாக இடம் மாற்றப்பட்டு பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடை பெற்றது. மாலையில் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், முன்னதா கவே தோழர்கள் பலரும் ஆர்வமுடன் சென்னை பெரியார் திடலில் திரண்டிருந் தனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளிநாட்டு பயணத்தில் இருந்தாலும், தோழர்கள் பெரிதும் ஆர்வத்துடன் அவர் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற னர்.
இனநலம் இசைக்குழுவினரின் பகுத் தறிவு இசை நிகழ்ச்சி, பல்சுவை நிகழ்ச்சி யுடன் கூட்டம் தொடங்கியது. திராவிட மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பெரியார் களம் இறைவி, வை.கலையரசன், உடுமலை வடிவேல் குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சி பார்வையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது.
தமிழர் தலைவரின் 87ஆம் ஆண்டு பிறந்தநாளன்று கேக் வெட்டி கொண்டாடினர்
கழகத் துணைத்தலைவர் ‘கேக்’ வெட்டினார்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 87ஆவது பிறந்த நாளையொட்டி, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், சிபிஅய் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் ‘கேக்’ வெட்டினர். தோழர்கள் அனைவரும் கரவொலி எழுப்பி, தந்தை பெரியார் வாழ்க, தமிழர் தலைவர் வாழ்க என முழக்கமிட்டனர்.
தலைவர்கள் சிறப்புரை
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செய லாளர் இரா.முத்தரசன், திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன், கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்கு ரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை ஆற் றினார்கள். சிறப்பு அழைப்பாளராக பொறி யாளர் வேல்.சோ.நெடுமாறன் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் தலைமை வகித்து உரையாற்றினார். சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் வரவேற்றார்.
தி.செ.கணேசன், கி.இராமலிங்கம், சி.பாஸ் கர், தளபதி பாண்டியன், கா.காரல்மார்க்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புலவர் பா.வீரமணி, துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சி.வெற்றிச் செல்வி, திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணி யம்மை, மகளிர் பாசறை த.மரகதமணி, க.சுமதி, பெரியார் சமூகக் காப்பு அணி அமைப்பாளர் சோ.சுரேஷ், சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் இர.சிவசாமி, பெரியார் சுயமரியாதை திருமண நிலையம் பசும்பொன்செந்தில்குமாரி, மாவட்டத் தலைவர்கள் தென்சென்னை இரா.வில்வநாதன், தாம்பரம் ப.முத்தையன், கும்மிடிப்பூண்டி புழல் ஆனந்தன், சோழிங் கநல்லூர் ஆர்.டி.வீரபத்திரன், திருவொற்றி யூர் வெ.மு.மோகன், மாவட்ட செயலா ளர்கள் தாம்பரம் கோ.நாத்திகன், ஆவடி க.இளவரசன், விடுதலைநகர் ஜெயராமன், மாணவர் கழகம் நா.பார்த்திபன், அரும் பாக்கம் சா.தாமோதரன், தமிழ்ச்செல்வன், பெரம்பூர் கோபாலகிருஷ்ணன், கொடுங் கையூர் கோ.தங்கமணி, ஆ.வெங்கடேசன் உள்பட ஏராளமானவர்கள் கலந்துகொண் டனர்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் 14ஆம் பாகம், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் கள் எழுதிய இயக்க வரலாறான தன் வரலாற்று நூல் அய்யாவின் அடிச்சுவட்டில் 7ஆம் பாகம் ஆகிய இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. இருண்டு நூல்களின் நன்கொடை மதிப்பு ரூ.450. கூட்டத்தில் ரூ.100 தள்ளுபடி போக, ரூ.350க்கு அளிக் கப்பட்டது.
இரண்டு நூல்களையும் இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட, திராவிட இயக்க தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெற்றுக் கொண்டார்.
பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செய லாளர் இரா.தமிழ்ச்செல்வன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் துணைத் தலைவர் கோ.ஒளிவண்ணன், கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி, பொறி யாளர் வேல்.சோ.நெடுமாறன், தாம்பரம் ப.முத்தையன், பசும்பொன்செந்தில்குமாரி, பழ.சேரலாதன், மாணவர் கழகம் தொண் டறம், தங்க.தனலட்சுமி, பகுத்தறிவாளர் கழகம் மாணிக்கம், ஆர்.டி.வீரபத்திரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை சிந்தாதிரிப்பேட்டை மாறன், ஊரப்பாக்கம் வேமண்ணா, முத்துக்கிருஷ்ணன், கோ.நாத்திகன், மு.பாண்டு, ஆவடி மாவட்ட இளைஞரணி கார்வேந்தன், பெரியார் செல்வி உள்பட ஏராளமானவர்கள் புத்த கங்களை உரிய தொகை கொடுத்து மகிழ் வுடன் பெற்றுக்கொண்டார்கள்.
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளில் பெரியார் மாணாக்கன், பூவை செல்வி குடும்பத்தினர் நன்கொடை களை கழகத்துணைத் தலைவரிடம் வழங் கினர். துரை.ராவணன் பெரியார் பிஞ்சு சந்தாக்களை வழங்கினார்.
கூட்ட முடிவில் புரசை சு.அன்புச் செல்வன் நன்றி கூறினார்.