இந்துத்துவாவாதிகளின் ஜம்பம் பலிக்கவில்லை
கலிபோர்னியாவில் பாடத் திட்டத்தில் இந்து மதத்தின் ஜாதிபற்றிய பகுதிகளை நீக்க முடியாது என்று அறிவிப்பு
வாஷிங்டன்,ஜூலை17 கலிபோர்னியாவில் பாடத் திட்டத்தில் இந்து மதத்தில் காணப்படும் ஜாதி பாகுபாடுகள்பற்றிய பகுதி நீக்கப்பட வேண்டும் என்ற இந்துத்துவாவாதிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
கலிபோர்னியா பாடப் புத்தகத்தில்இரண்டுஆண்டு களுக்கு முன்பாக கொண்டு வரப்பட்ட பாடத் திட்டத்தில் இடம் பெற்றிருந்த தெற்காசிய வரலாறு மற்றும் சமூகவியல் பாடங்கள்குறித்த விவாதங்கள் நடந்துவருகின்றன.
கலிபோர்னியா மாநில கல்வி வாரியத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்தபாடப் புத்தகத்தில் இடம்பெற்றி ருந்த Ôஇந்துக்கள் கட்டாயப் படுத்தி மதமாற்றம் செய்யப் பட்டார்கள்Õ என்கிற பகுதியை தற்போது கல்வி வாரியம் நீக்கியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன் தொடங்கப்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, ஆறு ஆண்டுகளுக்கொருமுறை திருத்தம் செய்யப்பட்டுவரும் கல்வித்திட்டத்தில் தற்போது முழுமையான மாற்றம்ஏற் படுத்தப்பட்டுள்ளது. 14.7.2016 அன்று பாடத்திட்ட திருத்தப்பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
முரண்பாடான கருத்து களை சில குழுக்கள் கூறிவந்த நிலையில், கல்வித் தர நிர் ணயக் குழு கடந்த மே மாதத் தில் திருத்தத்துக்கான முதல் வரைவை அளித்தது.
சிலகாலங்களில்துருக் கிய முசுலீம் ஆட்சியாளர்கள் இந்துக்களைமதமாற்றம் செய்யக் கட்டாயப்படுத்தினார் கள்.மற்றவர்கள்மதசகிப் புத்தன்மையைக் கடைபிடித் தார்கள் என்று இருந்தது தற்போது திருத்தம் செய் யப்பட்டுள்ள வரைவில் மாற் றப்பட்டுள்ளது.
அரேபியர்கள் என்பவர்கள் அரேபியாவிலிருந்துநாடோ டிகளாக திரிந்த பழங்குடியினர் என்றும், அவர்கள் புதிய மதத்துக்கு மாறினார்கள், மற்றவர்களின் கலாச்சாரத்துடன் போரிட்டார்கள் என்று பாடப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த பகுதிகளும் தற்போது நீக்கப் பட்டுள்ளன.
இந்து மதத்துக்கு எதி ரான கருத்துகளை நீக்க வேண்டும் என்று கோரி இந்து அமெரிக்க பவுன்டேஷன் எனும் அமைப்பு பிரச்சா ரத்தை செய்தது. தற்போது கலிபோர்னியாகல்விவாரி யம் செய்துள்ள மாற்றங்கள் தங்களுக்குதிருப்திஅளிக்க வில்லை என்று குறிப்பிட் டுள்ளது அவ்வமைப்பு.
இந்துமதத்தில்ஜாதி வேறுபாடுகள், ஏற்றத்தாழ்வு கள் ஆகியவை மிகுந்துமக் களைப்பிளவுபடுத்தியேவந் துள்ளதுபோன்றஜாதி குறித்த பகுதிகளைநீக்க வேண்டும்என்கிறஇந்து அமைப்புகளின்கோரிக்கை கலிபோர்னியாகல்விவாரியத் தால் நிராகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.