Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' அமைப்பின் துணை நிறுவனத்தின் சார்பில் காலை உணவுத் திட்டத்தில் பூண்டு, வெங்காயம் தவிர்க்கப்படுமாம்

$
0
0

தமிழ்நாடு அரசு இதனை ஏற்றுக் கொள்ளலாமா?

உணவு விடயத்திலும் மதவாத விஷம் - எச்சரிக்கை!

அமெரிக்காவின் இஸ்கான் என்னும் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா' என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா' என்ற அமைப்பு காலை உணவு என்னும் பெயரில், உணவில் மதவாதத்தைத் திணிப்பதைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதிய உணவுத் திட்டம் என்பது முதன் முதலாக வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாக ராயர் அவர்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது செயல்பாட்டிற்கு வந்தது (1920). அதன்பின் கல்வி வள்ளல் காமராசர், முத்தமிழ் அறிஞர் கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் ஆட்சிக் காலத்திலும் சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தப்பட்டு தமிழ்நாட்டில் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் இப்போது சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ள பள்ளிகளுக்கு அமெரிக்காவின் ‘இஸ்கான்’ என்கிற ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா' என்கிற தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலமாக காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதில் அதிர்ச்சிக்குரிய தகவல் என்னவென்றால், அந்த காலை உணவில் வெங்காயம், பூண்டு தவிர்த்த மரக்கறி உணவு அளிக்கப்பட உள்ளதாக வலியுறுத்தப் பட்டுள்ளது.

இது முற்றிலும் ஆர்.எஸ்.எஸ்., பார்ப்பனப் பண்பாட்டுத் திணிப்பு என்பதில் எந்தவிதமான அய்யமும் இல்லை.

இதனை ஏற்றுக்கொண்டு அந்த நிறு வனத்திற்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் 20,000 சதுர அடி உள்ள இடமும், பெரம்பூர் பாரக்ஸ் பகுதியில் 35,000 சதுர அடி உள்ள நிலமும் தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மின் இணைப்பு, குடிநீர், மின்சாரம் கட்டணம் அனைத்தும் சென்னை மாநகராட்சியே செலுத்துமாம். தமிழக ஆளுநர் ரூ.5 கோடி வழங்குவதாக அறிவித்துள்ளார். மேம்போக்காக இது இலவச உணவு அளிக்கப்படுவதாகத் தோன் றினாலும், இதில் பார்ப்பனீய ஆர்.எஸ்.எஸ். ஹிந்து மதவாதக் கண்ணோட்டத்தோடு மேற்கொள்ளப்படுகின்ற திட்டம் என்பதால், இதனைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.

இதன் அடுத்தகட்டமாக மதிய உணவுத் திட்டத்திலும் விரிவுபடுத்தப்பட்டு, உணவு விஷயத்தில் மதவாதத்தைத் திணிக்கும் சூழ்ச்சி இதன் பின்புலத்தில் இருக்கிறது. மதச் சார்பற்ற முறையில் நடக்க வேண்டிய தமிழ்நாடு அரசு இந்த மதவாதத் திணிப்பிற்கு இடம் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்துகிறோம்.

உணவு விஷயத்திலும் மதம் என்ற விஷம் திணிக்கப்படுகிறது.

எச்சரிக்கை! எச்சரிக்கை!.

 

கி. வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

18.2.2020


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles