மழை வெள்ளத்தைப் பார்வையிடச் சென்ற தமிழர் தலைவர்- மக்கள் வெள்ளத்தில்!
தீப்பந்தம் ஏந்தி மகளிர் வரவேற்ற மாட்சி
(நாகை - திருவாரூர் மாவட்டங்களில் தமிழர் தலைவர்)
- நமது சிறப்புச் செய்தியாளர்
திருவாரூர், நவ.22 திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திராவிடர் கழகத் தலைவர் சுற்றிப் பார்த்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.
அதன் விவரம் வருமாறு:
21.11.2017 திங்கள் காலை 9.40 மணி
இலவங்கார்குடி (பவுத்திரமாணிக்கம்)
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் காமராஜ் சால்வை அணிவித்துத் தமிழர் தலைவரை வரவேற்றார்.
தந்தை பெரியார் சிலைக்கு மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன் மாலை அணிவித்தார். முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் இருதயம் (தி.மு.க.), கலைச்செல்வன் (தி.மு.க.) மற்றும் கழகத் தோழர்கள் வரவேற்றனர். செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.
11.15 மணி - மஞ்சக்குடி (குடவாசல்)
மேனாள் மாவட்ட செயலாளர் நெற்குப்பை கணே சன், பெரியார் பெருந்தொண்டர் சிவானந்தம், வீரையன், வசந்தா கல்யாணி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், செயராமன், அம்பேத்கர் மற்றும் கழகக் குடும்பத்தினர் ஆண்களும், பெண்களும், பிள்ளைகளும் சகிதமாகச் சந்தித்தனர்.
அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் ஆகி யோர் உரைக்குப் பின், க.அசோக்ராஜ் (மறைந்த முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் குடவாசல் கணபதி அவர்களின் மகன்) நன்றி கூறினார்.
மேனாள் மாவட்ட செயலாளர் நெற்குப்பை கணேசன், மேனாள் மண்டலத் தலைவர் கல்யாணி அவர்களின் துணைவியார் வசந்தா, பெரியார் பெருந்தொண்டர் சிவானந்தம் ஆகியோருக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துப் பாராட்டினார்.
குடந்தை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் கவுதமன் ‘விடுதலை’ சந்தா ஒன்றை ‘விடுதலை’ ஆசிரியரிடம் அளித்தார்.
11.45 மணி - சோழங்கநல்லூர்
கங்களாஞ்சேரியில் நாகை மாவட்ட தி.மு.க. செயலாளர் கவுதமன், திருமருகல் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.டி.சரவணன், கார்த்திகேயன், துரைஅரசன், இராமசுந்தர் ஆகிய தி.மு.க.வினர் தமிழர் தலைவருக்குச் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
சோழங்கநல்லூரில் ஏராளமான கழகக் குடும்பங்கள் கூடி ‘‘தந்தை பெரியார் வாழ்க!’’ ‘‘அன்னை மணியம் மையார் வாழ்க!’’, ‘‘தமிழர் தலைவர் வீரமணி வாழ்க!’’ என்ற முழக்கங்களோடு வரவேற்றனர்.
‘விடுதலை’க்கு ரூ.50 ஆயிரம் அளிப்பு
மாநில விவசாய அணி செயலாளர் வீ.மோகன் ‘விடுதலை’ சந்தாவுக்காக ரூ.50 ஆயிரத்தை ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் பலத்த கரவொலிக்கிடையே அளித்தார். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கோவிந்தசாமி அவர்களுக்குக் கழகத் தலைவர் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார். தந்தை பெரியார் சிலைக்கு வீ.மோகன் மாலை அணிவித்தார்.
மேனாள் அமைச்சரும், கீழ்வேளூர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினருமான மதிவாணன் அவர்களின் மகனும், மாவட்ட தி.மு.க. மாணவரணி செயலாளருமான நெல்சன் மண்டேலா கழகத் தலைவருக்குச் சால்வை அணிவித்தார்.
ஒன்றிய கழகத் தலைவர் கனகராஜ், அம்பேத்கர் ஆகியோர் ‘விடுதலை’ சந்தாக்களை அளித்தனர்.
தோழர்கள் சரசுவதி, மகேசுவரி ஆகியோர் முன்னின்று மகளிரை பெரும் அளவில் அழைத்து வந்தனர்.
கழகக் குடும்பத்தினர் மத்தியிலும், ஏராளமாகக் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியிலும் திராவிடர் கழகத் தலைவர் உரையாற்றினார். மகேசுவரி நன்றி கூறினார்.
சோழங்கநல்லூர் பெரியார் மருத்துவமனையில்...
பெரியார் அறக்கட்டளை சார்பில் சோழங்கநல்லூரில் இயங்கிவரும் பெரியார் மருத்துவமனை சென்று, மருத்துவர்கள் பஞ்சாட்சரம், கமலா மற்றும் செவிலியர்கள், பணியாளர்களை சந்தித்து மருத்துவமனையின் செயல்பாடுகளைக் கேட்டறிந்தார். அடுத்த வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் கலந்து பேசப்பட்டது. அனைவருக்கும் தேநீர் அளித்து உபசரிக்கப்பட்டது.
12.45 மணி - கொட்டாரக்குடி
தந்தை பெரியார் சிலைக்கு கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் மாலை அணிவித்தார். நாகை மாவட்ட திராவிடர் கழக செயலாளர் பூபேஷ்குப்தா வரவேற்புரையாற்றினார். வட்டார விவசாய அணி செயலாளர் செல்வராஜ், மறைந்த குருசாமி அவர்களின் வாழ்விணையர் மற்றும் கழக விவசாயக் குடும்பத்தினர் அன்போடு வரவேற்றனர்.
இறுதியாகக் கழகத் தலைவர் உரையாற்றினார். மாவட்ட மகளிரணி செயலாளர் சுமதி நன்றி கூறினார்.