ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கேள்வி
சண்டிகர், டிச. 9 காஷ்மீரில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்', அளவுக்கு அதிகமாக அரசியல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ராணுவ அதி காரி டி.எஸ். ஹுடா கூறி உள்ளார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்பது தீவிரவாதிகளின் முகாம் களின் மீது ரகசிய தாக்குதல் நடத்தி அழிப்பது ஆகும். மனித உடலில் அறுவை சிகிச்சை நடத்துவது சர்ஜரி எனப்படும். இதுவும் அறுவை சிகிச்சையைப் போல் தீவிரவாதத்தைக் களைவதால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் என அழைக்கப்படுகிறது.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. இந்தத் தாக்குதல் அடுத்த நாள் வரை நீடித்தது. இதில் 7 பயங்கரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 40 பேர் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்தது.
மன்மோகன் சிங் அரசின் போதும், இதர அரசுகளின் போதும் இது போன்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் பலமுறை நடைபெற்றுள்ளது. அப்போது எந்த ஒரு விளம்பரமும் இது குறித்த அந்த அரசுகள் செய்ததில்லை. ஆனால் மோடி அரசு ராணுவத்தினர் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் விவகாரத்தை தன்னுடைய சொந்த கட்சி விளம்பரம்போல் பயன்படுத்தியது. உத்தரப்பிரதேச தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் பா.ஜ.க. கட்சி ராணுவத்தின் இந்த நடவடிக்கையை கூறி தன்னுடைய சொந்த ஆணையில் ராணுவம் இதை நடத்தியது போன்று பிரச்சாரம் செய்தது. பள்ளி கல்லூரிகளில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்துப் பேச வேண்டும் என்றும், இந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதியை சர்ஜிக்கல் ஸ்டிரைக் தினமாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்கள் அன்றைய தினம், என்.சி.சி அணி வகுப்பு, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை கொண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இந்த சுற்றறிக்கை சர்ச்சையை உண்டாக்கியது. நாட்டின் இராணுவத்தின் செயல்பாட்டை அரசியலாக்கும் நடவடிக்கை இது என விமர்சனங்கள் எழுந்தன. தன் னாட்சி அமைப்பான யூஜிசி இதுபோன்ற நடவடிக்கை களில் இறங்கியது கிடையாது என்று பலர் மோடி அரசின் மீது அதிருப்தி தெரிவித்திருந்தனர். சமீபத்தில் வாக்குப் பதிவு நடைபெற்று முடிந்த மத்தியப்பிரதேசம், ராஜஸ் தான், சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் மோடி பேசும் போது சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து அதிகம் பேசினார். தங்களது ஆட்சியில் நடைபெற்ற மாபெரும் நிகழ்வாக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இதற்கு கங்கிரஸ் தலை வர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். பாஜக தலைவர்கள் மற்றும் மோடியின் இந்தத் தொடர் பேச்சுகள் பொது மக்களிடையே பெரும் வெறுப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நிகழ்ந்த போது லெப்டி னெண்ட் ஜெனரலாக இருந்த, ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற டி.எஸ். ஹுடா சண்டிகரில் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர், "சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து ஆரம்பத்தில் பல சந்தேகங்கள் எழுந்தன. அது இயற்கையான ஒன்றாகும். இந்த நடவடிக்கை ரகசியமாக வைக்கப்பட்டதால் முழு வெற்றி அடைந்தது. ஆனால் அந்த நடவடிக்கை மிக அதிகமாக மிகைப்படுத்தப்பட் டுள்ளது. சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்பது எந்த அளவுக்கு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது என்பது இப்போது நன்கு புரிகிறது. இவ்வாறு அரசியலாக்கப்படுவது சரியா தவறா என நான் கூற முடியாது. அதை அவ்வாறு அரசியலாக்கிய அரசியல்வாதிகளிடம் கேட்க வேண்டும்" எனத் தெரிவித் துள்ளார்.
சர்ஜிக்கல் ஸ்டிரைக் என்றால் என்ன?
சர்வதேச எல்லை தாண்டி ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவு நடத்தும் ஒரு 'சர்ப்பிரைஸ்' தாக்குதலுக்குப் பெயர் தான் சர்ஜிக்கல் ஸ்டிரைக். தீவிர பயிற்சிக்கு உட்படுத்தப்பட்ட ராணுவ கமாண்டோக்கள் தான் பெரும்பாலும் இந்தத் தாக்குதலில் ஈடுபடுவார்கள். தாக்குதல் நடத்த இந்த கமாண்டோ படை 365 நாட்களும் தயாராக இருக்கும். அதி நவீன ஆயுதங்களை கையாளு வதில் இவர்கள் திறமை வாய்ந்தவர்கள். அடர்ந்த காட்டுப்பகுதியின் இருட்டுக்குள் ஊடுருவ உதவும் அனைத்து நவீன உபகரணங்களும் இவர்களிடம் இருக்கும். எதிர்பாராத ஆபத்துக்களை சாதுர்யமாகக் கையாளும் திறன் படைத்திருக்கும்.
ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் தான் தாக்குதல் நடத்துவது பற்றி இந்திய அரசின் உயர்மட்டக் குழுவுடன் பாதுகாப்பு ஆலோசகர்கள் குழு முடிவு எடுக்கும். உடனடியாக தாக்குதல் குழு அழைக்கப்படும். தாக்க வேண்டிய இலக்கு எங்கிருக்கிறது, அதன் வரை படம், எத்தனை பேர், எவ்வளவு நேரம் போன்ற தக வல்கள் அவர்களுக்குக் கொடுக்கப்படும். அதை வைத்து அதிவேகமாக தாக்குதலை செயல்படுத்துவது பற்றி திட்டமிடப்படும். அதிகாலையில் தான் இந்த ஸ்டிரைக் நடக்கும். உயர்மட்டக் குழு இதனை உன்னிப்பாக கவனிக்கும். எல்லைத் தாண்டிய தாக்குதல் என்பதால், போர் சூழல் எழும் ஆபத்து உள்ளது. இதனால் இந்த உயர்மட்டக் குழு மிக கவனமாக இருக்கும்.
போர் விமானம் மூலம் பாராசூட்டிலோ அல்லது ஹெலிகாப்டர் மூலமோ எல்லையில் வீரர்கள் இறக்கி விடப்படுவார்கள். எதிர்நாட்டு எல்லைக்குள், ஏற்கெ னவே போடப்பட்ட திட்டப்படி இலக்கை நோக்கி அணிகளாகப் பிரிந்து முன்னேறுவார்கள். பாதையில்லாத கடுமையான காட்டுப்பகுதிகளில் 7 கிலோமீட்டர்களை இரண்டு மணி நேரத்தில் கடக்கும் அளவுக்கு இவர்களின் வேகம் இருக்கும். தாங்கள் சென்ற தாக்குதல் முடிந்த பிறகுகுறிப்பிட்ட நேரத்திற்குள் தங்கள் நாட்டு எல்லைக் குள் திரும்பிவிடுவார்கள். இந்தத் தாக்குதல் நாட்டு பாதுகாப்புக்காக முன்னெடுக்கப்படும் தற்காப்பு ஆகும். இவ்வாறு ராணுவமும் முக்கிய பாதுகாப்பு அதிகாரிகளும் எடுத்த முடிவை மோடி தானே முன்னின்று நடத்தியது போல் விளம்பரம் செய்து வருவதை ஓய்வு பெற்ற உயர் ராணுவ அதிகாரியே கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.