புதுடில்லி, பிப்.11 பதவி உயர்வுகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு இடஒதுக்கீடு அவசியம் இல்லை என உச்சநீதிமன்ற இரு நீதி பதிகள் அமர்வின் குழு அளித்த தீர்ப்பு குறித்து மக்களவையிலும், மாநிலங்கள வையிலும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மனு செய்திடுக!
மக்களவையில் ஆ.இராசா ஆவேசம்!
“மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இட ஒதுக்கீட்டுக் கொள் கைக்கு எதிராக செயல்பட்டு வருகிறது'' என்றும் "உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மறு ஆய்வு செய்திட மனு தாக்கல் செய்ய வேண்டும்” என்றும் நாடாளுமன்ற மக்களவையில் திமுக கொறடா ஆ. இராசா ஆவேசத்துடன் கூறினார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா ஆற்றிய உரை வருமாறு :
சபாநாயகர் அவர்களே! ஆளும் கட்சி உறுப்பினர்கள் எங்கள் கருத்தைப் பொறுமையுடன் கேட்க வேண்டும். இந்த அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது என்று நாங்கள் நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.
உத்தரகாண்டில் நடைபெற்று வரும் ஆட்சிக்கும் இங்கு நடைபெற்று வரும் மத்திய ஆட்சிக்கும், இரண்டும் பா.ஜ.க. வின் ஆட்சி என்பதால் ஒரே கருத்தையே கொண்டுள்ளன. இரண்டு ஆட்சியின் அரசியல் கொள்கைகளும் ஒன்றேதான்.
உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞரின் எதிரான வாதம்!
உச்சநீதிமன்றத்தில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சார்பாக வாதிட்ட மூத்த வழக்குரைஞர் தாழ்த்தப்பட்டோருக்கும், பழங்குடியினருக்கும், இதர பிற்படுத்தப் பட்டோர் உள்பட பிற்படுத்தப்பட் டோருக்கும் அளிக்கப்படும் இட ஒதுக்கீடு அடிப்படை உரிமையோ, அர சமைப்புச்சட்டத்தின் மூலம் வழங்கப் பட்ட உரிமையோ அல்ல என்று திட்ட வட்டமாக வாதிட்டுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 16 (4) மற்றும் 16(4ஏ) பிரிவுகள்தான் தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்டோர் உள்பட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற் படுத்தப்பட்டோர் ஆகிய அனைத்துப் பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு வழங் குவதற்கான அடிப்படைச் சட்ட விதி களாகும்.
உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற பி.கே.பவித்ரா வழக்கில் இந்தப் பிரச் சினை தீர்த்துவைக்கப்பட்டுவிட்டது. மிகப்பெரிய அமர்வின் முன் நடைபெற்ற அந்த வழக்கில் இட ஒதுக்கீட்டுக்காக கணக்கெடுக்க மாநிலத்திற்குச் செல்ல வேண்டாம். ஆய்வு நடத்த வேண்டாம். பிறப்பின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு பெறுவதற்கான உரிமை பிற் படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு உள்ளது என்று அந்த பிரச்சினை தீர்த்துவைக்கப்பட்டுள்ளது. இப்போது ஒரு புதிய தீர்ப்பு செயலுக்கு வந்துள்ளது. (கூச்சல் குழப்பம்)
இரண்டு முக்கிய விசயங்களை உடனடியாக செய்திட வேண்டும்!
எனவே, உங்கள் மூலமாக இந்த அரசைக் கேட்டுக்கொள்வது இந்த அர சுக்கு உண்மையிலேயே பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த் தப்பட்ட, மலைவாழ்மக்கள்மீது அக் கறை இருக்குமானால், இரண்டு காரி யங்களை உடனடியாக செய்யவேண்டும்.
1. உடனடியாக இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு செய்ய மனு போடவேண்டும்.
2. தேவைப்பட்டால் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்து அதனை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தாமல் இருக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தின் 9ஆவது அட்டவணையில் வைத்து இடஒதுக் கீட்டு முறையை பாதுகாத்திட வேண்டும்.
அதை செய்யாத வரை உங்கள் அரசு இந்த மக்கள்மீது நம்பிக்கை கொண்டி ருக்கிறது என்பதை யாரும் நம்ப மாட் டார்கள். எனவே அதனை செய்திட முன்வர வேண்டும். இவ்வாறு ஆ.இராசா வலியுறுத்தி பேசினார்.
திருச்சி சிவா
"ஒடுக்கப்பட்டுள்ள மக்கள் கொந் தளிப்படைந்துள்ளதால் இட ஒதுக் கீட்டு உரிமையை பாதுகாத்திட உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நாடாளுமன்ற மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா வேண்டுகோள் விடுத்தார்.
இட ஒதுக்கீடு தொடர்பாக உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து, மாநிலங்களவையில் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா பேசியதாவது:
அரசமைப்புச் சட்டத்தின் 16-ஆவது பிரிவு ‘அனைவரும் சமம்' என்ற உரி மையை நிலை நாட்டுகிறது. அரசமைப்புச் சட்டம் 16(4) பிரிவு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் அரசாங்கம் காலியாக இருக்கின்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்களை நியமிப்பதற்கு தாழ்த்தப்பட்ட வர்கள், ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்களை நிய மிப்பதற்கு அதிகாரம் இருப்பதை உறுதி செய்கிறது.
பின்னர், 77ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் 16(4)(ஏ) பிரிவு சேர்க்கப்பட்டு இட ஒதுக்கீடு என்பது சமத்துவத்தின் கூறு களில் ஒன்று என்பதை உறுதி செய்கிறது.
இட ஒதுக்கீட்டை உறுதிபடுத்திய ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு!
1975- இல் தாமஸ் எதிர் கேரள அரசின் வழக்கில் ஏழு நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில், அர சமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டவர்கள், ஆதிதிரா விடர்கள், பழங்குடியினருக்கு இட ஒதுக் கீடு உரிமை உண்டு என்பதை உறுதிப் படுத்தியது.
ஆனால், நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம், மாநிலங்களைக் கட்டாயப் படுத்த முடியாது என்று இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் தீர்ப் பளித்துள்ளது. ஏழு நீதிபதிகள் அடங் கிய அமர்வின் தீர்ப்பினை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு எப்படி மாற்றியது என்பது புரியவில்லை.
மறுசீராய்வு மனுதாக்கல் செய்க!
இட ஒதுக்கீடு பறிக்கப்பட்டது தொடர் பாக, ஒடுக்கப்பட்டவர்களி டையே பெரும் கொந்தளிப்பு உரு வாகியுள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்து தாழ்த் தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை எந்தக் காலத்திலும் பறிக்கப் படாது என்ற உறுதியினைத் தந்திடு வதற்கு ஆவன செய்ய வேண்டும் என்று தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு திருச்சி சிவா பேசினார்.
பி.வில்சன்
"இட ஒதுக்கீடு தொடர்பான உச்ச நீதி மன்றத் தீர்ப்பு குறித்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண் டும்" என்று நாடாளுமன்ற மாநிலங் களவையில் திமுக உறுப்பினர் பி.வில்சன் வலியுறுத்திப் பேசினார்.
மாநிலங்களவை நேற்று காலை கூடியதும் திமுக குழுத் தலைவர் திருச்சி சிவா, காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக உறுப்பினர் பி.வில்சன், கேரளாவைச் சேர்ந்த இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் பினாய், மார்க் சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் ஆகி யோர் இட ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதி மன்றத் தீர்ப்பு குறித்து பிரச்சினையை எழுப் பினர்.
பரிசீலித்து வருகிறது!
அதற்கு துறையின் அமைச்சர் பிற் பகல் 2 மணிக்கு பதில் அளிப்பதாகக் கூறினார். பின்னர் 3 மணிக்கு பதிலளிப் பதாகக் கூறினார்.
இதனையடுத்து 3 மணியளவில் அமைச் சர் தாவர்சந்த் கெலட் கூறிய தாவது:
உத்தரகாண்ட் மாநில வழக்கில் ஒரு உத்தரவு போடப்பட்டிருக்கிறது. இது முக்கிய மான வழக்கு என்பதால் அரசு இத்தீர்ப்பினை பரிசீலித்து வரு கிறது. இந்த வழக் கில் மத்திய அரசை ஒரு தரப்பினராகச் சேர்க்காமல் வழக்கு நடத்தப்பட்டுள்ளது.
5.9.2012 அன்று உத்தரகாண்ட்டில் இருந்த மாநில அரசு தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடைக் கடைப்பிடிக்கக் கூடாது என்று முடிவு எடுத்துள்ளது. அதனடிப் படையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுப்போம்!
எங்கள் அரசு தாழ்த்தப்பட்ட, மலை வாழ் மக்கள் மீது மிகவும் அக் கறை கொண்டுள்ளது. எனவே இத் தீர்ப்பை விவாதித்து உரிய ந டவடிக்கை எடுப் போம். இவ்வாறு அமைச்சர் தாவர்சந்த் கெலட் கூறி னார்.
மறு சீராய்வு மனு போடுவீர்களா?
அமைச்சரின் பதில் திருப்தி அளிக் காததால் திமுக உறுப்பினர் பி.வில்சன் “சீராய்வு மனு போடுவீர்களா?" என்று கேள்வி எழுப்பி "இதில் உறுதி கொடுக்க வேண்டும்” என்று வலியுறுத் தினார். இதே போன்று மற்ற உறுப்பி னர்களும் வலியுறுத்தினர். ஆனால் அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கா ததால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இப்பிரச்சி னையை மீண்டும் அவை யில் எழுப்ப எதிர்க்கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.