ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவிப்பு
சென்னை, நவ.24 பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர்களையும் விடுவிப்பதில் அலட்சியம் காட்டிவரும் ஆளுநரை எதிர்த்து, டிசம்பர் 3 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அறிவித்தார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் நாள், தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டியில்,கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் காயத் திரி, கோகிலவாணி, ஹேமலதா ஆகிய மூவரையும், உயிரோடு தீ வைத்துக் கொளுத்திய அண்ணா தி.மு.க. கொலை யாளிகள் மூவரை, சிறையில் இருந்து விடுதலை செய்ய அ.தி.மு.க. அரசு முயற்சி எடுத்ததால், மத்திய அரசின் எடுபிடி வேலை பார்க்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், விடுதலை செய்து இருக்கின்றார்.
2014 பிப்ரவரி 18 ஆம் நாள், இந்தியாவின்உச்சநீதிமன்றத்தலைமை நீதிபதி நீதியரசர் சதாசிவம் தலைமை யிலான அமர்வு, 3 பேர் மரண தண் டனையை ரத்து செய்து, வாழ்நாள் சிறைத்தண்டனையாக ஆக்கியதுடன், அவர்களை விடுதலை செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கலாம் என்று, சூசகமாகக் குறிப்பிட்டது.
அண்ணா தி.மு.கவினரை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றவும், அவர்களை விடுதலை செய்யவும் கருதித்தான், அன்றைய அண்ணா தி.மு.க. முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ஏழு பேரையும் விடுதலை செய்வதாக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். மத்திய அரசு அதனை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மனு போட் டது.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதியரசர் ரஞ்சன் கோகோய் அவர்கள், 2018 செப்டம்பர் 6 ஆம் நாள், ஏழு பேரையும் விடுதலை செய்யத் தமிழக அரசுக்கு உரிமை உண்டு எனத் தீர்ப்பு அளித்து இருக்கின்றார்.
கண்துடைப்புக்காக, செப்டம்பர் 9 ஆம் தேதி அதிமுக அரசு அமைச்சரவை, ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர் மானம் நிறைவேற்றி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கு அனுப்பி வைத்தது. ஆனால், ஏழு பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்ற நச்சு எண்ணத்துடன் தமிழக ஆளுநர் செயல்பட்டார். இதுகுறித்து மத்திய அரசின் கருத்தைக் கேட்டுக் கடிதம் எழுதினார்.
அவர்களை விடுதலை செய்யக்கூடாது என உள்துறை அமைச்சகம் கருதுவதாகக் கூறி, ஏழு பேர் விடுதலையைத் தடுத்து விட்டார். இது மிகப்பெரிய அநீதி ஆகும்.
அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவு, திட்டவட்டமான அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கி இருக்கின்ற நிலை யில், மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவை இல்லை.
அந்த ஏழு பேரையும் உடனடியாக விடுதலை செய்ய, மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி, இன்று (24.11.2018) காலை 10.30 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகே, ம.தி.மு.க. பொதுச்செய லாளர் வைகோ தலைமையில் அறப் போர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன், மே 17 இயக்கத் தலை வர் திருமுருகன் காந்தி, ம.தி.மு.க. பொருளாளர் ஈரோடு கணேசமூர்த்தி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்தியா, திருவள்ளூர் மாவட்ட செய லாளர் டி.ஆர்.செங்குட்டுவன், மணி வேந்தன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.
டிசம்பர் 3: ஆளுநர் மாளிகை முற்றுகை
இறுதியாக உரையாற்றிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டிசம்பர் 3 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை அறிவித்தார்.