Quantcast
Channel: headlines
Viewing all articles
Browse latest Browse all 1437

நீட் தேர்வின் கொடிய பரிசு'' இதுதானா?

$
0
0

தமிழ்நாடு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலத்தவர் 191 பேர்

தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேரே!

சென்னை, டிச.8- நீட் கூடவே கூடாது என்று திராவிடர் கழகம் உள்பட சமூகநீதி சக்திகள் போராடியது நியாயமே என்பதை நிரூபிக்கும் வகையில், தமிழ்நாட்டில் உள்ள 22 மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் 191 பேர்; தமிழ்நாட்டு மாணவர்கள் வெறும் 4 பேர் என்ற அதிர்ச்சித் தகவலை டெக்கான் கிரானிக்கல்' ஏடு புள்ளி விவரங் களுடன் வெளியிட்டுள்ளது.

"டெக்கான் கிரானிக்கல்'' கூறுகிறது

இது குறித்து டெக்கான் கிரானிக்கல் ஆங்கில நாளேட்டின் 07.12.2018 தேதி இதழில் வெளியிடப்பட்டுள்ள சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:-

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தால் வெளியிடப் பட்டுள்ள தகவலின்படி, தமிழக அரசுக்குச் சொந்தமான 22 மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நான்கே நான்கு மாணவர்களுக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைத்திருக்கும் பொழுது, திகைக்க வைக்கும் வகையில் வெளி மாநிலங்களில் கல்வி பயின்ற 191 மாணவர்களுக்கு மாநில ஒதுக்கீட்டின்கீழ் இடம் கிடைத்துள்ளது என்பது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களி லிருந்து ஒரே ஒரு மாணவர் மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இடம் கிடைத்திருக்கும் பொழுது, வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களில் 70 பேர் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். வகுப்பில் சேர்ந்துள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம்...

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்மூலம் பெறப் பட்ட தகவல்மூலம் இது தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சினை கடந்த ஆண்டும் மாநிலம் முழுவதும் பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. மருத்துவக் கல்லூரிகளில் "நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டதால் தமிழ்நாட்டின் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெளிமாநிலங்களைச் சேர்ந்த 422 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இவர்கள் வருவாய்த் துறையின் மூலம் பூர்வீகச் சான்றிதழ்களைப் பெற்று இந்தப் படிப்பில் சேர்ந்துள்ளனர். இவ்வாறு வெளி மாநில மாணவர்கள் அதிக அளவில் சேர்வதைக் குறைப்பதற்காக கடந்த ஆண்டு மருத்துவக் கல்வி இயக்குநரகம் ஒரு புதிய விதியை அறிமுகப்படுத்தியது. அதன்படி தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் பெற் றோரில் ஒருவர் தமிழகத்தில் படித்திருக்க வேண்டும் என்னும் அந்த விதியை அமல்படுத்தியதன் மூலம் இந்தஆண்டு வெளிமாநில மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு வரை வெளி மாநிலங் களில் பயிலும் மாணவர்கள், தமிழகத்தின் அரசு பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தின்கீழ் (ஸ்டேட் போர்டு) பயிலும் மாணவர்கள் மிக அதிகஅளவிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றதால் அவர்களுடன் போட்டி போடமுடியாமல் இருந்தனர். இதற்காக சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு ஓராண்டு 5 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட்டதாக சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட மேலாளர்   உயர்நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கூடஅளித்திருந்தார். ஆனால் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர், "நீட் தேர்வில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தின் படி மட்டுமே கேள்வி கேட்கப்படுவதால் வெளி மாநில மாணவர்கள் அதிக அளவில் "நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகின்றனர் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவ்வாறு பூர்வீகச் சான்றிதழ் வழங்கி மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் சேருவதற்குத் தடை விதிக்கக்கோரி தமிழக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. இதற்காக வெளிமாநில மாணவர்கள் வருவாய்த் துறை மூலம் பூர்வீகச் சான்றிதழ்களைச் சட்ட விரோதமாகப் பெற்று வருகின்றனர் என்றும் பெருமளவில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத்

இது பற்றி கூறியுள்ள சமூக நீதிக்கான மருத்துவர்கள் சங்கப் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், "சில நியாயமான வழக்குகள் உள்ளன. மத்திய அரசுப் பணிகளில் பணியாற்றிவரும் அலுவலர்கள் அடிக்கடி வெளிமாநிலங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களின் பூர்வீக உரிமைகள் மதிக்கப்படவேண்டும். ஆனால் பூர்வீகச் சான்றிதழ்கள் முறைகேடாகப் பயன் படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார். "தற்போது இந்த மாணவர்கள் மீது எந்தக் கட்டுப்பாடும் கிடையாது, நாங்கள் அரசிடம் எடுத்துக்கூறி, நமது மாநில மாணவர்களின் நலன்களைக் காப்பதற்கான விதிகளைக் கொண்டு வருவோம்என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இது பற்றி கூறுகையில், "தமிழக அரசு தமிழக மாநிலப் பாடத்தின்படி பயிலும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் தனியான இட ஒதுக்கீடு ஏற்பாடு செய்யவேண்டும். வெளிமாநில மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீடு, அவர்களுடைய சொந்த மாநில ஒதுக்கீடு போன்ற வேறு வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் தமிழக மாநிலப்பாடத்திட்டத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சம வாய்ப்புகள் வழங்கும் வகையில் சிறப்பு ஒதுக்கீடு அளிப்பதை உறுதி செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்தால்...

தமிழ்நாட்டில் உள்ள 22 அரசுமருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2447 எம்.பி.பி.எஸ். இடங்களில் 40 அளவிலான மாணவர்கள் தான் தமிழக அரசு மற்றும்  தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவர்களிலிருந்து சேர்ந்துள்ளனர். இதற்கிடையில் முந்தைய ஆண்டுகளில்  மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில் 1,277  மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் பயின்ற வர்களில் 611 பேருக்கு இடம் கிடைத்துள்ளது.

விதிகளின்படி, தமிழக அரசுமருத்துவக் கல்லூரிகளில் மாநிலஇட ஒதுக்கீட்டின்கீழ் இடம்பெறும் விண்ணப்ப தாரர்கள் தமிழ்நாட்டில் பிறந்தவர்களாக இருக்கவேண்டும், தமிழ்நாட்டில் 6 ஆம் வகுப்புமுதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் வசிப்பிடம் அல்லது பூர்வீகத்திற்கான சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. பகுதி அளவிலோ முழுமையாகவோ வெளி மாநிலங்களில் பயின்றமாணவர்கள் பூர்வீகச் சான்றிதழ் அளிக்க வேண்டும்.

இவ்வாறு டெக்கான்கிரானிக்கல் ஆங்கில நாளேட் டின் சிறப்புச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Viewing all articles
Browse latest Browse all 1437

Trending Articles