புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது.
சமீபகாலமாக இந்தியாவில் பத்திரி கையாளர்கள் சுதந்திரமாக செயல்படாத நிலை உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக தனக்கு எதிராக செயல்படும் பத்திரிகையாளர்களின் செய்கைகளையும், பல தொலைக்காட்சி ஊடகங்களையும் அரசு முடக்குவதாக பல தரப்பினரும் கூறி வருகின்றனர். இன்று வெளியான இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கத்தின் அறிக்கை அதை உறுதிப்படுத்துகிறது.
அந்த அறிக்கையில்,
‘‘பத்திரிகையாளர்கள்சுதந்திரமாக செயல்பட இயலாமல் அரசியல் சக்திகளும், பத்திரிகை உரிமையாளர் களும் நடந்து கொள்வதை இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. அரசை விமர்சித்து வரும் பல தொலைக்காட்சி ஊடகங்களுக்கு அரசு மிரட்டல் விடுத்து வருகிறது. ஒரு சில நேரங்களில் அந்த தொலைக்காட்சி ஊடகமானது முடக்கப்படுகிறது.
கடந்த சில நாள்களில் இரு மின் னணு ஊடகங்களைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர்கள் தங்களுடைய முதலாளிகள் அரசின் வற்புறுத்தலால் தங்களின் படைப்பை மாற்றுவதும் அல்லது முழுமையாக நீக்குவதுமாக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித் துள்ளனர். இது போன்ற சம்பவங்கள் குறித்து சங்கத்துக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
பத்திரிகையாளர் சங்கம் நடவடிக்கை எடுக்கும்
அரசின் இந்த போக்குக்கு சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. அரசு இதுபோல் நேரடியாகவோ அல் லது பத்திரிகை உரிமையாளர்கள் மூலமாகவோ பத்திரிகையாளர்களை மிரட்டுவதை நிறுத்த வேண்டும். பத்திரிகை சுதந்திரத்தை பாதிக்கும் எந்த செயலையும் அரசு செய்யக்கூடாது. அப்படி இல்லை எனில் சங்கம் சம் பந்தப்பட்ட அதிகாரிகள் அல்லது பத் திரிகை உரிமையாளர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும்.
அத்துடன் பத்திரிகையாளர்களை ஜாதி அல்லது மத அடிப்படையில் ஒரு சில பெரிய செய்தி நிறுவனங்கள் துன்புறுத்தி வருகின்றன. அத்துடன் அரசின் அதிகாரபூர்வமற்ற உத்தரவை ஒட்டி பல பத்திரிகையாளர்கள் மீது தேவையற்ற நடவடிக்கை எடுக்கப்படு கிறது. அது போன்ற நடவடிக்கைகளை சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
கல்வியாளரும்,புகைப்படக் கலை ஞருமான ஷாகிதுல் ஆலம் மீது வங்கதேச அரசு தேவையற்ற கைது நடவடிக்கை எடுத்துள்ளது. ஆலம் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கை தவறானது என சங்கம் கருதுகிறது. டாக்கா நகரில் அமைதியான முறையில் நடைபெற்ற இளைஞர்கள் மற்றும் பள்ளி சிறுவர்களின் போராட்டத்தை அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இது குற்றமில்லை. அவரை உடனடியாக விடுவிக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என சங்கம் கேட்டுக் கொள் கிறது'' எனத் தெரிவித்துள்ளது
அதானிக்கு ஆதரவாக...
இந்நிலையில், உச்சநீதிமன்றமானது அதானி குழுமம் ‘தி ஒயர்' என்ற ஊடக இணையதளத்தின் மீது கொடுத்த புகாரைத் தள்ளுபடி செய்துள்ளது. அதானிக்காக மத்திய அரசு செய்துதந்த வசதிகள் என்ற தலைப்பில் 7.6.2017 அன்று ‘தி ஒயர்' என்னும் செய்தி ஊடகம் பிரண்ஜாய் குகா என்னும் பொருளாதார நிபுணர் எழுதிய செய்திக் கட்டுரையை வெளியிட்டது. அதில் மத்திய அரசு சிறப்பு ஏற்றுமதி பகுதிக்கான விதிகளை அதானி நிறுவனங்களுக்காக மாற்றி அமைத்ததாகக் கூறி இருந்தது. மேலும் இதனால் அந்த நிறுவனம் உற்பத்திக்கான பொருட்கள் வாங்குவதில் முறைகேடு செய்து ரூ. 500 கோடி லாபம் ஈட்டியதாக அந்த செய்தியில் கூறப்பட்டது.
இந்த செய்திக்கு அதானி நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து நோட்டிஸ் அனுப் பியது. அதனால் அந்த செய்தியை ஊடகம் நீக்கியது. அதன் பிறகு அதே கட்டுரையை முதலில் வெளிவந்த ஊடகத்தின் அனுமதியுடன் ‘தி ஒயர்' மீண்டும் வெளியிட்டது. அதை ஒட்டி அதானி நிறுவனம் இதை எழுதிய பிரண்ஜாய் மற்றும் ‘தி ஒயர்' ஊடகம் ஆகியோரின் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் தீர்ப்பை கூடுதல் செஷன்ஸ் நீதிபதி என்.ஆர்.ஜோஷி வழங்கினார். அப்போது அவர் இந்த வழக்கு சரியான காரணம் இல்லாமல் தொடுக்கப்பட்டதாக தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.