Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளை அலட்சியம் செய்யும் மத்திய அரசு

$
0
0


வழக்குகளை தாமதப்படுத்தி சிக்கலை
மேலும் அதிகரிக்க வழிவகை செய்வதா?


புதுடில்லி ஜூலை 16 தமிழக நதிநீர்ப் பங்கீடு என்பது விவசாயத்தையே உயிர் நாடியாகக் கொண்டுள்ள  தமிழர்களின் வாழ்வாதாரம் தொடர்பான உரிமைப்பிரச் சினையாகும்.

ஆனால் இந்தப் பிரச் சினைகளில்தற் போதைய மத்தியஅரசுஎந்தவிதஅக் கறையும்கொள் வதில்லை. மேலும் மத்திய அமைச்சர் கள் தமிழகத்திற்கு எதிரான முடிவுகளைஎடுக்க அண்டை மாநிலங்களுக்குத் துணைநிற்கின்றனர். விவா தத்திற்குரிய கருத்துகளை தொடர்ந்து கூறிக்கொண்டு இருக்கின்றனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் காவிரி கண்காணிப்பு குழு அமைத்து, கர்நாடக அரசு தமிழகத்திற்குதண்ணீர்திறப் பதை உறுதி செய்ய வேண்டும் என்று தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய் யப்பட்டது. காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதற்கு தடை விதிக்கக்கோரியும் மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டன.

இந்த வழக்குடன்சேர்த்து காவிரி நதிநீர் பங்கீடுதொடர் பான அனைத்து வழக்கு களையும் ஒன்றாக விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.செலமேஸ்வர், சிவ கீர்த்தி சிங், ஏ.எம்.சப்ரே ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வை உச்சநீதிமன்றம் நியமித்திருந்தது.

இதன்படி நேற்று விசா ரணை துவங்கியதும் இந்த அமர்வின் தலைமை நீதிபதி ஜே.செலமேஸ்வர், தான் இந்த வழக்கில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவித்தார். இதனால், இந்த வழக்கிற்கு மீண்டும்ஒரு புதிய அமர்வை ஏற்படுத்த வேண்டியசூழல்உச்சநீதி மன்றத்திற்கு ஏற்பட்டுள் ளது. நதிநீர்விவகாரத்தில் வழக்கை தாமதப்படுத்தும் நோக்குடனேயே மத்திய அரசின் செயல்பாடுகள்உள் ளன.

கடந்த வாரம் கர்நாடா காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு காவிரி நதி நீர் விவகாரத்தில் கர்நாடகாவின் பக்கம்நாங் கள் (மத்திய அரசு) இருப் போம் என்று கூறியுள்ளார். இது மத்திய அமைச்சராக இருக்கும் ஒருவர் ஒரு மாநிலத்திற்கு ஆதரவாக பேசுவது மிகவும் கண்டிக் கத்தக்கது. ஆனால் இன்று வரை தமிழக அரசு இவரைக் கண்டித்து அறிக்கை விட வில்லை, எப்போதும் மோடிக்கு கடிதம் எழுதும் முதல்வர்ஜெயலலிதா, வெங்கையா நாயுடுவின்மீது நடவடிக்கைஎடுக்கஏன் அழுத்தம் கொடுக்கவில்லை.

வெளிச்சத்திற்கு வராதவைகள்

காவிரி நதிநீர், முல் லைப் பெரியாறு,பாலாறு, ஒகேனக்கல், சிறுவாணி போன்ற நதி நீர்ப் பிரச்சி னைகள் அவ்வப்போது நாளிதழ்களில் வருவதால் மக்களுக்கு அதிகம் தெரிய வருகிறது. நமக்குத்தெரி யாத பல்வேறு நதிநீர்ப் பிரச்சினைகள் இன்றும் தொடர்கின்றன.அந்தபிரச் சினைகளில் கடந்த அதிமுக ஆட்சி எந்த ஒரு அக்கறையும் காட்டாமல் கிடப்பில் போட்டுவைத்துள்ளது.

கன்னியாகுமரி மாவட் டத்திற்கு நீராதாரம் தந்த நெய்யாறு அணையைகேரள அரசு மூடிவிட்டது,இந்த அணையின் நீர்வீணாக அர பிக்கடலில் கலந்துகொண்டு இருக்கிறது. இதனால்கன் னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவு நிலம் விளைச்சலில்லாமல் தரிசாகப் போனது.

அதேபோல் நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே கேரள எல்லையில்  கட்டப்பட்ட அடவிநயினார் அணையும் தமிழகத்திற்கு நீர் செல்லவிடாமல் தடுக்கப் பட்டது. இந்த அணைக்கு நீர்வரும் பாதையை கேரள அரசு வேண்டுமென்றேஆக் கிரமித்துநதியின்போக் கையே திசைதிருப்பிவிட் டது. அதே போல்நெல்லை மாவட்டத்தில் தமிழகப்பகு தியில் இருந்த சொக்கம் பட்டி அணையை 1994-ஆம் ஆண்டு கேரள வனத் துறையினர் இடித்துத்தள்ளி னர். இத்தனைக்கும்அந்த அணைக்கு அருகில்தமிழக வனத்துறைக்குச் சொந்தமான விருந்தினர் விடுதி ஒன்றும் உள்ளது.வாசுதேவநல் லூர் அணை, நிதி ஒதுக்கி திட்டங்கள் தீட்டி 12 ஆண் டுகள் ஆகியும் அணை கட்ட கேரள அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது.

அதேபோல் அழகர் அணைத்திட்டம் போன் றவை நிறுத்தப்பட்டுள்ளதால் தென்மாவட்டங்களில் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவு விளைநிலங்கள் முட்செடிகள் மண்டிய தரிசு நிலமாக மாறிவிட்டது.

மதுரை, தேனி மாவட்டங் களுக்கான ஆலடி அணை, கோவை மாவட்ட விவசாயத் தேவையை நிறைவேற்ற ஆழியாறு-, பரம்பிக்குளம் அணைக்கட்டு, பாண்டியாறு-புன்னம்புழா அணை போன் றவைகளை நிறைவேற்ற விடாமல் பல்வேறு தடை களைப் போட்டு வருகிறது.  

அதேபோல் கர்நாடக மாநிலத்தில் தோன்றும் தென் பெண்ணை, மற்றும் ஆந்திர மாநிலத்தின் பொன்னியாறு, தெலுங்குகங்கைபோன்ற திட்டங்களை நிறைவேற மத்திய அரசு எந்த ஒரு திடமான ஆணையும் பிறப் பிக்காமல் பிரச்சினைகள் கிளம்பும் போதெல்லாம் அமைதி காத்து, தமிழகத் திற்கு பாதகமான முடிவுகள் எடுக்க துணைபோகிறது.


நதிநீர்ப் பிரச்சினைகளில் வாக்கு வங்கி மற்றும்தான் தோன்றித்தனமான எண்ணத் துடன் சில அமைச்சர்களும், சில அதிகாரிகளும்இருக் கிற காரணத்தால் தமிழகத் தின் வாழ்வாதாரம் பாதிக்கப் படுகிறது.

நேரு ஆட்சிக்காலத் தில், ஹிராகுட்அணை, தாமோதர் பள்ளத்தாக்கு திட்டத்தில்மேற்குவங்கம், பீகார் மாநிலங்களுக்கி டையே தகராறு எழுந்தது. அப்போது சட்டம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் அம்பேத்கர், கண்டிப்போடு அணுகி அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்தார்.

அதேபோன்று ஒடிசா, மத்தியப் பிரதேச மாநிலங்களுக்கிடையே ஏற்பட்ட நதிநீர்ப் பிரச்சினை அம்பேத்கர் நடந்து கொண்ட கண்டிப்பான முறையால் தீர்த்து வைக்கப்பட்டது.

நதிகள் தேசியமயமாக்கல், நதிகள் இணைப்பு குறித்து உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கடந்த 2013 பிப்ரவரி 27ஆம் தேதி உத்தரவிட்டது. மத்தியில் 2014-ஆம் ஆண்டு பதவியேற்ற பாஜக அரசு  உச்சநீதிமன்ற உத்தரவுகளைச் செயல்படுத்துவதில் இதுவரை அதற்கான ஈடுபாட்டை காட்டவில்லை. முக்கியமாக தமிழகத்தின் நதிநீர் விவகாரங்களில் மத்திய பாஜக அரசு பாராமுகமாகவே உள்ளது.   

முக்கியமாக தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் மத்திய அரசு சிறிதும் கருணை காட்டாமல் கல்மனதோடு செயல்படுகிறது,


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles