அரசிடம் இடத்திற்கான அனுமதி முறையாக வாங்கப்படவில்லை
காங்கிரஸ் முன்னாள் எம்.பி மனந்திறக்கிறார்
புதுடில்லி, ஜூலை 22 அரித்துவாரில் திருவள்ளுவர் சிலையைத் திறந்திட முறைப் படி அரசு அனுமதி பெறப் படவில்லை என்கிறார் காங் கிரஸ் முன்னாள் எம்.பி. மாணிக்தாகூர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கைக்கரை யில் திருவள்ளுவர் சிலையை அமைக்க சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், அங்குள்ள பூங்காவில் சிலை கேட்பாரற்று கிடந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் முன்னாள் எம்.பி. மாணிக் தாகூர் கூறியதாவது:
சட்டரீதியான அனுமதி...
அரித்துவாரில் திருவள்ளு வர்சிலையைசரியானஇடத் தில் நிறுவ சட்டரீதியான அனுமதி எதுவும் பெறப்பட வில்லை. அதனால் தான் இப்போது பிரச்சினையை சந்தித்து வருகிறோம்.
அரித்துவாரில் உள்ளஹர் கிபுரி அனைவரும் புனித நீராடும் இடம். அந்த இடத் தில் யாருடைய சிலைக்கும் இடம் தர மாட்டார்கள். பா.ஜ.க. எம்.பி. தருண் விஜய் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். அவர் மாநில காங்கிரஸ் அரசையும்,உள் ளூர் நிர்வாகத்தையும்கலந்து ஆலோசிக்காமல் சிலையை வைக்க முயற்சி செய்தார். உத்தரகாண்ட், உத்தரபிர தேசம், மேகாலயா ஆளுநர் கள் திறப்பு விழாவில் பங் கேற்க தேதியை வாங்கி விட்டு அந்த தேதியில் திறந்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் செயல்பட் டிருக்கிறார்.
புனித நீராடும் இடம் என்று கூறி அந்த இடத்தை நிர்வகிக்கும் கங்கா சபா நிர் வாகத்தினர் சிலையை வைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதை யடுத்து சங்கராச்சாரியா சவுக் பகுதியில் சிலையை வைக்க முயற்சித்து உள்ள னர். ஆனால் அங்குவைக்க வும் சங்கராச்சாரியர் மடத் தில் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது.
பின்னர் உத்தர பிரதேச மாநிலத்துக்கு சொந்தமான பொதுப்பணித்துறை தங் கும் விடுதி வளாகத்தில் சிலை தற்காலிகமாகநிறுத் தப்பட்டு அவசர அவசர மாக திறக்கப்பட்டதுஎனி னும் இதற்கு அதிகாரப் பூர்வ அனுமதி வழங்கப்பட வில்லை. இதனால்உத்தர காண்ட் மாநிலபொதுப் பணித்துறை, மாவட்டநிர் வாகம் சிலையைபிளாஸ் டிக் பையால் மூடிவைத் திருந்தார்கள். இதுபற்றி அறிந்த நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க காங்கிரஸ் அகில இந்திய பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக், உத்தர காண்ட் முதலமைச்சர்ஹரிஷ் ராவத்தை தொடர்புகொண்டு கடந்த 19 ஆம் தேதி பேசி னார். அவர் உடனடியாக திருவள்ளுவர் சிலையை தகுந்த இடத்தில் வைக்க ஏற்பாடு செய்யுமாறு உத்தர விட்டார். இதையடுத்து சிலை பத்திரமாக இருக்க வேண்டும் என்று மேளா பவன் கட்டுப்பாட்டு அறை உள்ள வளாகத்திற்கு கொண்டு வைத்தனர்.
கங்கைக் கரையில் சிலை கள் வைக்க உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல் உள்ளது. அதன் அடிப்படையில் சட்ட சிக்கல் ஏதுமின்றி சிலையை வைக்க உத்தரகாண்ட் மாநிலத் தின் சட்டத்துறையின் ஆலோ சனையும் கோரப்பட்டுள்ளது. வீட்டு வசதி துறையின் செயலாளரையும் தொடர்பு கொண்டோம். அவர் 24 ஆம் தேதி அரித்துவாரில் எந்த இடத்தில் சிலையை நிறுவுவது என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதாக கூறினார்.
அதற்குள் மாநிலசட்டத் துறையும் உரிய சட்ட ஆலோ சனைகளை வழங்கும். எனவே இன்னும் ஒரு வாரத்துக்குள் திருவள்ளுவர் சிலை உரிய இடத்தில் வைக்கப்படும். நானும், முன்னாள்எம்.பி. விஸ்வநாதனும் இதற்கான முயற்சிகளை எடுத்து வருகி றோம் என்று குறிப்பிட்டார்.
ஆக காங்கிரஸ் முயற்சியில் திருவள்ளுவர் சிலை திறப்பு நடப்பதாகத் தெரிகிறது.