பா.ஜ.க. ஆளும் குஜராத்தில்
குறைந்த வட்டிக்கு பணம் தருவதாகக் கூறி
60-க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாஜகவினர் பாலியல் வன்முறை
நாலியா, கட்ச் (குஜராத்), பிப்.8 குறைந்த வட்டிக்கு தொழில் துவங்க பாஜக சார்பில் கடன் கொடுப்ப தாகக் கூறி கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்து 60--- -க்கும் மேற்பட்ட இளம்பெண்களை பாலி யல் வன்கொடுமை செய்து அதை படம் பிடித்து இணையதளத்திற்கு விற்பனை செய்த பாஜகவினரை குஜராத் மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் நாலியா என்ற பகுதியில் உள்ள பாஜகவினர் தங்கள் கட்சி இளம்பெண்களுக்கு தொழில் தொடங்க உதவி புரிவதாக விளம்பரம் செய்தனர். மோடியின் பல்வேறு தொழில் முன்னேற்றதிட்டங்களின் கீழ் இந்த உதவித்தொகை வழங்குவதாக கூறினர். இளம் பெண்கள் எங்களிடம் வந்தால் அவர்களுக்கு உடனடியாக கடன் தொகை வழங்கப்படும் என்றும், இந்த தொகையை மிகவும் குறைவான வட்டியோடு நீண்ட கால தவனையில் திருப்பி கொடுக்கலாம் என்றும் அப்பகுதியில் விளம்பரம் செய்திருந்தனர்.
இவர்களது இந்த விளம்பரத்தைக் கண்டு பல பெண்கள் அப்பகுதி பாஜக அலுவலகத்திற்கு சென்றனர். அப்படி வரும் பெண்களுக்கு மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து அவர் களை கட்சி அலுவலகத்தின் தனியறைக்குத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள் ளனர். இந்தச் செயலை நவீன காமிரக்கள் மூலம் படம் பிடித்து அதை இணையதளத்திற்கு பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளனர்.
மேலும் மயக்கம் தெளிந்த பிறகு இது குறித்து புகார் கூறுவதாக கூறிய பெண்களிடம் தாங்கள் எடுத்த படங்களைக் காட்டி இதை அனைவருக்கும் பகிர்ந்துவிடுவோம் என்று மிரட்டியுள்ளனர்.
நீண்ட ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வந்த இந்தப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக கடந்த திங்களன்று இளம்பெண் ஒருவர் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
காவல்துறையில் அந்தப் பெண் கூறியதாவது:
‘‘உள்ளூர் பகுதி பாஜக முக்கிய தலைவரான அஜித் ராமானி என்பவரின் வீட்டிற்கு கடன் தருவதாக என்னை வரவழைத்தனர். நான் அவர்களின் வீட்டிற்குச் சென்றேன். அப்போது வீட்டில் அஜித் ராமானியுடன் சாந்திலால் சோலங்கி, வசந்து பெர்மாலானி, வசந்த் பகனூசாலி போன்றோர் அங்கு இருந்தனர். இவர்கள் அனைவரும் அப்பகுதி பாஜகவின் முக்கியமான பிரபலங்கள். இவர்கள் என்னிடம் கடன் தொகை குறித்தும், நான் என்ன தொழில் செய்யப் போகிறேன் என்றும் ஆர்வத்தோடு கேட்பதுபோல் கேட்டு எனக்குக் குளிர்பானமும் கொடுத்துள்ளனர். இவர்களது பேச்சை நம்பி நான் அவர்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்தேன். குளிர்பானம் குடித்த சில நிமிடங்களில் மயங்கி விட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று தெரியவில்லை'' என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பெண்ணை அஜித் ராமானி உட்பட பலர் பாலியல் வன்கொடுமை செய்து அதை படமாக எடுத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து தனக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து, காவல் துறையிடம் புகார் செய்வதாக அந்தப் பெண் கூறினார்.
அதற்கு அவர்கள் நாங்கள் மத்தியிலும் மாநிலத் திலும் ஆட்சியில் இருக்கிறோம், ஆகவே, உங்கள் புகார் எதுவும் பலனளிக்காது, அப்படியே காவல்துறைக்குச் சென்றால் உனது குடும்பத்தினர் ஆற்றங்கரையில் பிணமாக மிதப்பார்கள் என்று மிரட்டியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பலமுறை அந்தப் பெண்ணை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ள னர். இதனால், பொறுமையிழந்த அந்த இளம் பெண் காவல்துறையில், கட்ச் நாலியா பகுதி பாஜக பிரமுகர் அஜித் ராமானி மற்றும் இதர பாஜக பிரமுகர்கள் மீது புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
நூற்றிற்கும் மேற்பட்ட
பெண்கள்
விசாரணையில் அவர்கள் கடன் தருவதாகக் கூறியதால் தங்களிடம் நூற்றிற்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வந்ததாகவும், அதில் அழகிய 60 இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒப்புக்கொண்டனர். மேலும் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய பெண்களை வைத்து படங்களை எடுத்து அதை அயல்நாட்டு இணையதளங்களுக்கு விற்பனை செய்து அதன் மூலம் பெரும் தொகையைப் பெற்றதாகவும் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளனர்.
விரைவில் தேர்தல் வரும் நிலையில், பாஜக வின் உள்ளூர் பிரமுகர்களே இதுபோன்ற இழிச்செயலில் ஈடுபட்டுள்ளதால் தங்களின் கட்சிக்கு அவப்பெயர் வந்துவிடக்கூடாது என் பதற்காக, அஜித் ராமானியுடன், சாந்திலால் சோலங்கி, கோவிந்த் பெர்மாலானி, வசந்த் பகனூசாலி போன்றோரை பா.ஜ. கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளனர்.
இதுகுறித்து கட்ச் பகுதி பாஜகவினர் கூறும்போது, இவர்கள் கட்சியின் உறுப்பி னர் பொறுப்பிலிருந்து எப்போதே நீக்கப்பட்டு விட்டனர். ஆனால், இவர்களாக தங்களை பாஜகவினர் என்று கூறிக்கொண்டு தங்களது இல்லத்திலேயே போலியாக எங்கள் கட்சி அலுவலகத்தை நடத்தி வந்துள்ளனர்.
இதுகுறித்து ஏற்கெனவே நாங்கள் தலைமைக்கு புகார் கொடுத்துள்ளோம் என்று கூறினர்.
கைது செய்யப்பட்ட கோவிந்த் பெர்மாலானி காந்தி தான் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் மகேசுவரின் நெருங்கிய உறவினராவார். இவர் அப்பகுதி மத விழாக்களின்போது தாரளமாக பணத்தை வழங்குவார்.
சமீபத்தில் பாஜக சார்பில் நடந்த ஒரு நிகழ்ச்சி யில் பாடகர் ஒருவரின் மீது 50 ஆயிரம் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை வீசி பத்திரிகைகளில் முதலிடம் பிடித்தார். அதேபோல் முக்கிய குற்ற வாளியான அஜித் ராமானி முன்னாள் சட்டமன்ற உறுப்பினராவார். மேலும் இவர் காந்திதான் பகுதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தீவிர உறுப்பினராவார். இவர்களும், பாலியல் வன்செயலில் ஈடுபட்ட இதர பாஜக நபர்களும் அப்பகுதியில் பல்வேறு சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடு பட்டுள்ளதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. மேலும் பொது விநியோக உணவுப் பொருளை வேறு மாநிலங்களுக்கு பெருமளவில் கடத்தியதாகவும் இவர்கள் மீது ஏற்கனவே புகார்கள் இருந்துள்ளன.